ACJU/FTW/2021/015-430
18.07.2021 (07.12.1442)
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தின் முக்கியமான அமலாகும். ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் அதைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களிலும் ஆடு, மாடு, ஒட்டகம் என்பவற்றிலிருந்து உழ்ஹிய்யாவுடைய நிய்யத்துடன் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும் பிராணிக்குச் சொல்லப்படும்.
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலிருந்து மாத்திரமே உழ்ஹிய்யா நிறைவேறும். இது தொடர்பான மேலதிக விளக்கத்தினை ACJU/FTW/2019/17-368ஆம் இலக்க ஃபத்வாவில் பார்க்கமுடியும்.
https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1734-2019-08-05-11-45-09
உழ்ஹிய்யாப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஆண், பெண் பிராணிகளிலிருந்து உழ்ஹிய்யா நிறைவேறும் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
عن أم كرز رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال:على الغلام شاتان وعلى الجارية شاة لا يضركم ذكرانا كن أو إناثا. (سنن الترمذي: 1516)
ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் (ஆகீகாவாகக் கொடுக்கப்படல் வேண்டும்). அவை ஆண் பிராணியாகவோ பெண் பிராணியாகவோ இருப்பதில் உங்களுக்கு எப்பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உம்மு குர்ஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் அத்-திர்மிதீ : 1516)
குறித்த ஹதீஸ் அகீகா விடயத்தில் குறிப்பிடப்பட்டிருப்பினும் உழ்ஹிய்யா விடயத்திலும் இச்சட்டம் பொருந்தும் என்பதுடன் ஆண், பெண் பிராணிகளிலிருந்து உழ்ஹிய்யா நிறைவேறும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும் என்று இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்-மஜ்மூஃ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகின்றார்கள்.
என்றாலும், அவற்றில் ஆண் பிராணியே மிகவும் ஏற்றமானது என்பது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் மற்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கூற்றாகும்.1
ஆகவே, உழ்ஹிய்யாப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களில் இருந்தும் உழ்ஹிய்யா நிறைவேறும். என்றாலும் ஆண் பிராணிகளே மிகவும் ஏற்றமானவையாகும்.
உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்படும் பிராணிகளின் ஆகக் குறைந்த வயதெல்லை, மாடு, வெள்ளாடு ஆகியவை இரண்டு வருடங்கள் பூர்த்தியானதாகவும் செம்மறி ஆடாயின் ஒரு வருடம் பூர்த்தியானதாகவும்2 ஒட்டகம் ஜந்து வருடங்கள் பூரத்தியானதாகவும் இருத்தல் வேண்டும். இருப்பினும் ஹனபி மத்ஹபின்படி ஆடு ஒரு வருடம் பூர்த்தியானதாக இருந்தாலும் போதுமானதாகும்.3
அத்தோடு அவை நொண்டி, குருடு, செவிடு போன்ற மார்க்கம் தடுத்திருக்கும் குறைகளை விட்டும் நீங்கியிருப்பதுடன் இறைச்சியையோ பெறுமதியையோ குறைக்கும் நோய்கள் அற்றவையாகவும் இருப்பது அவசியமாகும்.4 இன்னும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் நிய்யத்துடன் உரிய நேரத்தில் அதனை நிறைவேற்றுவது அவசியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
---------------------------------------------------------------------------
[1] "يصح التضحية بالذكر وبالانثى بالاجماع وفي الافضل منهما خلاف (الصحيح) الذي نص عليه الشافعي في البويطي وبه قطع كثيرون ان الذكر أفضل من الانثى". (باب الأضحية - المجموع شرح المهذب)
(وَيَجُوزُ ذَكَرٌ وَأُنْثَى) إجْمَاعًا لَكِنَّ الذَّكَرَ وَلَوْ بِلَوْنٍ مَفْضُولٍ فِيمَا يَظْهَرُ أَفْضَلُ؛ لِأَنَّ لَحْمَهُ أَطْيَبُ إلَّا إذَا كَثُرَ نَزَوَانُهُ فَأُنْثَى لَمْ تَلِدْ أَفْضَلُ مِنْهُ وَيُجْزِئُ خُنْثَى إذْ لَا يَخْلُو عَنْهُمَا وَالذَّكَرُ أَفْضَلُ مِنْهُ لِاحْتِمَالِ أُنُوثَتِهِ وَهُوَ أَفْضَلُ مِنْ الْأُنْثَى لِاحْتِمَالِ ذُكُورَتِهِ (وَخَصِىٌّ) لِلِاتِّبَاعِ وَلِأَنَّ لَحْمَهُ أَطْيَبُ وَالْخُصْيَتَانِ غَيْرُ مَقْصُودَتَيْنِ بِالْأَكْلِ عَادَةً بَلْ حَرَّمَ غَيْرُ وَاحِدٍ أَكْلَهُمَا بِخِلَافِ الْإِذْنِ. (كتاب الأضحية - تحفة المحتاج في شرح المنهاج)
"فشرط المجزئ في الأضحية أن يكون من الأنعام ، وهي الإبل والبقر والغنم, سواء في ذلك جميع أنواع الإبل , وجميع أنواع البقر , وجميع أنواع الغنم من الضأن والمعز وأنواعهما , ولا يجزئ غير الأنعام من بقر الوحش وحميره وغيرها بلا خلاف , وسواء الذكر والأنثى من جميع ذلك , ولا خلاف في شيء من هذا عندنا. (باب الأضحية - المجموع شرح المهذب)
[2] وَلَا يُجْزِئُ مِنْ الضَّأْنِ إلَّا الْجَذَعُ وَالْجَذَعَةُ فَصَاعِدًا وَلَا مِنْ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْمَعْزِ إلَّا الثَّنِيُّ أَوْ الثَّنِيَّةُ فَصَاعِدًا هَكَذَا نَصَّ عَلَيْهِ الشَّافِعِيُّ وَقَطَعَ بِهِ الْأَصْحَابُ. "باب الأضحية - المجموع"
وشرط إبل أن يطعن في السنة السادسة وبقر ومعز في الثالث: ة وضأن في الثانية (كتاب الأضحية - منهاج الطالبين)
(وَشَرْطُ إبِلٍ أَنْ يَطْعُنَ) بِضَمِّ الْعَيْنِ (فِي السَّنَةِ السَّادِسَةِ) وَيُعَبَّرُ عَنْهُ بِتَمَامِ الْخَامِسَةِ إذْ مِنْ لَازِمِهِ الطَّعْنُ فِيمَا يَلِيهَا (وَ) شَرْطُ (بَقَرٍ وَمَعْزٍ) أَنْ يَطْعُنَ (فِي) السَّنَةِ (الثَّالِثَةِ) وَيُعَبَّرُ عَنْهُ بِتَمَامِ الثَّانِيَةِ لِذَلِكَ وَكُلٌّ مِنْ هَذِهِ الثَّلَاثَةِ تُسَمَّى ثَنِيَّةً وَمُسِنَّةً (وَ) شَرْطُ (ضَأْنٍ) أَنْ يَطْعُنَ (فِي) السَّنَةِ (الثَّانِيَةِ) وَيُعَبَّرُ عَنْهُ بِتَمَامِ السَّنَةِ. (كتاب الأضحية – تحفة المحتاج في شرح المنهاج)
(وَشَرْطُ إبِلٍ أَنْ يَطْعَنَ فِي السَّنَةِ السَّادِسَةِ، وَبَقَرٍ وَمَعْزٍ فِي) السَّنَةِ (الثَّالِثَةِ، وَضَأْنٍ فِي) السَّنَةِ (الثَّانِيَةِ) بِالْإِجْمَاعِ كَمَا نَقَلَهُ فِي الْمَجْمُوعِ. (كتاب الأضحية - مغني المحتاج)
[3] (وَصَحَّ الْجَذَعُ) ذُو سِتَّةِ أَشْهُرٍ (مِنْ الضَّأْنِ) إنْ كَانَ بِحَيْثُ لَوْ خُلِطَ بِالثَّنَايَا لَا يُمْكِنُ التَّمْيِيزُ مِنْ بُعْدٍ. (وَ) صَحَّ (الثَّنِيُّ) فَصَاعِدًا مِنْ الثَّلَاثَةِ وَالثَّنِيُّ (هُوَ ابْنُ خَمْسٍ مِنْ الْإِبِلِ، وَحَوْلَيْنِ مِنْ الْبَقَرِ وَالْجَامُوسِ، وَحَوْلٌ مِنْ الشَّاةِ) وَالْمَعْزِ وَالْمُتَوَلِّدُ بَيْنَ الْأَهْلِيِّ، وَالْوَحْشِيِّ يَتْبَعُ الْأُمَّ قَالَهُ الْمُصَنِّفُ.( رد المحتار على الدر المختار)
[4] عن البراء رضي الله عنه قال : قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال : أربع لا تجوز في الأضاحي ; العوراء البين عورها ، والمريضة البين مرضها ، والعرجاء البين ظلعها والعجفاء التي لا تنقي. ( سنن الترمذي : 1497)