அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

டிச 17, 2018

16.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கொதடுவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2018ஆம் ஆண்டில் கொழும்பு கிழக்குக் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றிய அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன்  2019 ஆண்டிற்கான திட்டமிடலும் இடம் பெற்றதுடன் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

  • 2019 ஆண்டுக்குறிய மாதாந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அடுத்து வரக்கூடய செவ்வாய் கிழமை நாட்களில் இஷா தொழுகையின் பின்னரும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை காலையிலும் நடாத்த முடிவு செய்யப்பட்டது.
  • எமது கிளையின் பிரதேச பள்ளிவாயல் இமாம்களுக்கு தேவையான திறன் வழுவூட்டல் நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமான விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

  • எமது கிளை உலமாக்களின் வருடாந்த ஒன்று கூடலை 11.05.2019 ஆம் திகதி நடாத்த முடிவு செய்யப்பட்டது.

  • தேசிய வலையமைப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றி கலந்தறையாடப்பட்டது.

  • வாலிபர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னெடுப்பதற்காக 10 இளம் உலமாக்கள் தெரிவு செய்யப்பட்டு இக்கூட்டதிற்கு அழைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றி கலந்தறையாடப்பட்டது.

  • இளம் உலமாக்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் (Career Guidance) நிகழ்ச்சிகளை நடாத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

  • பள்ளிவாயல்களில் பெரியவர்களுக்கான முறைபடுத்தப்பட்ட மார்க்க (தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ்) வகுப்புகளை நடாத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதுடன் அதனை வடிவமைப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது.

  • எமது ஜம்இய்யாவிற்கென நிரந்தரமான அலுவலகமொன்றை அமைப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
  • வழமைப்போன்று ஜந்தாம் வாரம் வரும் வெள்ளிக்கிழமை நாட்களில் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும்ஆ மஸ்ஜித்களிலும் ஒரே தலைப்பின் கீழ் குத்பா பிரசங்கம் நடாத்துவதாக  முடிவு செய்யப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.