கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  தலைமை காரியாலத்திற்கு இன்று திங்கட்கிழமை (27-02-2017) அன்று  கட்டார் நாட்டை சேர்ந்த சமூக சேவை குழுவொன்று வருகை தந்திருந்தது.

இந்த வருகையின் போது அந்த குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் - ஷைக் எம்.எம்.ஏ  முபாரக் அவர்களை சந்தித்து பேசியது.  இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களுக்கு விபரிக்கப்ட்டது.