04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மினுவங்கொட கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூகொட கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் பூகொட  ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், பிரதேச செயலாளர்,  நாரம்மல பொலிஸ் நிலைய பொலிஸ் உயர் அதிகாரி, பிரதேசக்கிளை உலமாக்கள், ஊர் மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள், பாதர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

04.02.2020 ஆம் திகதி இலங்கை சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு மிகவும் விமர்சையாக நீர் கொழும்பு   பெரிய பள்ளிவாசல் முன் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக நீர்கொழும்பு மாநகர சபை மேயர் தயான் லான்ஸா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உலமாக்கள்,புத்திஜீவிகள்,வாலிபர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2020.02.04

 

நம் நாடு ஸ்ரீலங்காவின் 72வது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். வருடாந்தம் நாம் நினைவு கூர்ந்து மகிழும் சுதந்திர தினம் எமக்கு கடந்தகால நிகழ்வுகளை கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது.

சுதந்திரத்தை பெறுவதற்காக பல்லினத்தையும் சேர்ந்த நம் மூதாதையர்கள் உழைத்தனர். இன, மத வேறுபாடின்றி சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது குறிக்கோளாக காணப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்டனர்.

அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த எல்லா அரசாங்கங்களிலும் பங்காளிகளாக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எல்லா அபிவிருத்திகளிலும் பங்கு கொண்டனர் என்பதே உண்மையான வரலாறாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பெற்றுத் தந்த இச்சுதந்திர பூமியில் வன் செயல்கள் நிகழ்வதை, மத நிந்தனை செய்யப்படுவதை இந்நாட்டு எந்தப் பிரஜையும் அனுமதிக்க முடியாது.

அந்த வகையில் புதிய ஜனாதிபதியின் கீழ் இக்குறிக்கோள்கள் மேலும் வலுப்பெற வேண்டுமென ஆசிக்கிறோம். ஜனாதிபதியின் அக்கிராஷன உரையில் கூறியது போன்று அவர் இந்நாட்டு சகல பிரஜைகளினதும் ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்ட நல்லருள் பாலிக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

சகல சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்பட பாடுபடுவோம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம் நாடு சகல வளமும் பெற்று சுதந்திர இலங்கையாக மிளிரப் பிரார்த்திக்கின்றது.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

29.01.2020 / 03.06.1441

 

உலகளாவிய ரீதியில் மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸினால் சீனா உட்பட பல நாடுகளில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன்  இதுவரை சிலர் உயிர் இழந்துள்ளார்கள். மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை   தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள்  விரைவில் குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

இது போன்ற சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளிலும், நற்காரியங்களிலும் ஈடுபடுமாறும், தற்போது நிலவும் அசாதாரண நிலை நீங்கி பாதிக்கப்பட்ட நாடுகள் தமது வழமைக்குத் திரும்புவதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் வீணான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதானது வீண் பிரச்சினைகளை தோற்றுவிக்கவும், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் காரணமாக அமைகின்றன. எனவே, இவ்வாறன விடயங்களில் இருந்து தவிர்ந்து நடந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறது.

 

மேலும், மக்களின் நலனுக்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடைபிடிப்பதுடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோய் இருக்கின்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்” என்று சொல்ல கேட்டேன் என கூறினார்கள்.  (புஹாரி 5729)

 

மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த பின்வரும் துஆவை நாம் அதிகமாக ஓதி வரவேண்டும்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

பொருள் : யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (அபூதாவூத் 1554)

 

எனவே, இவ்வாறான நோய்கள், அனர்த்தங்கள் போன்ற சோதனைகளில் இருந்து அல்லாஹுதஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

ஆமீன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாறக்

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா