ஹிஜ்ரி 1441.04.25 (2019.12.23) 

2019.12 (இம்மாதம்) 26 ஆம் திகதி வியாழக்கிழமை இன்ஷா அல்லாஹ் வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இச்சூரிய கிரகணம் இலங்கையில் பல பாகங்களில் பகுதி கிரகணமாகத் தென்படும் அதேவேளை சில மாவட்டங்களில் சில நிமிடங்கள் வலைய கிரகணமாகவும் தென்படும்.

மேலும் கொழும்பு நேரப்படி காலை 08:10 மணிக்கு பகுதி கிரகணம் ஆரம்பமாகி, காலை 11:24 மணியுடன் கிரகணம் நீங்கி, சூரியன் வழமையான நிலைக்குத் திரும்பி விடும் எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)

கிரகணம் தென்படும் போது இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து நடக்குமாறு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக் கொள்கிறது.  மேலும், சூரியன் முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதி மறைவதை ஒருவர் நேரில் காணும்போது அல்லது பலரும் கண்டதாக அறிவிக்கும் போது கிரகணத் தொழுகையில் ஈடுபடுமாறு பொதுமக்களைப் பிறைக் குழு வேண்டிக் கொள்கிறது.

கிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஸுன்னதாகும். ஆகவே இதனைக்  கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிவாசல் நிருவாகிகளையும் ஆலிம்களையும் பிறைக் குழு கேட்டுக் கொள்கிறது. 

 

 

…………………………………

அஷ்-ஷைக் எம். அப்துல் வஹாப் 

பிறைக் குழு இணைப்பாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

புத்த சாசனா, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கௌரவ பந்துல ஹரிச்சந்திர அவர்கள் 19.12.2019 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், சமூக சார் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 

 

 

17.12.2019-19.04.1441

நாட்டில் காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் திட்டத்தை ஜம்இய்யா வரவேற்கின்றது

நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரின் பாராட்டுக்களுக்கு மத்தியில் நாட்டில் ஆங்கங்கே காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் பணிகளை அரச மற்றும்  தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட தனி நபர்களும் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் சித்திரங்களை வரைந்து மெருகூட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்திட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கின்றது.

இச்சித்திர வேலைப்பாடுகள் நாட்டின் அபிவிருத்தி, நன்னடத்தைக்கான வழிகாட்டல், போன்ற விடயங்களை உள்ளடக்கும் வண்ணம் அமைவதே இன்றைய தேவையாகும். நம் நாட்டு ஓவியர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் சகல இன மக்களும் விஷேடமாக அனைத்து வாலிபர்களும் ஒத்துழைப்பதன் மூலம்   நம் நாட்டில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை  கண்டு கொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம்கள் தத்தம் பிரதேசங்களில் உள்ள வெற்றுச் சுவர்களை அடையாளப்படுத்தி இஸ்லாமிய வரயறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஜம்இய்யாவின் கிளைகளும், மஸ்ஜித் நிருவாகமும், ஊர் தலைவர்களும் கரிசனை  செலுத்துமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி புத்தளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

 

1) தலைவர்

அஷ்-ஷேக் அப்துள்ளாஹ்

2) செயலாளர்

அஷ்-ஷேக் அப்துர்ரஷீத்

3) பொருளாளர்

அஷ்-ஷேக் பைஸல் முனீர்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் தமீம்

2- அஷ்-ஷேக் சியாம்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் மிஹ்ழார்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி கண்டல்குடா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

 

1) தலைவர்

அஷ்-ஷேக் ஜமீல்கான்

2) செயலாளர்

அஷ்-ஷேக் முபாஸில்

3) பொருளாளர்

அஷ்-ஷேக் ஹபீப் ரஹ்மான்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் அப்துல் ரஷீத்

2- அஷ்-ஷேக் இபாதுல்லாஹ்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் பஸீல்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் புத்தளம் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி புத்தளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

1) தலைவர்

அஷ்-ஷேக் ரியாஸ்

2) செயலாளர்

அஷ்-ஷேக் பைஸுர்ரஹ்மான்

3) பொருளாளர்

அஷ்-ஷேக் முஹ்ஸின்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் அப்துல் கஹ்ஹார்

2- அஷ்-ஷேக் மின்ஹாஜ்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் அப்துல் ஹமீத்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் மதுரங்குழி கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி மதுரங்குழி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
 
தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்
1) தலைவர்
அஷ்-ஷேக் அப்பாஸ்
2) செயலாளர்
அஷ்-ஷேக் மிஹ்ழார்
3) பொருளாளர்
அஷ்-ஷேக் பைஸல் முனீர்
4) உப தலைவர்கள்
1- அஷ்-ஷேக் பஸ்லுல் பாரிஸ்
2- அஷ்-ஷேக் ரிஸ்வி கான்
5) உப செயலாளர்
அஷ்-ஷேக் ஸப்ராஸ்
 
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்ல கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி கொட்டராமுல்ல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

1) தலைவர்

அஷ்-ஷேக் சியாம்

2) செயலாளர்

அஷ்-ஷேக் ரிஸ்மி

3) பொருளாளர்

அஷ்-ஷேக் அம்ஜத்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் சல்மான் நவவி

2- அஷ்-ஷேக் நஸுறுத்தீன்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் ஷபீக்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் மதவாக்குளம் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி மதவாக்குளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

1) தலைவர்

அஷ்-ஷேக் றிஸ்வி ஷரபி

2) செயலாளர்

அஷ்-ஷேக் பௌசுல் அமீர் முஅய்யிதீ

3) பொருளாளர்

அஷ்-ஷேக் பாரிஸ் பக்ரி

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் சனூஸ் மனாரி

2- அஷ்-ஷேக் நஸீம் ஷரபி

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் சியாம் ரவாஹி

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

29.11.2019 / 01.04.1441


பரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள்


02.12.2019 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகின்றது. பரீட்சைக்கு தேற்றுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் கொடுத்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், நாட்டின் தலை சிறந்த கல்விமான்களாக உருவாவதற்கும் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.


நமது மாணவர்கள் பரீட்சையில் ஈடுபடும் இத்தருணத்தில் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கிக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


குத்பாக்கள் நீண்டு விடுவதனால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். சென்ற காலங்களில் பரீட்சை எழுதும் நிலையங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் நீண்ட தூரம் உள்ள இடங்களில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டி இருந்தது.


எனவே பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி கதீப்மார்கள் தம் குத்பா பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறும், பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் உதவியாக இருந்து சிறந்த பெறுபேருகளை பெற வழி செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலா வேண்டிக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா