அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட பிராந்திய கிளைகளின் புதிய நிர்வாகத் தெரிவு 04/08/2018 ஆம் திகதி சனிக்கிழமை வரகாபொலை, தள்துவ, கிரிங்கதெனிய ஆகிய இடங்களில் இடம்பெற்றது. மஃரிப் தொழுகையை தொடர்ந்து கேகாலை மாவட்டத்திற்கான நிருவாகத் தெரிவும் இடம் பெற்றது. இத்தெரிவில் தலைவராக அஷ் ஷேக் அக்ரம் ஜூனைத் அவர்களும், செயலாளராக அஷ் ஷேக் நாழிம் அவர்களும், பொருளாளராக அஷ் ஷேக் இக்பால் அவர்களும், உப தலைவர்களாக அஷ் ஷேக் ஹுசைன், அஷ் ஷேக் அன்பfஸ் ஆகியோரும், உப செயலாளராக அஷ் ஷேக் ஹஸன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா