அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளை நிந்தவூர் ஸக்காத் சபையுடனான சந்திப்பு

அக் 26, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 20.10.2018 அன்று இடம் பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நிந்தவூரில் இயங்கி வரும் ஸக்காத் சபையுடனான சந்திப்பு  2018.10.23 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது ஸக்காத் சபையின் செயற்பாடுகள் சம்பந்தமாக கிளையின் உறுப்பினர்கள் கேட்டறிந்து கொண்டதுடன், இன்னும் பல விடயங்கள் சம்பந்தமான அபிப்பிராயங்களும், ஆலோசனைகளும் கிளையின் உறுப்பினர்களினால்  முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் கிளை சார்பாக பல உலமாக்களும், ஸக்காத் சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.