அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைச் செய்திகள் - நவம்பர் - 2023

டிச 05, 2023

2023.11.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் "முஅல்லபத்துல் குலூப்களை பராமரிப்பதன் முக்கியத்துவம்" தொடர்பான தர்பிய்யா நிகழ்வு நிந்தவூர் ஜுமுஆப் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலும் ஊரில் உள்ள அனைத்து 'முஅல்லபத்துல் குலூப்களுக்கும்' இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காகவும், தேச நலனுக்காகவும் இஸ்லாத்தை போதிப்பதற்கான இரு வருட கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

 

2023.11.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் மாத்தளை டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.11.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் நீர்கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் சமூகங்களுக்கிடையில் நல்லுறவைப் கட்டியெழுப்பல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சமூக விஞ்ஞானிகள் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான இஸ்லாம் பற்றிய தெளிவூட்டல் நிகழ்ச்சி நீர்கொழும்பு காமச்சோடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.11.07 ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய முன்பள்ளி பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளுக்கான இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல் கருத்தரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

2023.11.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளையின் எதிர்வரும் மூன்றாண்டுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய செயற்குழுவினர் தமது முதல் பணியாக கொலன்னாவை மஸ்ஜித் சம்மேளனத்துடன் (KDMF) சிநேகபூர்வ சந்திப்பொன்றினை மேற்கொண்டனர்.

 

2023.11.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை மத்திய முகாமின் மாதாந்த கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ. தஸ்தீக் மதனி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

 

2023.11.10 ஆம் திகதி நிதா நிறுவனத்திற்கும் ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளைக்கும் மத்தியில் விஷேட சந்திப்பும் கலந்துரையாடலும் நிதா நிறுவன காரியாலயத்தில் நடைபெற்றது. நிதா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஹஸன் பரீத் பின்னூரி அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

2023.11.11 ஆம் திகதி ஜம்இய்யாவின் ஹெம்மாதகம கிளையின் புதிய நிர்வாக சபையின் இரண்டாவது உத்தியோகபூர்வ அமர்வு கிளைக் காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷைக் நஸார் ரஹ்மானியின் தலைமையிலும் செயலாளர் அஷ்-ஷைக் நாழிம் ஸஹ்ரியின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.

 

2023.11.11 ஆம் திகதி ஜம்இய்யாவின் கிரிங்கதெனிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கான ஐந்தாவது கூட்டமும், மாலியத்த மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகிகளுடனான சந்திப்பும் ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே.ஏ. ஹுஸைன் ஹாபிழ் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

 

2023.11.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பஹா மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் கல்லெலிய ஜுமுஆ மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் நுஹ்மான் இன்ஆமி தலையில் நடைபெற்றது.

 

2023.11.11 ஆம் திகதி கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் தலைமையில் மாவட்ட ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.11.11 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் நவம்பர் மாதத்திற்கான கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அலாவுதீன் பலாஹி அவர்களின் தலைமையில் மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.11.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் நவம்பர் மாத ஒன்று கூடல் கோட்டை மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

2023.11.12 ஆம் திகதி ஜம்இய்யாவின் நிந்தவூர் கிளை, நிந்தவூர் ஜுமுஆப் பள்ளிவாயல், நிந்தவூர் ஸகாத் நிதியம், மஜ்மா ஆகியன இணைந்து நிந்தவூரிலுள்ள, இஸ்லாத்தில் புதிதாக இணைந்த சுமார் 54 முஅல்லபத்துல் குலூப் குடும்பங்களுக்கான ஆன்மீக வழிகாட்டல்களை, சமூக ரீதியான பிணைப்புகளை ஏற்படுத்தும் விதமாக நிந்தவூரின் ஜுமுஆப் பள்ளிவாயல் மற்றும் அட்டப்பள்ளம் பக்ர் பள்ளிவாயல் ஆகியவற்றை கற்கை நிலையங்களாக செயல்படுத்தி பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

2023.11.15 ஆம் திகதி நிந்தவூர் ஜம்இய்யாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கமு/அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான "ஒழுக்கமுள்ள உயர் மாணவர் சமூகம்" எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.

 

2023.11.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் தஃவாக்குழுவின் ஏற்பாட்டில் நிந்தவூரிலுள்ள அனைத்து பள்ளிவாயல் நிருவாகங்களையும் மையப்படுத்திய, "பள்ளிவாயல்களினூடாக உயரிய சமூகத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான கருத்தரங்கு நிந்தவூர் ஜுமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

 

2023.11.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெல்கஹகொட கிளையின் அங்கத்தவர்களுக்கான கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். றியாஸ் ஸஹ்ரி அவர்களின் தலைமையில் தெல்கஹகொட மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.

 

2023.11.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த மஷூரா தலைவர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு வெள்ளவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.11.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனைக் கிளையினால் நடாத்தப்பட்டு வருகின்ற மாணவர்களின் ஒழுக்க பண்பாட்டு மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு இஜ்திமாவின் இரண்டாம் கட்டம், மருதமுனை பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாசலில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

 

2023.11.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குருணாகல் மாவட்ட கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். சுஐப் தீனி அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2023.11.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு கிழக்கு கிளையின் புதிய தெரிவின் பின்னரான இரண்டாவது மஷூரா தலைவர் அஷ்-ஷைக் ஏ.என்.எப். பிர்தௌஸ் மன்பஈ அவர்களின் தலைமையில் பொல்வத்த மஸ்ஜிதுன் நூர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.11.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் மாதார்ந்த மஷூரா உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் அவர்களின் தலைமையில் புதுக்கடை மீரானியா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.11.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட கிளையின் மாதாந்த மஷூரா தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வான் (ஹஸனி) அவர்களின் தலைமையில் குருவிட்ட பஸார் பள்ளிவாயிலில் நடைபெற்றது.

 

2023.11.23 திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பசறை பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் அப்துஸ் சலாம் (ஷர்கி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.11.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முள்ளிப்பொத்தானை கிளையின் கல்விப்பிரிவின் அல்-குர்ஆன் மத்ரஸா சம்பந்தமான கூட்டம் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ஹுஸைன் (ஹிழ்ரி) அவர்களின் தலைமையில் சிறாஜ் நகர் ஜம்இய்யா காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் தொடர் கூட்டம் இன்ஷா அல்லாஹ் 2023.12.02 ஆம் திகதி நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 

2023.11.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொள்ள கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் லபீர் அவர்களின் தலைமையில் நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதன்போது செயலாளர் அஷ்-ஷைக் யூஸுப் அவர்களினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

 

2023.11.25 ஆம் திகதி கண்டி வலய பாடசாலைகளின் இஸ்லாம் பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக்கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் அழைக்கப்பட்டிருந்த 17 பாடசாலைகளில் இருந்து 09 பாடசாலைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் மாணவர்கள் கல்வியிலும் குறிப்பாக இஸ்லாம் பாடத்தில் பின்தங்கி இருப்பதற்கான காரணங்கள் முன்வைக்கப்பட்டதோடு அவர்களை முன்னேற்றுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

 

2023.11.28 ஆம் திகதி சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா தொடர்பிலான மஸ்ஜித் நிர்வாகிகளுடனான சந்திப்பு கண்டி வத்தேகெதர ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து முஅல்லிம்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது.

 

2023.11.29 ஆம் திகதி கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரபு மத்ரஸாக்களில் இருந்து இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இஸ்லாம் பாடத்திற்கான கருத்தரங்கு கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் கண்டி மீரா மகாம் மஸ்ஜித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதனை அஷ்-ஷைக் ரியாஸ் நளீமி அவர்கள் நடத்தினார்கள். இக்கருத்தரங்கில் 06 மத்ரஸாக்களில் இருந்து 85 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

 

2023.11.29 ஆம் திகதி அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா கொழும்பு வடக்கு கிளையின் நவம்பர் மாதத்திற்கான 02ஆவது அமர்வு உபதலைவர் அஷ்-ஷைக் அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் கிரேன்ட்பாஸ் மஸ்ஜிதுல் உமர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.11.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளை ஏற்பாட்டில் இம்முறை அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு இலவச முன்னோடிக் கருத்தரங்கு கலாச்சார உத்தியோகத்தர் சகோதரர் அஷ்ரப் அவர்களின்ள தலைமையில் வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

 

-ACJU Media-

Last modified onபுதன்கிழமை, 06 டிசம்பர் 2023 05:12

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.