2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வொன்று கண்டி கட்டுக்கலை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

03.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் கல்விப்பிரின்  ஏற்பாட்டில்   கண்டி மாவட்ட மாவட்ட அரபு மத்ரஸாக்களில் இவ்வருடம் கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இஸ்லாம் பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வொன்று மாவட்டக் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் 2018.07.14 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்களுக்கு உழ்ஹிய்யா சம்பந்தமான வழிகாட்டல்கள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதுடன் கண்டி சிடி பகுதியில் உழ்ஹிய்யா நிறைவேற்றுவது சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்றை கண்டி நகர மஸ்ஜித்  நிர்வாகிகளுடன் நடாத்தவும்  முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஊஊஊ யின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான அறிமுக நிகழ்வும் நடைபெற்றது .

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்   கண்டி மற்றும் பேராதெனிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர்களுக்கும், கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று கண்டி மாவட்டக் காரியாலயத்தில்  2018.07.01 அன்று நடை பெற்றது. இச்சந்திப்பில் வைத்திய முறைகள் சம்பந்தமாகவும் தடுப்பூசி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

கண்டி மாவட்டத்தில் சிறப்புததேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் பரீட்சைகளில் சிறந்த பெருபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கு ஒரு நிகழ்வு சென்ற 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக்கிளையின் தலைமை பீடம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களும், மாவட்டத்தின் 13 பிரதேசக் கிளை உறுப்பினர்கள் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.இரான் நழீமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் தமதுரையில்: இன்றைய தலைமுறையினரை கல்வியின் பால் உற்சாகமூட்டுவது எமது பாரிய கடமையாகும். கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகொழும்பாகும். ஏதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்பவும், வளாந்து வருவோருக்கு சரியான பாதையைக் காட்டி அவர்களை நேர்வழிப்படுத்துவதுமே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பெருபேறுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஆண்களை விட பெண்கள்; தேர்ச்சியின் விகிதாசாரமே அதிகம். பெண்கள் கல்வியில் காட்டுகின்ற ஆர்வம் போலவே ஆண்களும் அதிகம் அக்கரை காட்ட வேண்டும். சமுகமளித்திருக்கும் பெற்றோர்கள் உங்கள் மகளின் கல்வியில் அக்கரை காட்டுவது பொலவே ஆண் பிள்ளைகளினதும் கல்வியில் அக்கரை காட்ட வேண்டும் என உருக்கமாகக் கூறினார்.

மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில் இந்நகிழ்வில் சுமார் 80 மாணவ மாணவிகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என கண்டி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் கப்பார் தீனி அவர்கள் தெரிவித்தார்.