2021 ஒக்டோபர் மாதத்திற்கான கிளைச் செய்திகள்

டிச 22, 2021

5. 2021.10.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை அவரது பண்டுவஸ்நுவர காரியாலயத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர். மேற்படி கலந்துரையாடலில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பான தெளிவுகள் முன் வைக்கப்பட்டதோடு மத்ரஸாக்களின் பாடத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

2021.10.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் 10 பன்சலைகளுக்கு சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தின் தொடர் நிகழ்வாக 10 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், மீஸான் எஸ்N;டட் உரிமையாளரது பங்களிப்புடன் 2 கிலோ தேயிலையும் வழங்கிவைக்கப்பட்டது. புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வை மையப்படுத்தி இத்தகையதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பன்சலைகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மஸ்ஜித் நிர்வாகத்தின் ஊடாக இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2021.10.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவ லங்காபுர பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி தம்பாளை ஜாமிஉல் ஹிலால் பள்ளியில் நடைபெற்றது.

2021.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுலுகம கிளையின் மாதாந்த நிர்வாக பொதுக் கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தளை நகர் கிளையின் செயற்குழுக் கூட்டம் டவுன் ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 4.00 மணிக்கு கல்விக் குழுவுடனான சந்திப்பும், 2021 உயர்தர மாணவர்களது இன்றைய நிலையும், அவர்களது பெறுபேறுகளை கூட்டுவதன் அவசியம் தொடர்பாகவும், கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

2021.10.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிரதேசக் கிளையின் 2021 ஒக்டோபர் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் அஹதியா நகரில் நடைபெற்றது.

6. 2021.10.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா மாளிகாவத்தை மஸ்ஜிதுன் நூர் ஜுமுஆ மஸ்ஜிதில் தலைவர் அஷ்ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டம் திவுரும்பொல பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய ஜுமுஆ மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரிஹாமம், அஹதியா நகர், திவுரும்பொல, ஹபரவௌ, எதுன்ஹககொட்டுவ ஆகிய ஊர்களின் மஸ்ஜித் நிருவாகிகளும் பிராந்திய உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.

2021.10.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிலாபம் மாதம்பைக் கிளையின் செப்டம்பர் மாதத்திற்கான கூட்டம் தலைவர் அஷ்ஷைக் ரகீப் (மனாரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட எலபடகம பிரதேசக் கிளையின் 2021 ஒக்டோபர் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் நஸ்ரின் (ரஷாதி) அவர்களின் தலைமையில் மன்நூர் பழைய பள்ளி வாயலில் நடைபெற்றது.

2021.10.16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி நகர கிளை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அல்குர்ஆனை வழங்கி வைக்கும் திட்டத்தை ஆரம்பித்து அதன் முதல் கட்டமாக கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் ஒரு சில பௌத்த ஆலயங்களுக்கும் வழங்கிவைத்தது.

2021.10.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் உப தலைவர் அஷ்ஷைக் தாஹிர் (காஷிபி) அவர்களின் தலைமையில் ஜம்இய்யா காரியாலயத்தில்; நடைபெற்றது.

2021.10.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துறை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கடுவ ஸாவியா மஸ்ஜிதில் கிளைத் தலைவர் அஷ்ஷைக் அபுல் கலாம் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கற்பிட்டி பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் ஏ.டப்லியு.எம். ஜெமீல் கான் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரியில் நடைபெற்றது.

2021.10.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த கூட்டம், மாவட்டத் தலைவர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு - 2 கொம்பனித்தெரு பத்ரியா ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021-10-17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அட்டாளைச்சேனை பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்; கிளைத் தலைவர் அஷ்ஷைக் அபுல் ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் களுத்துறை நஸ்ருல் ஹுதா பெண்கள் அறபுக் கல்லூரியில் மாவட்டத் தலைவர் அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்ட நிர்வாகக் கூட்டம் மற்றும் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் அஷ்ஷைக் முப்தி தாரிக் (ரவ்ழி) அவர்களின் தலைமையில் ணுழழஅ ஊடாக நடைபெற்றது.

2021.10.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளை உறுப்பினர்களின் கலந்துரையாடல் அஷ்ஷைக் நஸ்ரின் (ரவ்ழி) அவர்களின் தலைமையில் ணுழழஅ ஊடாக நடைபெற்றது.

2021.10.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் மாதாந்த மஷூரா தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.10.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் எம்.ஐ.எம். ஷுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

2021.10.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்ட உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான விஷேட நிகழ்ச்சி இரத்தினபுரி ஸத்தார் திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் உட்பட தாய் ஜம்இய்யாவின் சில உலமாக்கள் இரத்தினபுரி மாவட்டத்துக்கு வருகை தந்து மாவட்டத்திலுள்ள உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான விஷேட நிகழ்ச்சிகளை நடாத்தினார்கள். முதலாவது அமர்வில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றதோடு இரண்டாவது அமரவில் மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

2021.10.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுலுகம பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக் கூட்டம் ஜிஸ்தியா மஹல்லாவில் நடைபெற்றது.

2021.10.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் மாத்தளை ஹலீமிய்யா அரபுக் கல்லூரி நூலகத்தில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் என்.எம். இர்ஸான் முப்தி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.