17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிளையின் உறுப்பினர்கள் உட்பட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் கலந்து கொண்டார். இதந் போது மாவட்ட ரீதியில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் நூலின் அறிமுக நிகழ்வொன்றை குருநாகல் மாவட்டத்தில் நடாத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

06.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மத்திய சபைக் கூட்டம் மற்றும் தேசிய வலையமைப்பு வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் நிகழ்வும் தெளியாகொன்ன ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்தில் இயங்கி வரும் 22 கிளைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் மாவட்ட  காரியாலயத்தில்  தலைவர் அஷ்-ஷைக் சுஹைப் தீனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேசக் கிளைகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக பம்மன்ன கிளையின் பதவி தாங்குனர்கள் அழைக்கப்பட்டு கிளைத் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில்  தலைவர் அஷ் ஷைக் சுஐப்  (தீனி) அவர்களின் தலைமையில் 02.09.2018 அன்று   நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில்  தலைவர் அஷ் ஷைக் சுஐப்  (தீனி) அவர்களின் தலைமையில் 08.07.2018 அன்று   நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா