24.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ  பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் திவுரும்பொல, ஆரிஹாமம், எதுன்கஹகொட்டுவ, நாவபிட்டிய, ஹபரவெவ ஆகிய மஸ்ஜித்களின் பங்களிப்புடன்  திவுரும்பொல ஜுமுஆ மஸ்ஜிதில் போதை ஒழிப்பு எனும் கருப்பொருளில் மாநாடு மற்றும் பேரணி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி வாசல் நிருவாகிகள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

05.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாயல் ஆகியவற்றின் தலைமையில் இயங்கும் புகைத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான செயலணியினால் அப்பிரதேசத்தின் 07 பள்ளிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்வொன்று அட்டப்பள்ளம் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா