அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் உடனான உத்தியோகபூர்வ சந்திப்பு

பிப் 20, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமாருடனான சந்திப்பொன்று 17.02.2018 அன்று காலை கிண்ணியா கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பிரதேசத்தின் சுத்தம், சுகாதார  மேம்பாடு, வெள்ளிக்கிழமை குத்பா நேரத்தை கருத்திற் கொண்டு நோயாளர் பார்வையிடும் பகல் நேரத்தை மாற்றுதல் மற்றும்  வைத்தியசாலை ஊழியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன் போது  கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள்  எடுக்கப்பட்டதுடன் வைத்திய அத்தியட்சகர் Dr.சதீஸ்குமார் அவர்களுக்கு அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றும் வழங்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

 

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.