2019.01.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

  • கிளைகளுடைய சென்ற மாத செயற்பாடுகள் தொடர்பாக கிளை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
  • எதிர் வரும் மூன்று மாதங்களுக்கான கிளைகளுடைய செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை ஒவ்வொரு கிளைகளிற்கும் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
  • வத்தேகெதர, உடதலவின்ன பிரதேச கிளையின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் சிலரும் 01.16 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஹகீமிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அப்பிரதேச  ஆலிம்களுடன்  விஷேட சந்திப்பொன்றை நடாத்த முடிவு செய்யப்பட்டது.
  • 01.18 ஆம் திகதி நடைபெறவுள்ள NNP சம்பந்தமான கண்டி மாவட்டம் தழுவிய நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
  • கண்டி மாவட்ட கிளைக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், எமது செயற்பாடுகள் தொடர்பாக தெளிவு வழங்குவதற்குமான விஷேட  நிகழ்வொன்றை எதிர்வரும் 02.10 ஆம் திகதி நடாத்த முடிவு செய்யப்பட்டது.
  • நெல்லிகல விகாரையின் விகாராதிபதி தர்மரத்ன தேரர் அவர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் மாதாந்தக் கூட்டம் கல்விப் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் அமீர் அலியார் ஹாமி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தங்களுக்கான பொருத்தமான துறையினை தெரிவு செய்தல் சம்பந்தமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை நடாத்துதல்.
  • இம்முறை கா.பொ.தர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உயர்தர பிரிவிற்கு  எந்த பாடங்களை தெரிவு செய்தல் என்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தல் .

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருவிட்ட கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளைக்கு உற்பட்ட ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தப்ஸீர், பிக்ஹு வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும்,  ஜம்இய்யாவின் அங்கத்துவ அட்டையை பெறாதவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும், கிளைக்கான காரியாலயம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

2019.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் மாவடிப்பள்ளி கிளையின் மாதாந்தக் கூட்டம் மாவடிப்பள்ளி ஜுமுஆ பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 2019.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஒன்று  நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இதன் போது கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

24.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் சவளக்கடை, மத்தியமுகாம் கிளையின் அனுசரனையில் ஆண் மாணவர்களுக்கான  இஸ்லாமிய அடிப்படையிலான திறன் விருத்திக்கான வழிகாட்டல் நிகழ்வொன்று தாருல் ஹிக்மா கலாபீடத்தில் நடைபெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

22.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல் ஹைறாத் ஜுமுஆ பள்ளிவாசலில் கிளையின் உபதலைவர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் அமீன்  அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் 2019ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இதில்  உலமாக்கள் , பொதுமக்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் இன்னும் பலர் கலந்து கொண்டனர் .

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

22.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதவாக்குள கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் மஜீத் முகம்மது றனீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2018.12.30 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் மாவட்ட, பிராந்திய கிளைகளுடனான சந்திப்பும், சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் நூல் வெளியீட்டு வைபவமும் தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

அஷ்-ஷைக் இன்ஆமுல் ஹஸன் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனதுரையில் ஜம்இய்யா கடந்து வந்த பாதைகள் பற்றி குறிப்பிட்டதுடன் ஜம்இய்யாவின் அழைப்பை ஏற்று வருகை தந்தவர்களை வரவேற்று விடைபெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் அடைவுகள் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 15 பிரிவுகளை உள்ளடக்கி அவற்றினூடாக தன்னாலான ஏராளமான பணிகளை செய்து வருவதாகவும், அப்பணிகளுக்கு ஏனையோரின் பங்களிப்புக்களும் அவசியம் எனவும் குறிப்பிட்டார். மேலும் தமக்குள் இருந்து வரும் முரண்பாடுகளிற்குள் உடன்பாட்டை வளர்ப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழுவினால் 2010 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட நூல் எழுதும் போட்டியில் முதலிடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. இதன் வரவேற்புறையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் பாழில் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனதுரையில் இந்நூல் எழுதும் போட்டு தொடர்பான பூரண தெளிவொன்றையும் வழங்கியமை குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

அதனைத் தொடர்ந்து சமூக ஒற்றமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் நூலின் மதிப்புரை இடம் பெற்றது. இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதன் போது அவர் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள தலைப்புக்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது இந்நூல் மிகவும் பிரயோசமான ஒரு நூல் எனவும் இந்நூலை ஒவ்வொருவரும் கட்டாயம் வாசித்து பயன் பெற் வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இப்புத்தகத்தை எழுதிய அஷ்-ஷைக் முப்தி அஹ்மத் மபாஸ், அஷ்-ஷைக் பாழில் ஹுமைதி ஆகியோர் பற்றிய சிறு குறிப்பொன்றையும் முன்வைத்து விடைபெற்றார்.

அதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்களின் சிற்றுரையொன்று இடம் பெற்றது. அவ்வுரை வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவோம் எனும் தொனிப்பொருளிலேயே அமைந்திருந்தது. அத்தோடு அந்நிகழ்வு நிறைவு பெற்றது.

மீண்டும் நிகழ்வின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் ளுஹர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்படவுள்ள அல்குர்ஆனின் சிங்கள மொழி மூலமான விளக்கவுரை தொடர்பான தெளிவொன்றை அஷ்-ஷைக் மாஹிர் அவர்கள் முன்வைத்தார்கள். இதன் போது இவ்விளக்கவுரையை செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டது முதல் இது வரை மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், ஏனைய விளக்கவுரைகளில் இருந்து இவ்விளக்கவுரை சிறப்புற காரணமாக அமையும் விடயங்கள் தொடர்பாகவும் அழகிய முறையில் முன்வைத்து விடைபெற்றார்.

அதனைத் தொடர்ந்து கிளைகளின் செயற்பாட்டை மேம்படுத்தல் எனும் தலைப்பில் உரையொன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதன் போது ஜம்இய்யாவின் ஒவ்வொரு பிரிவும் செயற்படும் விதம் தொடர்பாக தெளிவு படுத்தியதுடன் ஒவ்வொரு கிளைகளும் இதனடிப்படையில் ஜம்இய்யாவின் வழிகாட்டலிள் திறன் பட செயலாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான தெளிவு ஒன்று அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸியாட் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

2018.12.27 (1440.04.18)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி


நேற்று (வியாழக்கிழமை இரவு) வபாத்தான அஷ்ஷைக் ஏ.ஸி.எம். சதகத்துல்லாஹ் நத்வி அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலைப்படுகிறோம். அன்னார் கண்டி மாநகர ஜம்இய்யத்துல் உலமா கிளையின் உறுப்பினராக இருந்ததோடு அதன் உப தலைவர்களில் ஒருவராகவும் இருந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். சிங்கள மொழியில் குத்பாப் பிரசங்கங்கள் செய்து வந்த அவர்கள் ஒரு காழி நீதவானாகவும் பணி புரிந்தார்கள். மேலும், கண்டியில் உள்ள சர்வ சமய ஒன்றியத்திலும் ஒரு உறுப்பினராக இருந்து இனங்கள் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க பாடுபட்டார்கள்.


அன்னார் கண்டி வன்செயல் காலத்தில் தாக்கப்பட்டது மிகவும் வருத்தத்தை தருகிறது. அதனை சகித்து பொறுத்து அன்னாருக்குத் தேவையான வைத்திய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த அன்னாரது குடும்பத்தினர் அவரது வபாத் காரணமாக மிகவும் துக்கத்திலும் சஞ்சலத்திலும் இருக்கும் இந்நேரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவர்களோடு பங்கு கொள்வதோடு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அவர்களது நற்கிரியைகளை அங்கீகரிக்க பிரார்த்திக்கின்றோம்.

 


அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி
செயலாளர் ஆலிம்கள் விவகாரப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா