அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் சமூக சேவைப் பிரிவு கண்டி மாவட்ட காதி நீதிபதிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை 2017.12.17 ம் தகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி மாவட்ட  கிளையின்காரியாலயத்தில் நடாத்தியது.
அதில் நம் சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துக்களை குறைக்கவும் கனவன், மனைவி இரு தரப்பினருக்குமிடையில் புரிந்துனர்வை உண்டு பன்னும் நோக்கில் அவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்சிகளை கண்டி மாவட்ட ஜம்இய்யா ஏற்பாடு செய்வை கண்டி மாவட்ட காதி நீதிபதிகள் பாராட்டியதுடன் பூரன ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.


அத்துடன் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1.கண்டி மாவட்ட ஜம்இய்யாவினால் மாதாந்தம் Psychology counsling நிகழ்சிகள் ஏற்பாடு செய்தல்.(ஒவ்வொறு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமை)

2. காதி நீதிபதிகள் அவர்களிடம் விவாகரத்திற்கு விண்ணப்பிப்பவர்களை அந் நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல்.

3. அந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ counsling செய்யப்பட்டு கண்டி மாவட்ட ஜம்இய்யாவினால் சான்றிதழ் ஒன்று வழங்குதல்.

4. காதி நீதிபதிகள் அச்சான்றிதழை பார்வையிட்ட பின்னரே தேவைப்படின் விவாகரத்திற்கான அனுமதியை வழங்குதல்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா