11.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது கண்டி மாவட்ட உலமாக்களுக்கான கருத்தரங்கு நிகழ்வொன்றும் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின்  மாதாந்தக்  கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் சியாம் யூசுபி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாதம் மேற் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இம்மாதத்திற்கான வேலைத் திட்டங்களும் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

08.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் விஷேட ஒன்று கூடல் ஒன்று மாவட்டக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிம்கள், துறைசார்நதவர்கள், பரோபகாரிகள், சமூக ஆர்வலர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், என பலர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 2019.01.16 ஆம் திகதி கண்டி மாவட்டக் கிளை மற்றும் வத்தேகெதர, உடதலவின்ன பிரதேச கிளைகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று ஹகீமிய்யா அரபுக் கல்லூரியில் இடம் பெற்றது. இதன் போது கிளைகளின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

2019.01.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

  • கிளைகளுடைய சென்ற மாத செயற்பாடுகள் தொடர்பாக கிளை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
  • எதிர் வரும் மூன்று மாதங்களுக்கான கிளைகளுடைய செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை ஒவ்வொரு கிளைகளிற்கும் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
  • வத்தேகெதர, உடதலவின்ன பிரதேச கிளையின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் சிலரும் 01.16 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஹகீமிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அப்பிரதேச  ஆலிம்களுடன்  விஷேட சந்திப்பொன்றை நடாத்த முடிவு செய்யப்பட்டது.
  • 01.18 ஆம் திகதி நடைபெறவுள்ள NNP சம்பந்தமான கண்டி மாவட்டம் தழுவிய நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
  • கண்டி மாவட்ட கிளைக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், எமது செயற்பாடுகள் தொடர்பாக தெளிவு வழங்குவதற்குமான விஷேட  நிகழ்வொன்றை எதிர்வரும் 02.10 ஆம் திகதி நடாத்த முடிவு செய்யப்பட்டது.
  • நெல்லிகல விகாரையின் விகாராதிபதி தர்மரத்ன தேரர் அவர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா