22.04.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் GONGAWELA ஜும்மா மஸ்ஜிதில் அஷ்ஷேக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இரு அமர்வுகளாக இடம் பெற்ற இம்மவர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி அவர்கள் சகவாழ்வு எனும் தலைப்பிலும் , அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயளாலர் அஷ்ஷேக் முர்ஷித் அவர்கள் தற்கால பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். 

இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட உலமாக்கள் ,துறைசார்ந்தவர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் தலைவர் அஷ் ஷைக் அர்கம் நூரமீத் அவர்களின் தலைமையில் 24/01/2018 அன்று புதன் கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

22.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்து கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துறை கிளையின் தேர்தல் வழிகாட்டல் நிகழ்சி

17.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துறை கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று பாணந்துறை பள்ளிமுல்லை ஜும்ஆ பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டு  அரபுக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களுக்கு திறந்த பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பயிற்றுவிக்கும் பாடநெறி சம்பந்தமாக கண்டி மாவட்டக் கிளையினால் கண்டி மாவட்ட அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், உப அதிபர்கள் ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று 2018.01.22 ஆம் திகதி கண்டி மாவட்டக் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-2018 விடயத்தில் முன்னெடுத்துவரும் முன்னெடுப்புக்கள்

நாட்டினதும் பிரேதசத்தினதும் சுமூக நிலையை கருத்திற்கொண்டும் நல்லதோர் அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் இத்தேர்தல் விடயத்தில் கட்சிகள், வட்டார வேட்பாளர்கள், சிவில் சமூக தலைமைகள், பொதுமக்கள் போன்ற பல தரப்பினருக்குமான பின்வரும் இஸ்லாமிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்களை அல்லாஹ்வின் அருளோடு கிண்ணியா உலமா சபை ஷூராசபையுடனும் இணைந்து இதுவரை மேற்கொண்டு வருகின்றது. முன்னெடுப்புக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.

 

# வேட்புமணுத்தாக்கலின்      முன்னபான கட்சிப்பிரதிகளுடனான உடன்பாடுகள், ஒழுங்குகள்.

# சகல மஸ்ஜித்களிளும் விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கான விஷேட குத்பாவழிகாட்டல்.

#வேட்பாளர்களுக்கான வழிகாட்டல்களும் கலந்துரையாடலும்.

#அனைத்து மஸ்ஜித் இமாம்கள் நிர்வாகிகளுடனான கலந்துரையாடலும்

வழிகாட்டலும்.

#பொது சபைகள் , மஸ்ஜித்கள், நிறுவனங்களின் பொறுப்புக்களில் இருப்போர் தேர்தல்பணிகளில் ஈடுபடுதல் தொடர்பிலான விஷேட தீர்மானம் அமுலாக்கம்.

 

இவ்விடயங்களில் ஒத்துழைத்து சுமூக நிலையை வேட்பாளர்கள், பொதுமக்கள், பொது நிறுவனங்கள், சபைகளின் தலைமைகள் அனைவருக்கும் பேணி நடக்க முன்வர வேண்டும்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை "ஈமானிய வசந்தம்" என்ற மாதாந்த கிராமிய தஃவா நிகழ்ச்சியினை சூரங்கல்,ஸலாமத் நகர் ஆகிய கிராமங்களை மையப்படுத்தி (19.01.2018) ஆம் திகதி அன்று  ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
♦இரு பாடசாலைகளில் ஒமழுங்குபடுத்தப்பட்ட மாணவரகளுக்கான இஸ்லாமிய வழி காட்டல் நிகழ்ச்சி.
♦இரு பள்ளிவாசல்களில் ஒரே தலைப்பிலான குத்பா.
♦இரு பள்ளிவாசல்களில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி.
♦பிரதேசத்திலுள்ள பள்ளி நிருவாகிகள் கி.அபிவிருத்திச் சங்கம்,இளைஞ்சர் அமைப்புகளுடனான கலந்துரையாடல்.
♦ஒவ்வொரு மஹல்லாவுக்கும் தஃவா குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்சியை முன்னெடுக்க ஆலோசனையும் வழங்கப்பட்டது.
♦ஜம்இய்யாவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
♦மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து 9.00 மணி வரை திறந்த வெளியில் இரண்டு தலைப்புக்களில் பொது பயான் நடை பெற்றது.
♦அக்கிராமத்தில் மார்க்கப் பணியில் ஈடுபட்ட மூத்த இரு சகோதரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

கிராமங்களில் ஈமான்,இபாதத்தை அதிகரித்து,பாவச் சூழலை தடுத்தல்,கல்வி பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவி கிராமிய கட்டுக் கோப்பை வலுப்படுத்துவனூடாக ஆரோக்கியமான இஸ்லாமிய சூழலை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அன்மையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளையின்14 உப குழுக்களும் 3வருட,1வருட திட்டங்களை வகுத்து செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் "ஈமானிய வசந்தம் மாதாந்த கிராமிய தஃவா நிகழ்வு" தஃவா பிரிவினால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா