20.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என். ஷபீக் [ஸஹ்ரி] அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று ரம்புகந்தான ஜும்மா மஸ்ஜிதில் 2018.08.07 அன்று  இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

1439.09.22

2018.06.08

ஊடக அறிக்கை

 

எல்லாம் வல்ல அல்லாஹ், இப்புனித றமழான் மாதத்தில் எமது நல்ல அமல்களை ஏற்று, எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக. நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

நாடளாவிய ரீதியில் பல சேவைகளை செய்து வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதினைந்து உப பிரிவுகளில் பத்வாக் குழுவும் ஒன்றாகும். இக்குழுவில் பல தஃவா அமைப்புகளையும் சேர்ந்த நாற்பத்தி மூன்று பிக்ஹ் கலை வல்லுனர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். இக்குழு மக்களுக்குத் தேவையான மார்க்கத் தீர்ப்புக்களையும் வழிகாட்டல்களையும் ஆய்வு செய்து எழுத்துமூலம் வெளியிட்டு வருவதுடன், தொலைபேசியூடயாகவும், நேரடியாக சமூகமளிப்பவர்களுக்கும் மார்க்கத் தீர்ப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிவருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்;துல் உலமாவின் யாப்பின் பிரகாரம், மாவட்ட மற்றும் பிரேதேசக் கிளைகளுக்கு எழுத்து மூலம் பத்வா வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில், 9வது அத்தியாயம் 14 ஆவது பிரிவின், உப பிரிவு (ஒள) வில்; பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஃபத்வா வழங்குதல் தவிர்ந்த பொதுவாக ஜம்இய்யாவின் குறிக்கோள்களை எய்துவதற்கு தேவையானதும் அல்லது இடைநேர்விளைவானதுமான வேறு எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்.)

மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள், தமது பிரதேசங்களுக்குத் தேவையான மார்க்க விடயங்களை ஆய்வு செய்து, தமது ஆய்வு அறிக்கைகளை, சிபாரிசுகளை  தலைமையகத்துக்கு அனுப்பலாம். அவற்றை தலைமையக பத்வாக் குழு மீள் ஆய்வு செய்து எடுக்கப்படும் முடிவே இறுதி முடிவாகும். அவற்றையே எழுத்து மூல பிரசுரத்தில் பிரசுரிக்கப்படும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதேச மற்றும் மாவட்டக் கிளைகள் எழுத்து மூலமாக வெளியிடும் பத்வாக்கள் எதுவும் தலைமையக பாத்வாக்களாக அமையாது என்பதையும் அதனை தலைமையக பத்வாக்களாக தலைமையகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதையும் அனைத்து மாவட்ட, பிரதேச கிளைகளுக்கும் ஜம்இய்யா சொல்லிக் கொள்ள விரும்புகின்றது.

எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதேச மற்றும் மாவட்டக் கிளைகள் எழுத்து மூலமாக ஏதும் பத்வாக்களை வெளியிடுவதைத் தவிர்த்து ஜம்இய்யாவின் பிரதான பத்வாக் குழு ஊடாக வெளியிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 

 

அஷ்-ஷைக் எம் எஸ் எம் தாஸீம்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் ஏற்பட்டில் உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு ஒன்று 2017.12.09 சனிக் கிழமை அன்று முள்ளிப்பொத்தானை கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் "சமூக மாற்றத்தில் உலமாக்களின் பங்களிப்பு" , மற்றும்  "உலமாக்களும் பொருளாதாரம்" எனும் தலைப்பில் கருத்தரங்குகள் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா