2024.06.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபிக் கல்லூரிகள் விவகாரக்குழுவினரின் விஷேட ஒன்றுகூடலொன்று குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ZOOM தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்றது.

இதில் கொழும்பு மாவட்டத்திலுள்ள அரபிக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான வலுவூட்டல் செயலமர்வினை நடாத்துவது தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இறுதியில் தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இவ்வொன்றுகூடலில் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர், குழுவின் துணைச் செயலாளர்களான அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத், கல்விக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத், அஷ்-ஷைக் பவாஸ் மற்றும் அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

- ACJU Media -