அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

அக் 30, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் 29.10.2018 அன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷபீக் (ஸஹ்ரி) அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதோடு பின்வரும் விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

✒ மஸ்ஜித் நிருவாகிகள், துறைசார்ந்தவர், பாடசாலை அதிபர்களை அழைத்து முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புனர்வு நிகழ்ச்சியொன்றை நடாத்துதல்

✒ எதிர்வரும் மாதம் 25ம் திகதி நடைபெற இருக்கும் ஜம்இய்யாவின் NNP - தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்விற்கு எமது பிரதேச ரீதியாக 30 பேர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல்.

✒ கிளையின் பொருளாலரின் ராஜினாமா பற்றி சபையோர் கவனத்திற் கொண்டு வரப்பட்டு அது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

✒ எமது பிரதேசத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை (KOL) சந்திப்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.