2024.05.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-நிறைவேற்றுக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் குழுக்கூட்டமானது ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அரபுக்கல்லூரிகளின் நிதி விவகாரங்கள் மற்றும் நிர்வாக, முகாமைத்துவ வழிகாட்டல்கள் அடங்கிய கோவையினை தயாரித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர், குழுவின் துணைச் செயலாளர்களான அஷ்-ஷைக் எந்.எம். ஸைபுல்லாஹ் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத், கல்விக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத், குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

- ACJU Media -