2017.04.07 / 1438.07.09

சமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவோம்!

இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த சில காலங்களாக பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இதன் தொடராகவே விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினையும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இம்மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண பலரும் தமது பங்களிப்பினை செய்து வருகின்றனர். இவர்களுடன் ஒத்துழைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள 2017.04.01 ஆம் திகதி அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசியல் சார்பற்ற ஒரு சபை என்பதால் கடந்த காலங்களில் சமூக பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அனைவருடனும் ஒத்துழைப்புடன் பக்கச் சார்பின்றி நடுநிலையாக செயற்பட்டது போன்றே இவ்விடயத்திலும் செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் சமய, அரசியல், சிவில் அமைப்புகளும் இயக்கங்களும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அருள்பாலிப்பானாக.
வஸ்ஸலாம்.


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2017.04.05 / 1438.07.07

இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்!

ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும்.
عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ
(رواه البخاري)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விடயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.

2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6412)

இவ்வகையில் இந்த இரு அருட் செல்வங்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறி விடுவதால் பெரும்பாலான மனிதர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.

தற்போது ஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. தொடராக நான்கு மாதங்கள் பாடசாலை சென்று வந்த நம் பிள்ளைகள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் அவர்களை அழைத்துக்கொண்டு விடுமுறையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர்.

பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸலாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.

ஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவுரை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கப்பட்ட காலம் முதல் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஷரீஆவின் வரையறைக்குள் நின்று நளினத்தன்மையையும் நடுநிலைமையான போக்கையும் கடைபிடித்து மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்துள்ளது.
கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் இதற்கு அடிப்படையாக காணப்படுகின்றது:
அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:18)

மேலும், பின்வரும் ஹதீஸும் இதற்கு அடிப்படையாக அமைகின்றது:
'இலகுவாக்குங்கள்;, சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்;. வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி)

இன்னுமோர் இடத்தில் 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்;. நற்செய்தியையே சொல்லுங்கள்;. காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி)

இஸ்லாத்தின் போதனைகள் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துபவையல்ல என மக்களுக்கு எடுத்துக் காட்டுவது மார்க்க அறிஞர்களது கடமையாகும். ஏனெனில் உலமாக்களைப் பற்றி இஸ்லாம் கூறும் பொழுது அவர்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் அல்குர்ஆன் உலமாக்களுக்கு பின்வரும் வரையறையையும் விதித்துள்ளது.

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி) யுள்ளவற்றை, ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 5:87)

மேற்கூறப்பட்ட வசனத்தின் அடிப்படையில் ஹலாலாக்கப்பட்ட ஒன்றை ஹராமாக்கவோ, ஹராமாக்கப்பட்ட ஒன்றை ஹலாலாக்கவோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு முடியாது.

துரதிஷ்டவசமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் 'முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தற்போதைய நிலையில் பூர்த்தியானதாகவே உள்ளது' என்று கூறிய விடயம் தவறான முறையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

எமது முன்னோர்கள் இந்த சட்டத்தை இயற்றும் போது பல சிரமங்களை மேற்கொண்டு ஓரளவு பூர்த்தியான நிலைக்கு அதனைக் கொண்டுவந்துள்ளனர், அது அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும் என்பதே உண்மையில் அவர் கூற முற்பட்ட விடயமாகும். இது இன்றைய நிலையில் இச்சட்டத்திற்கு மாற்றங்கள் அவசியமில்லை என்பதை குறிக்காது. குறிப்பாக இது காழி நீதிமன்ற நிர்வாக முறையில் மாற்றங்கள் தேவையில்லை என்பதை குறிக்காது.

பெண்களுடைய விவகாரத்தில் காணப்படும் குறைபாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்கத்தயாராக இல்லை எனும் குற்றச்சாட்டு ஜம்இய்யாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். பெண்களை மதிக்காதிருத்தல், அவர்களை அகௌரவப்படுத்தல், அவர்களை ஒதுக்குதல் போன்றவை இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான செயற்பாடுகளாகும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கூறுகின்றது. ஆகவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த மார்க்கப் போதனைகளுக்கு எப்போதும் கட்டுப்பட்டே செயற்பட்டு வருகின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

கீழே தரப்பட்டுள்ளவற்றின் மூலம் அல்லாஹு தஆலாவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், கலீபாக்களும் பெண்களுடைய விடயத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை அவதானிக்கலாம்.


திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான். மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (அல்-குர்ஆன் 58:01)

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது மனைவியான உம்மு ஸலமா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்ததாக ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது. கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரில் இருக்கும் பொழுது ஒரு பெண் அவர்களிடம் வந்து கேள்வி கேட்க அவற்றை முழுமையாக செவிமடுத்துவிட்டு அப்பெண்ணுக்குத் தெளிவுரை வழங்கினார்கள்.

குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும் இவ்வாறு வழிகாட்டும் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்வழிகாட்டல்களுக்கு மாற்றமாக எவ்வகையிலும் செயற்படமாட்டாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்பொழுதும் பெண்கள் விவகாரத்தில் கரிசனையுடனேயே செயற்பட்டுவருகின்றது. அவர்களது பிரச்சினைகளை செவிமடுத்து, அவர்களுக்கு உதவுவதற்கு ஜம்இய்யா எப்பொழுதும் தயாராகவே உள்ளது. பெண்கள் அமைப்புகள் மாத்திரமன்றி வேறு எவராயினும் எம்முடன் கலந்துரையாடல்களை நடாத்த விரும்பினாலும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

இன்று எம்மத்தியில் காணப்படும் தப்பபிப்பிராயமும் பிழையான புரிதல்களும் தொடர்பாடல் இடைவெளியும் அவசியம் நீக்கப்படல் வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் நம்புகின்றோம். இன்று முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பரவலாக பேசப்படும் ஒரு தலைப்பாக காணப்படுகின்றது. உண்மையில் இன்றைய நிலையில் இச்சட்டத்தில் சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு பொறுப்புவாய்ந்த நிறுவனம் என்ற வகையில் இவ்விடயத்தை பின்வரும் பல்வேறு கோணங்களில் அணுகவேண்டியுள்ளது:
1. மார்க்கப் போதனைகளுக்கு முரணில்லாது அமைத்தல்
2. பெண்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்
3. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்தையும் ஏற்புடமையையும் உறுதிப்படுத்தல்
4. ஒவ்வொரு நபருக்கும் தரப்பினருக்கும் உரிய நீதத்தை உறுதிப்படுத்தல்

எனவே இவ்விடயங்களை அணுகுவதில் மார்க்க அறிஞர்கள் நடுநிலையைப் பேணி தம்மை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளனர். அதேவேளை ஷரீஆ விடயங்கள் தொடர்பாக குழுவின் ஏனைய அங்கத்தவர்களுக்கு உணர்த்துவது குழுவில் அங்கம்வகிக்கின்ற உலமாக்களின் மார்க்கக் கடமையாகவும் காணப்படுகின்றது.

ஆரம்பத்திலிருந்தே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் சம்பந்தமான விடயங்களை மிகவும் கவனமாகக் கையாண்டு வருவதுடன் குழுவின் செயற்பாடுகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளது. இந்த நீண்ட பிரயாணத்தில் இக்குழு ஒரே அணியாக ஒற்றுமையுடன் முன்னேறி வந்துள்ளது. எனவே இந்தக் குழுவின் முடிவுகள் இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் திருப்திகரமாக நல்ல முறையில் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

குமுவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தம் தொடர்பான எமது முழுமையான அறிக்கை முக்கிய தலைப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களை உள்ளடக்கியதாகும். இதை பூரணமாக வாசித்தால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைபாடுகளையும் அவற்றிற்கு பின்னால் உள்ள காரணங்களையும் நியாயங்களையும் ஷரீஆ வரையறைகளையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

பெண்களின் உரிமைகளும் ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் இப்பணியை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.


அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி                                                                                                                                                                                                                                             தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

2017.04.03 / 1438.07.05

بسم الله الرحمن الرحيم - In the Name of Allah, the Compassionate, the Merciful

 

ACJU and the MMDA - A statement of clarification

The All Ceylon Jamiyyathul Ulama (ACJU) ever since its establishment has always taken a very flexible and moderate approach, within the  framework of Shari’ah and the greater public interest, when consulting on any issue. 

Such facilitation is based on the Quranic verse where it says:

 “Allah intends (to provide) ease for you and does not intend (to create) hardships for you.“ (Chapter 2 Verse 185).

In addition, Prophet Muhammed (May Peace and blessings be on him) has said : "Make things easy and do not make them difficult, cheer the people up by conveying glad tidings to them and do not repulse (them)."

In another instance the Messenger of Allah said: “Indeed, this religion is easy”.

It becomes the duty of the  Ulama (religious scholars) to ensure that matters pertaining to the religion are not made difficult to the people.  Especially, because it has been mentioned that Ulama are the inheritors of the prophets. 

Yet another instance by which the ACJU and Ulama are limited by the Quran is where it mentions : “Oh you who believe do not hold as unlawful the good things Allah has made lawful for you”  (Chapter 5, Verse 87).

It is clear from the above verse that the ACJU neither has the power to make what is unlawful lawful nor the power to make what is lawful unlawful.

Unfortunately, the statement made by the President of the ACJU that the “Muslim Marriage and Divorce Act (MMDA) is perfect in its present state”, has been subjected to misinterpretation.

In fact, what he wanted to express was that our predecessors who were involved in formulating the MMDA had taken great efforts to make it near perfect.  Of course, given the circumstances of  that period.  This does not imply that there need not be any reforms today to the Act, mainly in the administration of Quazi court system.   

There has also been an unfair allegation against ACJU that it is not ready to listen to the grievances of the women.  There is no truth at all  in this allegation.  ACJU wishes to highlight that it will be a gross violation of Islamic religious teachings to ignore the women or not to give them the honour and respect that Islam has bestowed on them. ACJU is therefore, bound by these religious teachings. 

See the examples elucidated below, where the Almighty Allah, the Prophet Muhammad (PBUH) and the Righteous Caliphs were ready to listen to the women.

The Quran states: “Allah has heard the talk of the woman who was debating with you about her husband” (Chapter 58 Verse 1).

During the incident of Hudaibiya, it is recorded that Prophet (PBUH) listened to his wife Umme Salma’s advice.

Also, it has been recorded that the Caliph, Umar bin Kattab while he was in the pulpit,  a woman questioned him and he was listening to her and willing to accept her clarification. 

When Quran and the Prophetic teachings guide us so clearly,  how can one conclude that ACJU is  acting contrary to such teachings. As has always been the case, ACJU is willing and ready to listen to the grievances of women. Our doors are always open not only for the women but, for anybody who is willing to have a dialogue.

These misconceptions and the communication gap that is dominating events today need to be removed.  We strongly believe that it is through dialogue that  we can sort out all our problems.  The Muslim Marriage and Divorce Act, is a topic which has been spoken widely in many circles and forums these days. In this regard, ACJU believes without doubt, the MMDA as it stands today definitely needs reforms.

ACJU as a responsible institution has to look into various aspects, inter alia :

(1) matters of relevance to the religious teachings;

(2) finding solutions to the grievances of the women;

(3) ensuring the acceptance and acknowledgement of the larger Muslim community;

(4) establishing justice to each and everyone to the best possible extent.  

In doing so, we as Religious Scholars are willing to be flexible and   accommodative to the fullest extent.  In the same vein, it is the bounden religious duty of the Scholars to alert the Committee in the area of Shariah principles, as relevant.

From its inception, the ACJU has been very careful in handling the MMDA matter and it has always given its fullest support to the committee. In this long journey, the committee has moved forward unitedly and as a team. We believe that InshaAllah we can conclude the committee proceedings in a manner that is satisfactory to all.

The comprehensive report which we have submitted to the reform committee has provided detailed  explanation to all the key topics of the MMDA reforms. If someone goes through this report he/she will understand the stand of ACJU and the rationale behind its suggestions.

Finally, the correct understanding of the statement, “Islam is a religion of equality”, is that, “Islam is a religion of justice”. This means being ‘just’ in treating equally those who are equal and, being ‘just’ when differentiating between those who are different. The ACJU invites all to join hands in this noble work to reform the MMDA and to protect the rights of oppressed women and the rights of every individual.

 

 

Ash-Shaikh Mufti M.I.M. Rizwe
President – ACJU

 


Ash-Shaikh M.M.A. Mubarak
General Secretary - ACJU  

 

27.03.2017 (27.06.1438)

நாட்டில் நிலவிவரும் வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்திப்போம்!

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்;டுள்ளனர் மேலும் பல்வேறு நோய்களாலும் பீடிக்கப்பட்டுளள்ளனர். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்.

அசாதாரண எந்த நிலமை ஏற்பட்டாலும்; நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும், அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். அதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் பயிர் பச்சைகள் மாண்டு விடுகின்றன, நோய்நொம்பலங்கள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழியவும், நோய்கள் நீங்கவும் சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

'உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்'. (நூஹ்: 10–12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் : 

  (اللَّهُمَّ اسْقِنا غَيثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعاً غَيْرَ ضارٍ، عَاجِلاً غَيْرَ آجِلٍ"  - رواه أبو داود  (1169

 (اللَّهُمَّ أغِثْنَا ، اللَّهُمَّ أغِثْنا ، اللهٌمَّ أغِثْنا - "  رواه مسلم  (897

 (اللهٌمَّ اسْقِ عِبَادَكَ ، وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ وَأحْيِ بَلَدَكَ المَيِّت  - "رواه أبو داود  (1176

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!

நாடு வரட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.

அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

தண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
'உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்'. (நூஹ்: 10–12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள் :


'(اللَّهُمَّ اسْقِنا غَيثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعاً غَيْرَ ضارٍ، عَاجِلاً غَيْرَ آجِلٍ' - رواه أبو داود (1169

'(اللَّهُمَّ أغِثْنَا ، اللَّهُمَّ أغِثْنا ، اللهٌمَّ أغِثْنا - ' رواه مسلم (897

'(اللهٌمَّ اسْقِ عِبَادَكَ ، وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ وَأحْيِ بَلَدَكَ المَيِّت - 'رواه أبو داود (1176

 அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2016.11.21 / 1438.02.20. (H)

Let’s pray & make effort towards the prevalence of Peace & Coexistence in this Country

We Muslims living in this country have been continuously facing a number of challenges throughout history. We have overcome such periods successfully by being calm & patient as per the teachings of Islam.

In the event of challenges, one would definitely be able to be overcome the situation successfully by turning towards Allah. This is evident from the history of Prophets. We Muslims should refrain and protect ourselves from major Sins and make sincere efforts towards strengthening the bond with Allah. Certainly, our good deeds would result in peace and prosperity to the Muslims and all others.

The current situation prevailing in the country have resulted in restlessness among the Muslim Community. Some elements have been actively engaged in continuous anti-Muslim campaigns and which induce racism.

Such activities targeted towards a community, would disrupt the prevailing peace and coexistence and affect the development process of the country and also would violate the Rights assured by the Constitution to every citizen of this Country.

The issues on ISIS, which has been widely publicized in the Media recently, has already been addressed and condemned last year by a Joint Declaration by the ACJU and 12 leading Muslim Organizations in Sri Lanka on the 23rd of July 2015. By this the Muslim community confirms that it has never recognized any sort of extremism and has proven its patriotism to the motherland.

On 20.11.2016 an emergency meeting was conducted with Muslim organizations, at the ACJU Head Office, on the prevailing situation in the country. It was decided to meet H.E. the President, Honorable Prime Minister, Muslim Parliamentarians and the concerned Officers and take appropriate actions to smoothen the situation. Furthermore a committee was appointed to continue the efforts in building better relations and coexistence with other communities.                                                                                                                                                                                                                                                        

Therefore, the ACJU requests all Muslims of this country to protect the ethnic and social unity by following the Islamic teachings and completely refrain from all activities inducing racism and to return towards Allah by performing good deeds such as Isthigfar (seeking forgiveness), Sadaqah (charity), fasting and Dua (supplications).

The ACJU requests the Religious Scholars and Professionals in the respective localities, to build and protect relations with other communities and provide guidance to the general public, based on the ACJU’s Declaration on Coexistence.

 

Ash-Sheikh H. Omardeen

Secretary - Propaganda Committee
All Ceylon Jamiyyathul Ulama   

நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.

சோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹுதஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.

தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களையும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்வதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிபடுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

மேலும் தற்போது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ISIS பற்றி, கடந்த வருடம் 23.07.2015ல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 12 முஸ்லிம் அமைப்புகளின் ஒப்புதலுடன் அவ்வமைப்பைக் கண்டித்து கூட்டு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தீவிரவாத செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதும் தனது தாய் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகிறது என்பதும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது நிலவும் அசாதாரண நிலைமை பற்றி முஸ்லிம் அமைப்புக்களுடனான ஒரு அவசர கூட்டம் நேற்று (20.11.2016) மாலை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உரிய அதிகாரிகளையும் சந்தித்து விடயங்களை தௌவுபடுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டதுடன் இனங்களுக்கிடையேயான சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

எனவே இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் ஜம்இய்யாவின் சகவாழ்வு பிரகடனத்தை மையப்படுத்த ஏனைய சமூகத்தவர்களுடன் தொடர்புகளை பேணிவருமாறும், மேற்குறிப்பிட்ட விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு, பொது மக்களுக்கு வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.


அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

ඉස්ලාමය සාමූහික සහජීවනය අවධාරණය කරන දහමකි. මේ ආකාරයට සමාජීය සබැඳියාවට හානිකරන කිසිදු කි‍්‍රයාමාර්ගයක් ඉස්ලාම් ධර්මය අනුමත නොකරයි.

ධර්මයන් අතර අනවශ්‍ය ප‍්‍රශ්නයන් ඇති කරන ආකාරයට මුස්ලිම්වරු කි‍්‍රයා නොකළ යුතු අතර අන් ආගමික සහෝදරයන්ගේ ආගමික අගයන් වලට ගරු කළ යුතුයි යනුවෙන් ද ඉස්ලාමය උගන්වා දෙයි.

ඉස්ලාමයට එරෙහිව කටයුතු කරන බලවේගයන් කි‍්‍රයාත්මක වන විටදී ඔවුන් කි‍්‍රයාත්මක වන ආකාරයටම මුස්ලිම්වරු කි‍්‍රයා කිරීම ඉස්ලාමය අනුමත නොකරයි. අයහපත් කි‍්‍රයාවන් යහපත් කි‍්‍රයාවන් මගින් වලක්වන ලෙසට ද අයහපත පෙන්වාදෙන විටදී මෘදු භාවයෙන් කතා කරන ලෙසට ද අන් ආගමික සහෝදරයන්ගේ සිත් නොරිදවන ආකාරයට වදන් භාවිත කරන ලෙසට ද ඉස්ලාමය මගපෙන්වා දෙයි.

අනෙකුත් ධර්මයන් විවේචනය කිරීම ඉස්ලාමය දැඩිව හෙළා දකින අතර අනෙකුත් ආගමික නායකයන් සමග ගෞරවයෙන් කටයුතු කිරීමට ඉස්ලාමය මගපෙන්වා දෙයි. ඉස්ලාම් ධර්මයේ මෙම ඉගැන්වීම් උදාසීන වන ආකාරයට ලිවීම ද කතා කිරීම ද සමාජ ජාලයන් භාවිත කිරීම ද අප දැඩිව හෙළා දකින්නෙමු.

 ඕනෑම මුස්ලිම්වරයෙකු අනෙකුත් ආගමකට හෝ ආගමික නායකයන්ට අගෞරව කරන ආකාරයට අදහස් ඉදිරිපත් කිරීම අප හෙළා දකින අතර මෙම ක‍්‍රමවේදය ඉස්ලාමීය ඉගැන්වීම් වලට  සම්පූර්ණයෙන්ම පටහැනි යැයි විවෘතව ප‍්‍රකාශ කරන්නෙමු.

තවද ඉස්ලාමයට ද මුස්ලිම්වරුන්ට ද මුස්ලිම්වරුන්ගේ ශුද්ධ ග‍්‍රන්ථය වන අල් කුර්ආනයට ද අපහාසාත්මකව සිදු කරන සෑම කටයුත්තක්ම අප හෙළා දකින අතර මෙවැනි දෑ සඳහා ඉදිරිපත් වන පුද්ගලයන්ට විරුද්ධව නිසි පියවර ගන්නා මෙන් රජයෙන් ඉල්ලා සිටින්නෙමු. මෙලෙස නීතියට හා සාමූහික සංහිදියාවට පටහැනිව කරන්නා වූ කි‍්‍රයාවන් නැවැත්වීමට නීතියේ හස්තය ඉදිරිපත් නොවුවහොත් මාතෘ භූමියට ද අපගේ සහෝදර වැසියන්ට ද හානිකර බලපෑම් ඇති විය හැකි වේ.

තවද ජාතීන් අතර ඇති විය හැකි මතභේදයන් හදුනාගෙන ඒවා නැතිකර දැමීමට රජය අවධානයෙන් කි‍්‍රයා කළ යුතු අතර මුස්ලිම්වරුන් සම්බන්ධ කරුණු ගැන ඉස්ලාමීය විද්වතුන් හා  මුස්ලිම් සමාජයේ නායකයන් සමග සංවාදයේ නිරත වීම මගින් යහ ප‍්‍රතිඵලයන් රජයට ලබා ගත හැකි යනුවෙන් ද අප අවධාරණය කරන්නෙමු.

All Ceylon Jamiyyathul Ulama - ACJU 

All Ceylon Young Muslim Men’s Association Conference - YMMA

Sri Lanka Jama'athe Islami – SLJI

All Ceylon Thowheedh Jama’ath –ACTJ

Muslim Council of Sri Lanka - MCSL

National Shoora Council – NSC

Sri Lanka Islamic Center

Sri Lanka Islamic Student’s Movement

All Ceylon Union of Muslim League Youth Fronts - ACUMLYF

World Assembly of Muslim Youth – WAMY

Jama'ath Ansaris Sunnathil Mohammadiyya - JASM

Jama’athus Salama

International Islamic Relief Organization- IIRO

Association of Muslim Youth of Sailan (Sri Lanka) - AMYS

Colombo District Masjid Federation – CDMF

Sri Lanka Shariee’ah Council

Al Hikma Welfare Association

All Ceylon Muslim Educational Conference - ACMEC

Jama’ath ut Thowheed

Rapid Response Team - RRT

Sri Lanka Muslim Media Forum – SLMMF

All University Muslim Students Association - AUMSA

Advocacy & Reconciliation Council

Islam is a religion that enforces social reconciliation. And, therefore, Islam does not recognize any activity detrimental to the social fabric.

Islam preaches that Muslims should avoid creating hostilities between religions and respect other faiths.

If any anti-Islamic strategies are initiated by any force, Islam does not encourage encountering back by the similar manner.  Islam teaches that evil has to be encountered with goodness. It also exhorts that when pointing out any fault to use wisdom and adopt a soft approach, to avoid hurting the feelings of others.

Islam strictly prohibits humiliating other religions while enforcing to respect the other religious clerics. We strictly condemn writing, speaking and using social media contradicting to the above Islamic teachings.

We strictly denounce that a Muslim expressing his thoughts in a manner demeaning the others’ religions or religious scholars, which is against the Islamic teachings.

Furthermore, we strictly condemn all activities humiliating Islam, Muslims and the Holy Quran, while requesting the government to take needful action against those who get involved in these types of unlawful activities. If the government does not take appropriate actions to stop this menace it will take our country and its citizens towards negative results.

The government also should take initiatives to identify the activities created to widen the relationship between the communities and do the needful to prevent them. Furthermore, in order to settle matters concerning Muslims’ Affairs we request the government to consult the leadership of Muslim religious and civil societies for better outcome.

All Ceylon Jamiyyathul Ulama - ACJU
All Ceylon Young Muslim Men’s Association Conference - YMMA
Sri Lanka Jama'athe Islami – SLJI
Sri Lanka Shariee’ah Council
All Ceylon Thowheedh Jama’ath –ACTJ
Sri Lanka Islamic Center
World Assembly of Muslim Youth – WAMY
Jama'ath Ansaris Sunnathil Mohammadiyya - JASM
All University Muslim Students Association - AUMSA
Jama’athus Salama
International Islamic Relief Organization- IIRO
Association of Muslim Youth of Sailan (Sri Lanka) - AMYS
Muslim Council of Sri Lanka - MCSL
National Shoora Council – NSC
Colombo District Masjid Federation - CDMF
Al Hikma Welfare Association
All Ceylon Muslim Educational Conference - ACMEC
All Ceylon Union of Muslim League Youth Fronts - ACUMLYF
Jama’ath ut Thowheed
Rapid Response Team - RRT
Sri Lanka Muslim Media Forum – SLMMF
Sri Lanka Islamic Student’s Movement
Advocacy & Reconciliation Council

Page 1 of 2