அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்

ஜன 28, 2019

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் இன்சாப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

  • NNP நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மஸ்ஜித் ரீதியாக 06 பேர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்.
  • பிரதேச கிளைகளில் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வொன்றை நடாத்துதல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.