அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 08 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிப குழுக்களுடன் விஷேட சந்திப்பொன்றை  18/02/2018 ஆம் திகதி இரவு மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மீதோடமுல்லை அல் அமான் ஜுமுஆப் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்தது.

இச்சந்திப்பில் வாலிபர்களுக்குத் தேவையான சன்மார்க்கக், கல்வி, ஒழுக்கம், தொழில் சம்பந்தப்பட்ட வழிகாட்டல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

  • ஓவ்வொரு பள்ளிவாயல்களையும் மையப்படுத்தி வாலிப கமிட்டிகளை (Youth Committee) இவ்வருட ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் உருவாக்குதல்.
  • ஓவ்வொரு வாலிப கமிட்டிகளும் அவர்களது பள்ளிவாயல்களை மையப்படுத்தி முழுமையான வாலிபர்களின் தரவுகளை (Database) இவ்வருட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சேகரித்தல்.
  • போதைப் பொருட்கள் பாவைனையில் சிக்குன்டுள்ள மற்றும் அதனை விநியோகம் செய்யும் முஸ்லிம் வாலிபர்களுடைய விடயத்தில் விஷேட கவனம் செலுத்தப்படல்.
  • வாலிப கமிட்டிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு தேவையான முடியுமான ஒத்துழைப்புகளையும் வளவாளர்களையும் கிளை ஜம்இய்யாவின் மூலம் வழங்குதல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்குக் கிளையின் ஒன்றுகூடல்  2018-01-31 ஆம் திகதி புதன்கிழமை காலை 06.30 மணிக்கு வடுகொடவத்தை, மீதோடமுல்லை ஜூமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது .கிளையைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் 2018 ஆம் ஆண்டின் செயற்திட்டங்கள் பற்றி மிக விரிவாக கலந்துறையாடப்பட்டு இவ்வருடத்திற்குரிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.

இதனடிப்படையில் வருகின்ற பெப்ரவரி மாதம் பின்வரும் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டடுள்ளது.


*2018-18-02 ஆம் திகதி வாழிபர்களுக்கான போதைவஸ்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


*2018-02-21 ஆம் திகதி பள்ளிவாயல் இமாம்களுக்கு பிக்ஹ் கலந்துறையாடல் நிகழ்ச்சி


*2018-02-25 ஆம் திகதி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு காதியானிகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா