அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மக்தப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முன்னெடுப்பு

பிப் 20, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அம்பாரை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் 13/02/2018 ஆம் திகதி இடம் பெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திற்கமைவாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  மக்தப் திட்டம் அண்மைக் காலமாக கல்முனைப் பிராந்தியத்தில்  சரிவுகண்டு வருவதற்கான காரணங்களைக் கண்டறியும் பொருட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் முதலாவது அமர்வு 17/02/2018 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை பாகியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்வமர்வில் குழுவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் ULS.ஹமீத் ஹாமி , மாவட்ட உதவித் தலைவர் அஷ்ஷெய்க் ILM.ஹாஷிம் மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் AL.நாஸிர் கனி ஹாமி,பொருளாளர் அஷ்ஷெய்க் ZM.நதீர் ஷர்கி மற்றும் அஷ்ஷெய்க் FMA .அன்ஸார்  மௌலானா நளீமி உள்ளிட்ட வேறு பலரும் கலந்து கொண்டனர்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.