அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை கிளை பதுளை பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கல்வி மாநாடு ஒன்று 2018.02.18 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு பின்வருமாறு நான்கு பகுதிகளாக இடம் பெற்றது.

  • மாணவர்களுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 350 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
  • மாணவிகளுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 450 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
  • ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எனும் அமானிதம் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 120 ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
  • மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 850 பெற்றோர் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்ட கிளையின்  நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் 13.02.2018 அன்று செவ்வாய்க் கிழமை பதுள்ளை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.  இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா