2019.03.18 /1440.07.10


15.03.2019 அன்று நியுஸிலாந்தின் பள்ளி வாசலில் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ்வாறான தாக்குதல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக உரிய தரப்பினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


இஸ்லாம் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற, பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத மார்க்கமாகும். இவ்வாறான மனிதபிமானமற்ற தாக்குதல்கள் உலகலாவிய ரீதியில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீர் குலைப்பவையாகவே இருக்கின்றது.


இப் பயங்கரவாதத் தாகுதல்களுக்கு இலக்காகி உயிர் நீத்த மக்களுக்காக அனைவரும் பிராத்திக்குமாறும், மறைவான ஜனாஸா தொழுகையை ( الصلاة على الميت الغائب) தொழுமாறும், இது விடயத்தில் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் கூடய கவனம் செலுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.


தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிராத்தனை செய்கின்ற அதே நேரம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 
அஷ்-ஷைக் எம்.எச் உமர்தீன்
பிரச்சாரக் குழு செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

02.03.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி  கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பிரதேசத்தில் உள்ள வர்தகர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

02.03.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வொன்று நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹக் பள்ளி வாசலில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கான அனுமதி கோரி இன்று 2019.03.11 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் நிகழும் பற்றாக்குறைகள் தொடர்பாகவும், போதை ஒழிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

18.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் புதுக்கடை புஷ்ரா பெண்கள் அரபுக்கல்லூரியில்  நடை பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

23.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்தக் கூட்டம்  கிளையின்  தலைவர் அஷ்-ஷைக் பரீத் அவர்களின் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை திருகோண மலை மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல்  உலமா

23.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் மினா நகர் பள்ளி வாசல் பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடை பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் மஸ்ஜித் மட்டத்திலான செயற்குழு உறுப்பினர்களுக்காக விஷேட நிகழ்ச்சி ஒன்று மாத்தளை நகர் கினையின் ஏற்பாட்டில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  பேருவளைக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரிழாவன் அவர்களின் தலைமையில் அஸ்ஸலாஹ் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இதன் போது கிளையின் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அநுராதபுர மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் அவர்களின் தலைமையில் அநுராதபுர முஹீதீன் மஸ்ஐிதில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாத செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியை மாவட்டம் தளுவிய ரீதியில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா