03.11.2015 / 20.01.1437
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
நாட்டின் கால நிலை சீரடைய பிரார்த்திப்போம்
தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் ஜம்இய்யாவின் பிராந்திய கிளைகள், பள்ளிநிர்வாகிகள் சம்மேளனங்கள், நலன் விரும்பிகள் அனைவரும் தம்மாலான இயன்ற உதவி, ஒத்தாசைகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக்குழு அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.
பாதிப்படைந்தவர்கள் இயல்பு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், தேவையை விட மழை அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.
اللهُمَّ حَوالينَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ – صحيح مسلم
அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அல்-பாஸி
செயலாளர் – சமூக சேவைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.11.2015 (21.01.1437)
மூத்த ஆலிம்களின் விபரங்களை திரட்டுதல்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
63 வயதைத் தாண்டிய ஆலிம்களின் விபரங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திரட்டிக் கொண்டிருக்கின்றது. பல ஆலிம்களின் விபரங்கள் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளிலிருந்து எமக்கு வந்து சேர்ந்துள்ளன.
எனவே இதுவரை 63 வயதைத் தாண்டிய ஆலிம்களில் எவர்களுடைய விபரங்கள் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அனுப்பப்படவில்லையோ அவர்கள் அவசரமாக தமது பிரதேசக் கிளைகளைத் தொடர்பு கொண்டு எதிர்வரும் 25.11.2015ம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கச் செய்யூமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றௌம்.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ளவும்.
அஷ்ஷைக் என்.எம். சிராஜ் 0117-490490 / 0773-671159
அஷ்ஷைக் கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி)
செயலாளர்- ஆலிம்கள் விவகாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
18.03.2016 (08.06.1437)
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்
இந்நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக பயிர்பச்சைகள் நாசமாகியும் தேவையான தண்ணீர் இல்லாமலும் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.
அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். எமது பாவகாங்கள் காரணமாக அல்லாஹ்வின் தண்டனை மற்றும் கோபப்பார்வை ஏற்படலாம்.
தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஒதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருள்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையூம் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மழை தேடி ஓதிய சில துஆக்கள்:
" اللَّهُمَّ اسْقِنا غيثًا مغيثًا مريئًا مريعًا نافعاً غَيْرَ ضارٌ، عاجِلاً غَيْرَ آجِلٍ" - رواه أبو داود (1169)
" اللهم أغثنا ، اللهم أغثنا ، اللهم أغثنا - " رواه مسلم (897)
" اللهم اسق عبادك ، وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت - "رواه أبو داود (1176)
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளார்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான தொகுப்பு
அனர்த்தங்களின் போது அல்லாஹ்வின் பக்கம் மீளுவோம்;!
01.நல்லவர்களுக்கு இது ஒரு சோதனை.
02.பாவிகளுக்கு இது ஒரு தண்டனை.
03.பாதிக்கப்படாதவர்களுக்கு இது ஒரு படிப்பினை.
وَتُوبُوا إِلَى اللَّـهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ - النور: ٣١
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ - هود: ٣
أَن لَّا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ, فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ - الأنبياء : ٨٧/ ٨٨
நபியவர்களும் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவார்கள்.
அல்லாஹ்வுக்காக செலவழிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள் என அல்லாஹ் கேட்கின்றான்.
(குறிப்பு: நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பே அவர்களிடம் சோதனைகளில் சிக்குண்டவர்களுக்கு உதவும் பண்பு இருந்துள்ளது.)
صحيح البخاري > كِتَاب : الْحَوَالَاتِ > بَاب : جِوَارِ أَبِي بَكْرٍ فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَعَقْدِهِ
இது போன்ற பண்புகள் ஸஹாபாக்களிடம் பரவலாக காணப்பட்டன. அவர்கள் கஷ்டமான நிலைமைகளிலும் கூட மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருந்தார்கள். அபு அகீல் அவர்கள் தான் சம்பாதித்ததை தர்மம் செய்த சம்பவம்.
இறுதியாக தௌபா> இஸ்திஃபார், துஆக்களின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் ஸதகாக்கள் மூலமாகவும் அல்லாஹ்வினுடைய கோபப்பார்வையில் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
29.08.2016 / 25.11.1437
இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு சுன்னத்தாகும். அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது ஜீவ காருண்யத்தை ஏவுகிறது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
எனவே, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் ஒருவர் உழ்ஹிய்யாவுக்கான பிராணிகள் மீது கருணையோடு நடந்துகொள்ள வேண்டும். இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களையும் அடைந்து கொள்ள முடியும். அல்லாஹு தஆலா திருமறையில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:
1. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக் கொள்ளவேண்டும்.
2. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
3. உழ்ஹிய்யாவுக்கான பிராணியின் முன்னிலையில் ஏனைய பிராணிகளை அறுப்பது தவிர்க்கப்படவேண்டும்.
4. அறுப்பதற்காப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
5. குர்பானி நிறைவேற்றப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
6. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களையும் புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
7. நம் நாட்டில் அறுவைக்கென்று ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தை இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற்கொள்ளல் வேண்டும். (மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்)
8. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
9. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்துகொள்ளக் கூடாது.
10. போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்த வேண்டும்.
11. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் படங்களை அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
12. உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச பள்ளிவாசல்கள் அல்லது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது சிறப்புடையது.
பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பிற மத சகோதரர்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறு மஸ்ஜித் நிரவாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்ப்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய ஒரு கையோடு ஜம்இய்யாவின் இணையதளமான www.acju.lk இல் காணப்படுகின்றது. அதனை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக்கொள்கிறது.
உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு
கடந்த 2016.08.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் முஹ்ஸின் அத்-துர்க்கி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்துக்கு வருகை தந்தார்.
இவ்வருகையின் போது இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் இந்நாட்டில் சகவாழ்வை கட்டியெமுப்ப ஜம்இய்யா நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். அத்துடன் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அவர்கள் தமது உரையை நிகழ்த்தினார்கள். அதில் அவர் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவரினால் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
இறுதியாக அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள். மேற்படி நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
04.06.2016 (27.08.1437)
ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்!
அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் நீங்கி வழமையான வாழ்வுக்குத் திரும்பவும், நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.
ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் ஆலோசனைகளும் பின்வருமாறு:
• அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.
• இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ந்து கொள்ளல்.
• கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.
• ஆடம்பர இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து ஏழைகளையும் தேவையுடையோரையும் அடையாளம் கண்டு ஸக்காத் மற்றும் சதகா போன்றவற்றை வழங்கி உதவி செய்தல். குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இனங்கண்டு தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் அவர்களுக்கு உதவி செய்தல்.
• ஏழைகளுக்கு ஸஹ்ர் மற்றும் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்தல்.
• இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றௌரும் பொறுப்புவாய்ந்தவர்களும் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.
• இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கி சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.
• ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்த்தாதிருத்தல்.
• உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.
• பெண்கள் தொழுகைக்காக வெளியில் செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
• மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.
• மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.
எனவே, இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிராh;த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
ஊடக அறிக்கை
2016.07.25
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டமும் நேற்று 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி பெரிய ஜும்ஆ (கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்களான தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
காலை 10:00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்கவுளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இம்மாநாடு நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையும் பெருமனதோடு வரவேற்பதாகவும் கூறினார்.
அதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய சமூக சேவைகளை மிகவும் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவு செலவுகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவுக்குட்பட்ட பலரையும் நினைவு கூர்ந்து, வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வுகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாகரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியுரையினை வழங்கினார்.
ஐந்நூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையுடனும் பகல் போசனத்துடனும் நிறைவுபெற்றது.
பகல் போசன இடைவேளைக்குப் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவைத் தெரிவு செய்யும் மத்திய சபையின் அமர்வு பள்ளியின் முதலாம் மாடியில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தமது சிற்றுரைகளை வழங்கி தமது பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய யாப்பின் பிரகாரம் தற்காலிகத் தலைவராக அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறித்த தெரிவும் பதவி தாங்குனர்களின் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதே வேளை தற்காலிகத் தலைவருக்கு உதவியாளர்களாக அஷ்- ஷைக் ஏ.எல்.எம் ரிழா மற்றும் அஷ்- ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தெரிவின் போது புதிய நிறைவேற்றுக் குழுவில் பின்வருவோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி கௌரவ தலைவர்
2) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் கௌரவ செயலாளர்
3) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். அகார் முஹம்மத் கௌரவ பிரதித் தலைவர்
4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் கௌரவ பொருளாளர்
5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக் கௌரவ உப தலைவர்
6) அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப் கௌரவ உப தலைவர்
7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா கௌரவ உப தலைவர்
8) அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா கௌரவ உப தலைவர்
9) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம் கௌரவ உப தலைவர்
10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் கௌரவ உப செயலாளர்
11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முh;ஷித் கௌரவ உப செயலாளர்
12) அஷ்-ஷைக் எம்.கே அப்துh;றஹ்மான் கௌரவ உப பொருளாளர்
13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன் கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பா;; கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்; கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில் கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்; கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் அர்கம் நூறமித் கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில் கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார் கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத் கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான் கௌரவ உறுப்பினர்
25) அஷ்-ஷைக் எஸ்.எச் ஸறூக் கௌரவ உறுப்பினர்
அல்லாஹுதஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக்கொள்வானாக!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2015-10-21 (1437-01-07)
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காக பிரார்த்தனை செய்வோம்
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்து விட்டன. சர்வதேச அமைப்புகள் ஜக்கிய நாட்டுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் காலாகாலம் கூட்டங்கள் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும் அவை செயற்படுவதாகத் தெரியவில்லை.
புனித பூமியை ஆக்கிரமித்துள்ள யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவின் கீழ் பகுதியில் சுரங்கம் அமைத்தும் பலஸ்தீன அப்பாவி மக்களுக்கு கொடூரமான அநியாயங்களை செய்தும் வருகின்றனர். தற்போது அளவு கடந்து சிறுவர்கள் என்று கூட பாராது அவர்கள் செய்யும் அநியாயங்களும் கொடுமைகளும் மனித உள்ளங்கள் தாங்காதவையாகும்.
இஸ்ரேல் என்ற இடமே இல்லாதிருந்த வேளையில் பலஸ்தீனத்திற்குள் வந்து செல்வதற்காக அனுமதி பெற்று அங்கே நுழைந்த யூதர்கள் அப் புனித பூமியை ஆக்கிரமித்தும் பலஸ்தீன மக்களுக்கு கொடுமைகளும் செய்து வருகின்றனர். நாட்டின் எல்லைகளைப் பிடித்து மக்களை அடக்கி முழு உலக முஸ்லிம்களதும் புனித சொத்தான மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்ததோடு அவர்கள் விரும்பியவாறு அதை மூடிவிடவும் செய்கின்றனர்.
இதனை எதிர் கொண்டு போராடும் பலஸ்தீன மக்களது வெற்றிக்காகவூம் மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காகவும் சகல முஸ்லிம்களும் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
விசேடமாக எதிர்வரும் முஹர்ரம் பிறை 09, 10 ஆகிய தினங்களில் தாஸஷுஆ, ஆஷஷுரா நோன்புகள் நோற்கும் அனைத்து மக்களும் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2016.07.26 /1437.10.21
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்தப் பொதுக் கூட்டம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனா;களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பெரிய ஜும்ஆ(கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும்இ 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனா;கள் இப்பொதுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா;.
காலை 10:00 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்வூகளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இப்பொதுக்கூட்டம் நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவூம் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையூம் பெருமனதோடு வரவேற்பதாகவூம் கூறினார்;.
அதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய மற்றும் சமூக சேவைகளை மிகவூம் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தாகிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியூடன் நினைவூ கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவூ செலவூகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவூக்குட்பட்ட பலரையூம் நினைவூ கூர்ந்துஇ வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வூகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியூம் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியூரையினை வழங்கினார்.
தொடர்ந்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இப்பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் ஏழு தீர்மானங்களும் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்களால் வாசிக்கப்பட்டது.
1) எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன நல்லிணக்கத்துடன் வாழும் நிலையில்இ சில இனவாத சக்திகளின் செயற்பாடுகள் பொதுவாக நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறியூள்ளன. பொதுவாக நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கும் உணர்வூகளுக்கும் அரசும் அரச அதிகாரிகளும் மதிப்பளித்து இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆவன செய்யூமாறு இம்மாநாடு அரசை வேண்டிக்கொள்கிறது.
2) இந்நாட்டில் வாழும் சகல இனங்கள் மத்தியிலும் சகவாழ்வையூம் நல்லிணக்கத்தையூம் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இம்மாநாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. அதேபோன்று எந்த ஒரு நிந்தனையான பேச்சையூம் அரசு அனுமதிக்கக் கூடாதெனவூம் அதனைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை அரசு அவசரமாக இயற்ற வேண்டும் எனவூம் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3) நம்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையூம் சகவாழ்வையூம் கட்டியெழுப்பும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேதகு ஜனாதிபதி அவர்கள் சமயங்களுக்கிடையிலான ஓர் உயர் ஆலோசனைச் சபையை நியமித்துள்ளதை இம்மாநாடு வரவேற்பதோடு சபையின் பணிகள் எல்லா வகையிலும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றது.
4) ஐ. எஸ் இயக்கம் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான இயக்கம் என்றும் அவ்வியக்கம் போன்றவற்றின் தீவிரவாத செயற்பாடுகள் அனைத்தையூம் இம்மாநாடு முற்றிலும் நிராகரிப்பதோடுஇ அவற்றின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் இஸ்லாமிய போதனைகளுக்கு உட்பட்டதல்ல என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. மேலும் உலக மட்டத்தில் இவ்வியக்கத்தையூம் அதன் செயற்பாடுகளையூம் அதன் ஆரம்ப காலத்திலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டித்தது என்பதையூம் இம்மாநாடு இங்கு நினைவூபடுத்த விரும்புகின்றது.
5) சமூகத்தின் நலனையூம் அதன் ஸ்திரப்பாட்டையூம் கருத்திற் கொண்டு தஃவாப் பணியில் ஈடுபடும் ஆலிம்களும்இ ஏனைய தஃவாப் பணியாளர்களும் கருத்து வேற்றுமைகளைப் புறந்தள்ளிஇ பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும்இ எப்போதும் பிறர் இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொள்ளாதிருக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவூம் இம்மாநாடு சகலரையூம் கேட்டுக் கொள்கிறது.
6) நீண்ட காலமாக அரச பாடசாலைகளில் அறபுஇ இஸ்லாம் பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படாதிருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் புதிதாக அறபுஇ இஸ்லாம் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறும்இ அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது மத்ரசாக்களினால் வழங்கப்பட்ட மௌலவிஇ அஷ்-ஷைக் சான்றிதழை ஒரு முக்கிய தகைமையாகக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களையூம் கல்வி அமைச்சரையூம் கல்வி உயர் அதிகாரிகளையூம் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7) கதீப்மார்கள் தமது குத்பாக்களை வினைத்திறன்மிக்கதாகவூம் சமூக நல்லிணக்கத்தைத் தூண்டும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவூம் உரிய நேரத்தில் குத்பாக்களை முடித்துக் கொள்ள வேண்டுமெனவூம் இம்மாநாடு அனைத்து கதீப்மார்களையூம் கேட்டுக் கொள்கிறது.
மேற்படி தீர்மானங்களை மக்கள் மயப்படுத்துவதிலும் உரியவர்களிடம் சென்றடையச் செய்வதிலும் ஜம்இய்யாவின் கிளைகள்இ ஆலிம்கள்இ மஸ்ஜித் நிர்வாகிகள்இ துறைசார்ந்தோர் போன்ற சகலரையூம் ஈடுபடுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
நாணூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வூ பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையூடனும் பகல் போசனத்துடனும் நிறைவூபெற்றது.
வஸ்ஸலாம்
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.