அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை நடாத்திவரும் "ஈமானிய வசந்தம்" கிராமிய தஃவா நிகழ்வின் மூன்றாவது தொடர் குறிஞ்சாகேணி பிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றது.
1. பிரதேசத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள், கிராம உத்தியோத்தர், அரச அரசசார்பற்ற திணைக்கள பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டு கழகங்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல்.
2. பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளிலும் ஒரே தலைப்பில் காலை நிகழ்ச்சிகள்.
3. குத்பா உரை.
4. பெண்களுக்கான பிரத்தியேக மூன்று நிகழ்ச்சிகள்.
5. ஆண்களுக்கான திறந்தவெளி உரைகள் இரண்டு.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமாருடனான சந்திப்பொன்று 17.02.2018 அன்று காலை கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பிரதேசத்தின் சுத்தம், சுகாதார  மேம்பாடு, வெள்ளிக்கிழமை குத்பா நேரத்தை கருத்திற் கொண்டு நோயாளர் பார்வையிடும் பகல் நேரத்தை மாற்றுதல் மற்றும்  வைத்தியசாலை ஊழியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன் போது  கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள்  எடுக்கப்பட்டதுடன் வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமார் அவர்களுக்கு அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றும் வழங்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா,முள்ளிப்பொத்தானை, மூதூர், தோப்பூர், சம்பூர் போன்ற பிரதேசங்களின் பொறுப்பதாரியாக புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை அதிகாரியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று  14-2-2018 ஆம் திகதி கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச நலன் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-2018 விடயத்தில் முன்னெடுத்துவரும் முன்னெடுப்புக்கள்

நாட்டினதும் பிரேதசத்தினதும் சுமூக நிலையை கருத்திற்கொண்டும் நல்லதோர் அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் இத்தேர்தல் விடயத்தில் கட்சிகள், வட்டார வேட்பாளர்கள், சிவில் சமூக தலைமைகள், பொதுமக்கள் போன்ற பல தரப்பினருக்குமான பின்வரும் இஸ்லாமிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்களை அல்லாஹ்வின் அருளோடு கிண்ணியா உலமா சபை ஷூராசபையுடனும் இணைந்து இதுவரை மேற்கொண்டு வருகின்றது. முன்னெடுப்புக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.

 

# வேட்புமணுத்தாக்கலின்      முன்னபான கட்சிப்பிரதிகளுடனான உடன்பாடுகள், ஒழுங்குகள்.

# சகல மஸ்ஜித்களிளும் விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கான விஷேட குத்பாவழிகாட்டல்.

#வேட்பாளர்களுக்கான வழிகாட்டல்களும் கலந்துரையாடலும்.

#அனைத்து மஸ்ஜித் இமாம்கள் நிர்வாகிகளுடனான கலந்துரையாடலும்

வழிகாட்டலும்.

#பொது சபைகள் , மஸ்ஜித்கள், நிறுவனங்களின் பொறுப்புக்களில் இருப்போர் தேர்தல்பணிகளில் ஈடுபடுதல் தொடர்பிலான விஷேட தீர்மானம் அமுலாக்கம்.

 

இவ்விடயங்களில் ஒத்துழைத்து சுமூக நிலையை வேட்பாளர்கள், பொதுமக்கள், பொது நிறுவனங்கள், சபைகளின் தலைமைகள் அனைவருக்கும் பேணி நடக்க முன்வர வேண்டும்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை "ஈமானிய வசந்தம்" என்ற மாதாந்த கிராமிய தஃவா நிகழ்ச்சியினை சூரங்கல்,ஸலாமத் நகர் ஆகிய கிராமங்களை மையப்படுத்தி (19.01.2018) ஆம் திகதி அன்று  ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
♦இரு பாடசாலைகளில் ஒமழுங்குபடுத்தப்பட்ட மாணவரகளுக்கான இஸ்லாமிய வழி காட்டல் நிகழ்ச்சி.
♦இரு பள்ளிவாசல்களில் ஒரே தலைப்பிலான குத்பா.
♦இரு பள்ளிவாசல்களில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி.
♦பிரதேசத்திலுள்ள பள்ளி நிருவாகிகள் கி.அபிவிருத்திச் சங்கம்,இளைஞ்சர் அமைப்புகளுடனான கலந்துரையாடல்.
♦ஒவ்வொரு மஹல்லாவுக்கும் தஃவா குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்சியை முன்னெடுக்க ஆலோசனையும் வழங்கப்பட்டது.
♦ஜம்இய்யாவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
♦மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து 9.00 மணி வரை திறந்த வெளியில் இரண்டு தலைப்புக்களில் பொது பயான் நடை பெற்றது.
♦அக்கிராமத்தில் மார்க்கப் பணியில் ஈடுபட்ட மூத்த இரு சகோதரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

கிராமங்களில் ஈமான்,இபாதத்தை அதிகரித்து,பாவச் சூழலை தடுத்தல்,கல்வி பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவி கிராமிய கட்டுக் கோப்பை வலுப்படுத்துவனூடாக ஆரோக்கியமான இஸ்லாமிய சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அன்மையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளையின்14 உப குழுக்களும் 3வருட,1வருட திட்டங்களை வகுத்து செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் "ஈமானிய வசந்தம் மாதாந்த கிராமிய தஃவா நிகழ்வு" தஃவா பிரிவினால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா