04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள், பாதர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
02.03.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பிரதேசத்தில் உள்ள வர்தகர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா அல்லாஹ்வின் உதவியால் 2018.09.29 அன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. குச்சவெளி பிரதேச ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்ஹ் IS அ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளை ஜம்இய்யாவின் தலைவருமான கலாநிதி அஷ்ஷெய்ஹ் AR நஸார் பலாஹி அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதேச சபையின் உப தவிசாளரும் இக்கட்டிடத்தை வழங்கி உதவி செய்த அல் ஹாஜ் ஜே. அன்சார் JP அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலமாக்களும், மஸ்ஜித் நிருவாகிகளும் கலந்துகொண்டார்கள். சிறப்பான இந் நிகழ்வில் பிரதேச மூத்த உலமாக்களை நன்றியுடன் கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்ஷெஹ் அப்துல் அஸீஸ் (சஹ்தீ) அவர்களின் தலைமையில் 09/09/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் அலுவலக திறப்பு விழா பற்றி கலந்துரையாடியதோடு அதற்கான ஏற்பாட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 29.09.2018 அன்று உத்தியோகபூர்வமாக அலுவலகம் திறப்பதென முடிவும் செய்யப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி (25.03.2018) ஆம் திகதி காலை கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் சஹ்தி ஹஸரத் அவர்களின் தலைமையில் வாழையூற்று அன்னூர் ஜும்மா மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 19 மஸ்ஜித்களின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா