19.02.2019 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் விவகாரப் பகுதி (ACJU Youth Division)  மற்றும் ஆய்வு, அபிவிருத்தி, பயிற்றுவிப்புக்கான எகடெமி (ADRT) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் MEEDS நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு ஒன்று போருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல்  உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கல்குடா அல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

11.12.2018 அன்று பிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக், உப தலைவர்களான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஷூரி மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் ஆகியோரும், இளைஞர் விவகாரப் பிரிவின் தலைமையக செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா