2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர்  கிளையின்  ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நளீம் அவர்களின் தலைமையில்  மர்கஸ்   மஸ்ஜிதில் நடைபெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

  •  போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • நாட்டின் சுதந்திரதினத்தை முன்னிட்டு எதிர்வரும் முதலாம் திகதி இது தொடர்பாக குத்பாக்கள் நிகழ்த்துவதோடு தேசிய தினமன்று நிகழ்ச்சிகளையும் நடாத்துதல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

21.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர்  கிளையின்  மாதாந்த ஒன்று கூடல்  நடைபெற்றது. இதன் போது திருகோணமலையில் 25.11.2018 அன்று நடைபெற இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றியும், போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வை பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா