அகில இலங்கை ஜம்இய்யத்துல்  உலமா சபையின் நிந்தவூர் கிளையின் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஊரில் இடம்பெறும் இரவு நேர பெண்களுக்கான வகுப்புக்கள் சம்பந்தமாக நிந்தவூர் கிளையின் தஃவாப் பிரிவும், கல்விப் பிரிவும் இணைந்து  2018.01.20 அன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது இவ்விடயம் சம்பந்தமாக நிந்தவூர் ஜம்இய்யாவின் தலைமையில் எதிர்வரும் 27.01.2018 ம் திகதி ஊரிலுள்ள அனைத்து பொதுநிருவனங்களின் தலைவர்களையும் அழைத்து நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து, அவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பான முடிவொன்றை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா