25.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி ஒன்று  திருகோணமலை N.C. வீதி, முஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்தில் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் உமர்தீன் , அஷ்-ஷைக் அப்துல் கரீம்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

11.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின்   தலைவர் அஷ்-ஷைக் ஐ.எஸ் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதுடன் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

  • எதிர்வரும் மாதம் 25ம் திகதி நடைபெற இருக்கும்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் NNP - தேசிய வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடகள் பற்றிய கலந்துரையாடல்  நிகழ்விற்கு குச்சவெளி  கிளையின்  30 பேர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல்
  • பிரதேசத்திலுள்ள கடை உரிமையாளர்களை சந்தித்தல் மற்றும் அவர்களுக்கான தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துதல்.
  • குச்சவெளி கிளையின் அலுவலக விடயங்களை கண்கானிப்பதற்காக அலுவலக பொறுப்பாளராக அஷ்-ஷைக்  சாஜித் அவர்களை நியமித்ததோடு கிளையின் அலுவலகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09:00 மணி முதல் 11 வரையும் சனி ஞாயிறு தினங்களில் தேவைக்கேற்பவும் திறக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில  இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

24.10.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டம் மதவச்சிக் கிளையின் ஏற்பாட்டில் மதவச்சி ஜும்மா மஸ்ஜிதில்  இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா