அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு


விஷேட நன்றி நவிலல்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடந்த பத்து தசாப்தகால பயணத்தில் அதன் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணம் செய்த எமது முன்னோர்களை நன்றியோடு நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றாண்டு நிகழ்வு, கடந்த 2023.01.19 ஆம் திகதி அல்லாஹ்வின் பேருதவியால் கொழும்பு சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்ணியமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.


இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தமது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி, அயராது உழைத்த ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகிய எமது கண்ணியத்திற்குரிய ஆலிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சார்பாக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


ஜஸாக்குமுல்லாஹு கைரன்


முன்மாதிரி முஸ்லிம் சமூகக் கட்டுருவாக்கல் என்பது தொடர்ச்சியான உழைப்பை வேண்டிநிற்கின்ற சமூகப் பணியாகும். இக்கூட்டுப் பொறுப்பில் நாமும் பங்குதாரர்களாவோம்.


அல்லாஹு தஆலா உங்கள் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரித்து பூரணமான கூலிகளை வழங்க வேண்டும் என்றும் உங்களது ஆயுளிலும் ஆரோக்கியத்திலும் அபிவிருத்தியைத் தந்தருள வேண்டும் என்றும் உளமார பிரார்த்தனை செய்கிறோம்.

 


தலைவர்
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா