ACJU/RP/2024/04/14

2024.03.18 (1445.09.07)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2024.03.22ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'சங்கைமிகு ரமழானும் அதன் வணக்கங்களும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'சங்கைமிகு ரமழானும் அதன் வணக்கங்களும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1emPRePqfVaYv7csZwHEzqAs32xJu34Zu/view?usp=sharing

------------------------------------------------------------------------------------------------

ரமழான் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இது ஷஃபான் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும்.

ரமழான் மாதத்தின் மாண்புகள்:

ரமழான் மாதம் மிகவும் சிறப்பான, மகத்தான ஒரு மாதமாகும். இம்மாதம் பல விடயங்களினால் ஏனைய மாதங்களை விட சிறப்புப் பெறுகின்றது.

1. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற மாதம்:

عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ) (صحيح البخاري: 3277)


அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'ரமழான் மாதம் வந்துவிட்டால், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. மேலும் ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றன என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 3277)

2. நரக விடுதலை அளிக்கப்படும் மாதம்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ (سنن الترمذي : 682)

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'ரமழான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களும் ஜின்களும் சங்கிலியால் விலங்கிடப்படுகிறார்கள். நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. அவற்றில் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை. மேலும் ஓர் அழைப்பாளர் நலவைத் தேடுபவரே முன்னோக்குவீராக!” மேலும் தீமையை நாடுபவனே! நிறுத்திக் கொள்வாயாக! என அழைப்பு விடுக்கிறார். அல்லாஹ்வுக்கு நரக நெருப்பிலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் இருக்கின்றார்கள். அது ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகிறது. என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதீ - 682)

3. அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதம்:

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ (البقرة: 185)

'ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் அல்-குர்ஆன் (எனும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.” (அத்தியாயம்: அல்-பகராஹ், வசனம்: 185)

4. லைலதுல் கத்ரை உள்ளடக்கிய மாதம்:

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ (صحيح البخاري: 2017)


ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 2017)

5. பாவமன்னிப்பு வழங்கப்படும் மாதம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ) (صحيح البخاري:38)

“யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்”. (ஸஹீஹுல் புகாரி: 38)


عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ) (صحيح البخاري: 37)

“யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும்; இரவு வணக்கத்தில் ஈடுபடுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 38)

 

ரமழான் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்:

01. பத்ருடைய நிகழ்வு இடம்பெற்றமை - ஹிஜ்ரி 02 ஆம் ஆண்டு
(நூல்: அல்பிதாயாஹ் வன்-நிஹாயாஹ், பாகம்: 03)

02. ஸகாத்துல் ஃபித்ர் கடமையாக்கப்பட்டமை - ஹிஜ்ரி 02 ஆம் ஆண்டு
(நூல்: அஸ்னல் மதாலிப், பாகம்: 04)

03. ஹஸன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பிறப்பு இடம்பெற்றமை - ஹிஜ்ரி 03 ஆம் ஆண்டு (நூல்: அத்-தபகாத்துல் குப்ரா, பாகம்: 01)

04. அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தமை - ஹிஜ்ரி 08ஆம் ஆண்டு (நூல்: அல்-பிதாயாஹ் வன்நிஹாயாஹ், பாகம்: 04)

05. ஃபத்ஹ் மக்காஹ் (மக்கா வெற்றி) இடம்பெற்றமை - ஹிஜ்ரி 08ஆம் ஆண்டு (நூல்: தாரீகுத் தப்ரி, பாகம்: 03)

06. ஹழ்ரத் பிலால் இப்னு ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவில் முதல் தடவையாக அதான் கூறியமை - ஹிஜ்ரி 08 ஆம் ஆண்டு (நூல்: அல்-பிதாயஹ் வன்-நிஹாயாஹ், பாகம்: 04)

 

ரமழானில் மேற்கொள்ளப்படும் வணக்கவழிபாடுகள்

ரமழான் மாதத்துக்கென பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் காணப்படுகின்றன.

1. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்:

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.

عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ" (صحيح البخاري: 08)

அப்துல்லாஹ் பின் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியளிப்பது, தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் வழங்குவது, ஹஜ் செய்வது மற்றும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது (ஆகிய ஐந்தும்) என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 08)

2. அல்-குர்ஆன் ஓதுதல் மற்றும் செவிமடுத்தல்:

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ (صحيح البخاري: 06 )

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) அல்-குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாக அல்-குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.” ( ஸஹீஹுல் புகாரி, 06)

3. இரவு வணக்கம் (தராவீஹ், தஹஜ்ஜுத், வித்ர்):

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ) (صحيح البخاري: 37)

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் 'நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( ஸஹீஹுல் புகாரி: 37)


4. தானதர்மம் வழங்குதல்:

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ (صحيح البخاري: 06)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாக அல்-குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, 06)

5. நோன்பாளியின் துஆ:

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ثَلَاثٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ، الإِمَامُ العَادِلُ، وَالصَّائِمُ حِينَ يُفْطِرُ، وَدَعْوَةُ المَظْلُومِ يَرْفَعُهَا فَوْقَ الغَمَامِ، وَتُفَتَّحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (رواه الترمذي: 3598 )

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'பிரார்த்தனை நிராகரிக்கப்படாத மூன்று பேர் உள்ளனர்: நோன்பாளி நோன்பு திறக்கும் வரை, நேர்மையான தலைவர் மற்றும் அநீதியிழைக்கப்பட்ட நபரின் பிரார்த்தனை. அல்லாஹ் அதை மேகங்களுக்கு மேல் உயர்த்தி, அதற்கு வானத்தின் வாயில்களைத் திறக்கிறான். மேலும் அல்லாஹு தஆலா கூறுகின்றான்: 'என் கண்ணியத்தின் மீது சத்தியமாக சிறிது காலத்திற்குப் பிறகேனும் நான் நிச்சயமாக உங்களுக்கு உதவுவேன் என அல்லாஹு தஆலா கூறுகின்றான் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். (ஸ{னனுத் திர்மிதீ - 3598)


6. உம்ரா செய்தல்:

عن ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُخْبِرُنَا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، - سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا -: «مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا؟»، قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ، فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ، لِزَوْجِهَا وَابْنِهَا، وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ. (صحيح البخاري: 1863)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்மு ஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீர் ஹஜ்ஜுக்கு வர என்ன தடை? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, 'என் கணவரே காரணம். அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார். மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது (இதுவே காரணம்) என்று கூறினார். 'ரமழானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 1863)

7. நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தல்:

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا» (رواه الترمذي : 807 هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ)

ஸைத் பின் காலித் அல் ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதீ - 807)

8. இறுதிப் பத்தில் இஃதிகாஃப் இருத்தல்:

عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ (صحيح البخاري: 2026)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.” (ஸஹீஹுல் புகாரி - 2026)

9. லைலதுல் கத்ர் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்:

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ .(صحيح البخاري: 1901)

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 1901)

எனவே, மலர்ந்திருக்கும் இவ்வருட மாண்புமிகு ரமழானை நோன்பு மற்றும் ஏனைய அமல்களைக் கொண்டு உயிர்ப்பித்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் சுவர்க்கத்தையும் அடைய முழு மூச்சாய் இரவு பகலாக முயற்சிப்போம்.

வல்ல நாயன் அல்லாஹ் எம்மனைவரது பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸை எம்மனைவருக்கும் வழங்குவானாக!


முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/RP/2024-2-11
2024.02.13 (1445.08.02)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2024.02.16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'ஷஃபானுடைய அமல்கள் மூலம் ரமழானுக்கு தயாராவோம்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'ஷஃபானுடைய அமல்கள் மூலம் ரமழானுக்கு தயாராவோம்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/17EfeeXnwMGtBHfNt5gCRNyJyvxSBuz9Y/view?usp=sharing

------------------------------------------------------------------------------------------------------------------

ஷஃபான் மாதம்

அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஷஃபான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. ஷஃபான் மாதம் சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும். இது புனிதமிக்க ரமழானுக்கு முன்னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாதமாகும்.

ஷஃபான் எனும் அரபுச் சொல் ‘ஷிஃபுன்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஷஃபான் எனும் சொல் அரபு மொழியில் கணவாய், ஒன்றுசேர்தல், பரவுதல் என்ற பல கருத்துக்களை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது. ரமழான் மாதத்தைப் போன்று இந்த மாதத்திலும் அதிகமான நன்மைகள் ஒன்று சேர்ந்து பரவிக் காணப்படுவதனால் ஷஃபான் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.1

 

ஷஃபானின் மாண்புகள்

இம்மாதத்தின் சிறப்பைப் பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

عن أسامة بن زيد رضيَ الله عنهما أنَّه سأل النَّبيَّ صَلَّى الله عليه وسَلَّم فقال: يا رسول الله، لم أركَ تصوم شهرًا منَ الشهور ما تصوم في شعبان، فقال صَلَّى الله عليه وسَلَّم: (ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى الله تعالى فأحب أن يُرْفعَ عملي وأنا صائم ) (أخرجه النسائي في السنن، كتاب الصيام : 2357)

உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள் ‘மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் (ஷஃபான்) விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அம்மாதத்தில் அல்லாஹு தஆலாவின் பால் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ எனக் கூறினார்கள். (நஸாஈ: 2357)

 

ஷஃபான் மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

1. ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டமை. (அல்-மஜ்மூஉ: பாகம்: 06)2

2. ஹிஜ்ரி 03ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹப்ஸா பின்த் உமர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தமை. (அத்தபகாத்துல் குப்ரா : பாகம்: 08)3

3. ஹிஜ்ரி 04ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ஹுஸைன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தமை. (அல்-பிதாயஹ் வன்நிஹாயஹ்: பாகம்: 04)

4. ஹிஜ்ரி 09ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருமை மகளும் கலீபா உஸ்மான் பின் அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியுமான உம்மு குல்தூம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணமடைந்தமை (அல்-பிதாயஹ் வன்நிஹாயஹ்: பாகம்: 05)4

 

ஷஃபானில் நோன்பு நோற்றல்

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، حَدَّثَتْهُ قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ " (رواه صحيح البخاري : 1970)

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஃபானில் முழு மாதமும் நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.” (ஸஹீஹுல் புகாரி: 1970)

عَبْدَ اللهِ بْنَ أَبِي قَيْسٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ رضي الله عنها، تَقُولُ: (كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللهِ ﷺ أَنْ يَصُومَهُ شَعْبَان كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ) (سنن النسائي2350 : – سنن أبي داود:2101)

“நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதனைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அபூதாவூத்: 2101, நஸாஈ: 2350)

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து ஷஃபானில் அதிகமதிகம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

ஷஃபானின் கடைசி 15 நாட்களில் நோன்பு நோற்றல்

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருந்த போதிலும், இந்த மாதத்தின் ஆரம்ப 15 நாட்களில் நோன்பு நோற்காமல் இருந்த ஒருவர் கடைசி 15 நாட்களில் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டதாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَقِيَ نِصْفٌ مِنْ شَعْبَانَ فَلَا تَصُومُوا»: (رواه الترمذي :738 ,وقال رحمه الله «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ)

“நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள், ஷஃபான் மாதத்தின் அரைப்பகுதி எஞ்சியிருந்தால் நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் எனக் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.”5

என்றாலும், ஷஃபான் மாதத்தின் ஆரம்ப 15 நாட்களில் சில நோன்புகளை நோற்றவர், வழமையாக திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் நோன்பு நோற்பவர் அவ்வாறே அய்யாமுல் பீழ் உடைய நாட்களில் நோன்பு நோற்றவருக்கு இம்மாதத்தில் இரண்டாவது 15 நாட்களில் நோன்பது நோற்பதற்கு தடையேதுமில்லை. அதேபோன்று வாஜிபான நேர்ச்சை, (கப்பாரா) குற்றப் பரிகாரத்திற்குரிய நோன்புகள் மற்றும் (கழா) விடுபட்ட நோன்புகள் போன்றவற்றை ஷஃபான் உடைய கடைசி 15இல் நோற்பதற்கு அனுமதியுண்டு என இமாம் “இப்னு ஹஜர் ஹைதமீ” ரஹிமஹுல்லாஹ் உட்பட ஏனைய அறிஞர்களும் கூறுகின்றனர்.6

 

ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவின் சிறப்புக்கள்

ஷஃபான் மாதம் பிறை 15ஆம் இரவுக்கு லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்று அழைக்கப்படுகின்றது.7

ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவைப் பொறுத்தவரையில் அவ்விரவு ஒரு சிறப்பான இரவாகும். இதனை பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹு தஆலா தனது படைப்பினங்களில் கொலை செய்தவர் இன்னும் குரோதம் வைத்துக் கொண்டிருப்பவர் ஆகிய இரண்டு பேரையும் தவிர ஏனையோருக்கு ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவன்று பாவமன்னிப்பு வழங்குகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.8

 

15ஆம் இரவு பற்றிய மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள்

மேற்குறித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸை அடிப்படையாக வைத்து ஷஃபானின் 15ஆம் இரவை தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ரு, துஆக்கள் மற்றும் ஹதீஸ்களில் வந்துள்ள அமல்கள் மூலம் உயிர்ப்பிப்பது சுன்னத்தாகும் என்று நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களும் கூறுகின்றனர்.

 

இமாம்களின் கூற்றுக்கள் பின்வருமாறு:

இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள்: ஷஃபானுடைய 15ஆம் இரவும் துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய இரவாகும் என்று கூறியுள்ளார்கள். (அல்-உம்மு)9

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு நுஜைம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ரமழானுடைய பத்து இரவுகள், இரண்டு பெருநாட்களுடைய இரவுகள், துல் ஹிஜ்ஜாவின் பத்து இரவுகள், ஷஃபானுடைய 15ஆம் இரவு ஆகிய இரவுகளை அமல்களைக் கொண்டு உயிர்ப்பிப்பது சுன்னத்துகளில் உள்ளதாகும். (அல்-பஹ்ருர் றாஇக்)10

மேலும், மாலிக் மத்ஹபுடைய அறிஞர்கள்: அந்த இரவுகளை (அதாவது ஷஃபான் நடுப்பகுதியின் இரவை) உயிர்ப்பிப்பது விரும்பத்தக்கதாகும் என்று கூறுகின்றனர். (அத்-தாஜ் வல்- இக்லீல்)11

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களும் இக்கருத்தையே கூறுகின்றனர். இப்னு தைமிய்யா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஷஃபான் 15 ஆம் இரவைப் பொறுத்தவரையில் அதனது சிறப்புகள் சம்பந்தமாக அதிகமான ஹதீஸ்களும், அறிவிப்புக்களும் வந்துள்ளன. ஸலபுகளில் ஒரு கூட்டம் இந்த இரவில் தொழக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரவில் மாத்திரம் ஒருவர் குறிப்பிட்டுத் தொழுவதற்கு ஸலபுகளின் முன்மாதிரியும், ஆதாரங்களும் இருக்கின்றன. இது போன்றவைகள் மறுக்கப்படமாட்டாது. (மஜ்மூஃ அல்-பதாவா)12

எனவே இவ்விரவில் தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர், துஆக்கள் இன்னும் ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ள வழமையாகச் செய்துவரும் அமல்களைச் செய்வதில் கவனம் செலுத்தல் முக்கியமானதாகும்.

 

15ஆம் நாளில் நோன்பு நோற்றல்

15ம் நாளில் நோன்பு நோற்பது பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “ஷஃபான் மாதத்தின் அரைப் பகுதியின் இரவு வந்து விட்டால் அதன் இரவில் நின்று வணங்குங்கள். மேலும் அதன் பகல் பொழுதில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹு தஆலா அன்று இரவு தனது அடியார்களைப் பார்த்து 'உங்களில் எவரும் என்னிடத்தில் பாவமன்னிப்பு கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு அதை வழங்குகின்றேன். உங்களில் நோய்வாய்ப்பட்டவர் இல்லையா? அவருக்கு ஆரோக்கியமளிக்கின்றேன்' என்று பஜ்ர் வரைக்கும் கேட்கின்றான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.13

என்றாலும் இந்த ஹதீஹுடைய அறிவிப்பாளர் வரிசை மிகவும் பலவீனமானது என்று சில ஹதீஸ் கலை அறிஞர்களும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அப்துர் ரஹ்மான் இப்னு அபீ சப்ரஹ் என்பவர் “இட்டுக் கட்டக் கூடியவர்” என்று மற்றும் சில அறிஞர்களும் கூறுகின்றனர். மேலும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள நாட்களில் நோன்பு பிடிக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டியுள்ள விடயமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் அல்லது நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்: “நீர் இந்த (ஷஃபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான் “இல்லை" என்றேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீர் (ரமழான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.14

இந்த ஹதீஹுக்கு இமாம் நவவி றஹிமஹுமுல்லாஹ் அவர்கள் “இந்நாட்கள் நோன்பு நோற்பதற்கு சுன்னத்தான நாட்களான அய்யாமுல் பீழ் உடைய 13, 14, 15ஆம் நாட்கள்” என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.15

இவ்வடிப்படையில், ஷஃபான் மாதம் 15ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்பது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸாக இல்லாவிட்டாலும் அந்நாளில் மேற்குறிப்பிட்டதன் பிரகாரம் ஷஃபான் மாதத்தின் பொதுவான சுன்னத்தான நோன்பு என்ற அடிப்படையிலோ அல்லது 13, 14, 15 ஆகிய அய்யாமுல் பீழ் உடைய நாட்கள் என்ற அடிப்படையிலோ நோன்பு நோற்கலாம். இக்கருத்தையே இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.16 அல்லது வழமையாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் என்ற அடிப்படையிலும் நோன்பு நோற்கலாம்.

 

ஷஃபான் ரமழானுக்கான பயிற்சிப் பாசறையாகும்

ஷஃபான் மாதத்தை அடுத்து வரும் சங்கைமிகு ரமழான் மாதத்தில் நற்காரியங்களில் அதிமதிகம் ஈடுபடுவதற்கு முற்கூட்டியே நாம் தயாராக வேண்டும். அந்த வகையில் இம்மாதத்தில் நபியவர்களைப் போன்று அதிகமதிகம் நோன்புகளை நோற்று பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமழான் மாதத்தில் நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. ஆண்களும், பெண்களும் சென்ற ரமழானில் விடுபட்ட நோன்புகளை கழாச் செய்துகொள்ள இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எனவே இம்மாதத்தின் சிறப்பையும் அதில் புரியும் நல்லமல்களையும் எமது சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுமாறு மஸ்ஜித் இமாம்களையும் கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் சங்கைமிகு ரமழானை அடைந்து அதன் சகல பாக்கியங்களையும் பெற்றுக் கொள்ளவும், இந்நாட்டில் அபிவிருத்தி மேலோங்கவும், உலக வாழ் மக்களுக்கிடையில் ஐக்கியமும் சமாதானமும் கட்டியெழுப்பப்படவும் வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றது.


அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[1] فقال "إن شعبان اشتق اسمه من الشعب وهو الاجتماع وسمى به لأنه يتشعب فيه خير كثير كرمضان وقيل لأنهم كانوا يتشعبون فيه بعد التفرقة ويجمع على شعابين وشعبانات، وقال ابن دريد سمى بذلك لتشعبهم فيه، أى لتفرقهم فى طلب المياه، وفى المحكم سمى بذلك لتشعبهم فى الغارات، وقال بعضهم إنما سمى شعبانا لأنه شعب أى ظهر بين رمضان ورجب، وكان شعبان شهر تتشعب فيه القبائل أى تتفرق لقصد الملوك والتماس العطية"  (عمدة القارئ فى شرح صحيح البخارى)

 

[2] صام رسول الله ﷺ رمضان تسع سنين ، لأنه فرض في شعبان في السنة الثانية من الهجرة وتوفي النبي ﷺ في شهر ربيع الأول سنة إحدى عشرة من الهجرة اهـ   "المجموع" 6/250 "

 

[3] .تزوَّج النبي صلى الله عليه وسلم من السيدة حفصة في شعبان بعد أن حلَّت من عدتها، وذلك في سنة ثلاث من الهجرة    [الطبقات الكبرى, 08].

 

[4] قَالَ الْوَاقِدِيُّ وَفِي رَجَبٍ مِنْهَا مَاتَ النَّجَاشِيُّ صَاحِبُ الْحَبَشَةِ وَنَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّاسِ.وَفِي شَعْبَانَ مِنْهَا - أَيْ مِنْ هَذِهِ السَّنَةِ - تُوُفِّيَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلَّم فغسَّلتها أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ وصفية بن عَبْدِ الْمُطَّلِبِ، وَقِيلَ غسَّلها نِسْوَةٌ مِنَ الْأَنْصَارِ فيهن أُمُّ عَطِيَّةَ. (البداية والنهاية: فصل كَانَ فِي هَذِهِ السَّنَةِ - أَعْنِي فِي سَنَةِ تِسْعٍ - مِنَ الْأُمُورِ الْحَادِثَةِ

 

  1. [5] قال ابن حجر الهيتمي رحمه الله تعالى: "هذه الأحاديث لا تنافي الحديث المحرم لصوم ما بعد النصف من شعبان؛ لأن محل الحرمة فيمن صام بعد النصف ولم يصله؛ ومحل الجواز بل الندب فيمن صام قبل النصف وترك بعد النصف أو استمر؛ لكن وصل صومه بصوم يوم النصف؛ أو لم يصله وصام لنحو قضاء أو نذر أو ورد" انتهى. (الفتاوى الفقهية الكبرى: 2/ 82)

 

[6] قال النووي رحمه الله :قَالَ أَصْحَابُنَا: لا يَصِحُّ صَوْمُ يَوْمِ الشَّكِّ عَنْ رَمَضَانَ بِلا خِلافٍ.. فَإِنْ صَامَهُ عَنْ قَضَاءٍ أَوْ نَذْرٍ أَوْ كَفَّارَةٍ أَجْزَأَهُ، لأَنَّهُ إذَا جَازَ أَنْ يَصُومَ فِيهِ تَطَوُّعًا لَهُ سَبَبٌ فَالْفَرْضُ أَوْلَى. وَلأَنَّهُ إذَا كَانَ عَلَيْهِ قَضَاءُ يَوْمٍ مِنْ رَمَضَانَ، فَقَدْ تَعَيَّنَ عَلَيْهِ  (المجموع شرح المهذب: مسائل تتعلق بصيام)

 

[7] وقال عكرمة: كان ابن عباس يسمي ليلة القدر ليلة التعظيم , وليلة النصف من شعبان ليلة البراءة (تفسير الماوردي, سورة القدر)

 

[8] عن عبد الله بن عمرو، أن رسول الله - صلي الله عليه وسلم - قال: "يطَّلعُ الله عَزَّ وَجَلَّ إلي خلقه ليلةَ النصف من شعبان، فيغفر لعباده، إلا لاثنين: مشاحنٍ، وقاتِلِ نفسٍ". رواه الإمام أحمد في "المسند" (6642)

 

[9] وقال الشافعي رحمه الله: (بلغنا أنه كان يقال: إن الدعاء يستجاب في ليلة الجمعة، وليلة الأضحى، وليلة الفطر، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وبلغنا أن ابن عمر كان يحيي ليلةَ جمعٍ، وليلةُ جمع هي ليلة العيد لأن في صبحها النحر... ثم قال(أي الشافعيّ): وأنا أستحبُّ كل ما حكيت في هذه الليالي من غير أن يكون فرضا)  (الأم)

قال النوويُّ رحمه الله: (واستحبَّ الشافعيُّ والأصحابُ الإحياء المذكور مع أنَّ الحديث ضعيف لما سبق في أول الكتاب أن أحاديث الفضائل يتسامح فيها ويعمل على وفق ضعيفها)

 

[10] وقال ابن نجيم من الحنفية  رحمه الله: "ومن المندوبات إحياء ليالي العشر من رمضان، وليلتي العيدين، وليالي عشر ذي الحجة، وليلة النصف من شعبان، كما وردت به الأحاديث"   "البحر الرائق".

 

[11] وجاء في "التاج والإكليل" (3/319) من كتب المالكية: "رغب في قيام تلك الليلة" [يعني منتصف شعبان].

 

[12] وهو مذهب الحنابلة أيضا، كما في "شرح منتهى الإرادات" للبهوتي، وقال ابن تيمية: "وأما ليلة النصف فقد روى في فضلها أحاديث وآثار، ونقل عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها، فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا"  "مجموع الفتاوى".

 

[13] عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله –صلى الله عليه وسلم-: (إذا كانت لَيْلَةُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كَذَا حتى يَطْلُعَ الْفَجْرُ - سنن ابن ماجه

 

[14] عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُ: - أَوْ قَالَ لِرَجُلٍ وَهُوَ يَسْمَعُ - «يَا فُلَانُ، أَصُمْتَ مِنْ سُرَّةِ هَذَا الشَّهْرِ؟» قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ، فَصُمْ يَوْمَيْنِ» - رواه صحيح مسلم

 

[15] فَكَأَنَّهُ يَقُولُ يُسْتَحَبُّ أَنْ تَكُونَ الْأَيَّامُ الثَّلَاثَةُ مِنْ سُرَّةِ الشَّهْرِ وَهِيَ وَسَطُهُ وَهَذَا مُتَّفَقٌ عَلَى اسْتِحْبَابِهِ وَهُوَ اسْتِحْبَابُ كَوْنِ الثَّلَاثَةِ هِيَ أَيَّامُ الْبِيضِ وَهِيَ الثَّالِثَ عَشَرَ وَالرَّابِعَ عَشَرَ وَالْخَامِسَ عَشَرَ (شرح النووي على مسلم)

 

[16] وقال الشافعي رحمه الله: أما صيام يوم النصف من شعبان فيسن على أنه من الأيام البيض الثلاثة، وهي: الثالث عشر، والرابع عشر، والخامس عشر، لا على أنه يوم النصف من شعبان، فإن حديث الصيام فيه لا يصلح للاحتجاج،

2024.01.11 (1445.06.27)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2024.01.12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தில் 'இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும் பிறர் துயர் துடைப்பும்' எனும் தலைப்பையும் உள்ளடக்கி உரையினை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும் பிறர் துயர் துடைப்பும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1wmrZDKPOHVP9AaZbPq9TTHiAYOdsapYp/view?usp=drive_link

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் பல பகுதிகளிலும் அடிக்கடி அனர்த்தங்கள் இடம் பெற்று வருவதை நாங்கள் காண்கிறோம். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அசௌகரியங்களை தாங்கிக் கொண்டு வாழ்வதைக் அவதானிக்கின்றோம்.

இந்த வகையில் எமது நாட்டிலும் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் அதனைத் தொடர்ந்து சில பிரதேசங்களில் மண் சரிவும் இடம்பெற்று பல வீடுகள், கடைகள், பல ஏக்கர் வயல் நிலங்கள் மற்றும் பயிர் நிலங்கள் உள்ளிட்டவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இஸ்லாம் அனர்த்தத்தை எவ்வாறு நோக்குகின்றது? இதற்கான காரணம் என்ன? அனர்த்தங்களின் போது இஸ்லாம் கற்றுத்தரும் பாடம் என்ன? பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பது பற்றி இஸ்லாமிய அணுகு முறை யாது? என்பது கூடுதல் கவனத்துடன் நோக்கப்படவேண்டிய விடயமாகும்.

 

இஸ்லாமும் அனர்த்தங்களும்:

இயற்கை அனர்த்தங்கள், சோதனைகள் ஏற்பட்டமைக்கு பலரும் பௌதீக ரீதியான பல அனுமானங்களை வைத்து காரணங்களைக் கூறலாம். இருப்பினும் இஸ்லாம் அனர்த்தங்களை மனித உலகிற்கான சோதனையாக பார்க்கிறது.

 

அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்பூட்டும் வசனங்கள்:

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ (2:155)

"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

 

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَ (2:286)

"எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (2:286)


அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்கும் ஹதீஸ்கள்:

عن أبي هُرَيْرَةَ رضي الله عنه يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ  (صحيح البخاري : 5645)    

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகிறான்”. (ஷஹீஹுல் புகாரி: 5645)

 

அனர்த்தங்களில் இறைவிசுவாசியின் நிலை பற்றி விபரிக்கும் அல்-குர்ஆன் வசனங்கள்:

الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ  (2:156)

"(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்." (2:156)

 

وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ۖ  (21:83)

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது. (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.” என்று பிரார்த்தித்தார்கள்." (21:83)

 

அனர்த்தங்களில் இறைவிசுவாசியின் நிலை பற்றி விபரிக்கும் ஹதீஸ்கள்:

عَنْ صُهَيْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ  (صحيح مسلم : 2999)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இந்தப் பாக்கியமானது அமைவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. (ஸஹீஹ் முஸ்லிம்: 2999)

 

அனர்த்தங்கள் ஏன் ஏற்படுகின்றன?

அனர்த்தங்கள் மற்றும் சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலமாக அல்லாஹ் தனது அடியார்களை பாவங்களிலிருந்து மீண்டு தன்பக்கம் நெருங்கச் செய்தல், பாவங்களிலிருந்து அவர்களை தவிர்ந்து கொள்ள வைத்தல், அவர்களது பாவங்களை மன்னித்து மனிதப் புனிதனாக மாற்றுவதற்கான உணர்ச்சியூட்டல், இதன் மூலமாக ஏனையவர்களுக்கு படிப்பினையினை உண்டாக்குதல் போன்ற பல விடயங்களை நாடுகிறான். இது தொடர்பாக நபியவர்களின் பின்வரும் ஹதீஸ்கள் விபரிக்கின்றன.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: )مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ  (صحيح البخاري : 5641)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை”. (ஸஹீஹுல் புகாரி: 5641)

 

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا؟ قَالَ: (أَجَلْ، إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ» قُلْتُ: ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ؟ قَالَ: «أَجَلْ، ذَلِكَ كَذَلِكَ، مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى، شَوْكَةٌ فَمَا فَوْقَهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا سَيِّئَاتِهِ، كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا)  (صحيح البخاري : 5648)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!” என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘ஆம்! உங்களில் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன்” என்று சொன்னார்கள். நான் ‘‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘ஆம்! அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்த்து மன்னிக்காமல் விடுவதில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5648)

 

ஏன் அனர்த்தங்கள் வேதனைகளாக மாறுகின்றன?

சில வேளை சோதனைகள் வேதனைகளாகவும் மாறும் என்றும் அதற்கு மனிதர்களின் தீய செயல்களும், பாவங்களும் காரணமாகும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தொடர்பாக பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ‏(30:41)

"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (30:41)

 

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌. وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا (4:79)

“உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.)" (04:79)

மேற்கூறப்பட்ட இவ்வசனங்கள் உலகில் குழப்பங்கள், அழிவுகள், தீங்குகள் ஏற்பட மனிதனும் அவனது செயற்பாடுகளும் கூட காரணமாக உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

 

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை துடைப்போம்:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களது துக்கத்தில் பங்கு கொள்வது ஒவ்வொருவர் மீதுமுள்ள கடமையும், பொறுப்புமாகும். இது தொடர்பாக அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌. وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌. وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ‏ (05:02)

“இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. (05:02)

 

عن أبي هريرة رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : من نفس عن مؤمن كربة من كرب الدنيا ، نفس الله عنه كربة من كرب يوم القيامة ، ومن يسر على معسر ، يسر الله عليه في الدنيا والآخرة ، ومن ستر مسلما ، ستره الله في الدنيا والآخرة ، والله في عون العبد ، ما كان العبد في عون أخيه ، (صحيح مسلم:2699)

"யார் இந்த உலகில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறு உலகத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். 'யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய முன் வருகிறாரோ அவருக்கு அல்லாஹ் ஈருலகிலும் உதவி செய்கிறான். 'யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் ஈருலகிலும் மறைக்கிறான். 'ஒருவர் தனது சகோதரருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டிருக்கிறான்”. (ஸஹீஹு முஸ்லிம்: 2699)

 

 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: (أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا، أَوْ تَقْضِيَ عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا) (طبراني: 6026)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுறைறா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'அமல்களில் மிகச் சிறந்தது நீங்கள் உங்களது முஃமினான சகோதரரின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகும். அல்லது அவருடைய கடனை நிறைவேற்றுவதாகும் அல்லது அவருக்கு ரொட்டியை உணவாகக் கொடுப்பதாகும்” (தபரானி: 6026 )

அந்தவகையில் இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு காரணமாக, பலர் அசாதாரணமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்தியவர்கள் சிறு சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பிறர் தயவிலே வாழ்ந்து வந்த ஏழை எளியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஓர் அளவு தன்னிறைவாகவே வாழ்ந்தவர்கள் கூட நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தேவையுடையோர்களுக்கு நிறைவாக செய்வதற்கு முன் வரவேண்டும். குறைந்த பட்சம் எமது உறவினர்களையும், அண்டை அயலவர்களையும் ஊர் மக்களையும் அரவணைக்கும் கடப்பாடு நம் அனைவருக்கும் இருக்கின்றது.

ஊர் மட்டங்களிலும் பலர் தேவையுள்ள மக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்வானாக! இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புக்களுக்கு எல்லோரும் அந்தந்த பிரதேசங்களில் தமது பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.

அத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து பணிகளிலும் வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி செய்யும் விடயத்தில் அந்தந்த பிரதேசத்திலுள்ள ஜம்இய்யாவின் கிளைகள் உதவி புரிவோருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாவங்களிலிருந்து பாவமன்னிப்பு செய்து மீள்வதும், அதிகமதிகம் தான தர்மங்கள் செய்வதும், நல் அமல்களில், நற்பணிகளில் ஈடுபடுவதும் நாம் எதிர் கொண்டு இருக்கின்ற இந்தப் பேராபத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு காரணமாக அமையும். வல்ல நாயன் அல்லாஹு தஆலா அனர்த்தங்களிலிருந்து எம்மனைவரையும் பாதுகாப்பானாக!

 


அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப் ( (BIS (R), புகாரி
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/RP /2023/007

2023.12.21 (1445.06.06)

 

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2023.12.22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'இஸ்லாமும் அரபு மொழியும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'இஸ்லாமும் அரபு மொழியும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1CgrikkdEkk6mPTEJGsjHeXUqL5FTUC8D/view?usp=drive_link

 

உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளன அவற்றில் சுமார் 18 மொழிகள் செம்மொழிகளாக அறியப்படுகின்றன. அவற்றுள் அரபிமொழியும் ஒன்றாகும். 1973ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அரபு மொழியை தம் அமைப்பின் ஆறாவது உத்தியோகப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது. உலக அரபு மொழி தினம் 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

அரபு மொழியும் அதன் தோற்றமும்

அரபு மொழி கண்ணியமானதும் மிகவும் பழமை வாய்ந்ததுமான ஒரு மொழியாகும். அரபு மொழியை முதலில் பேசியவர் யார் என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் ஹூத் அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி, சமாதானம் உண்டாவதாக!) என்றும் மற்றும் சிலர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் என்றும் ஏனையோர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இமாம் இப்னு கதீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது “அல்-பிதாயா வந்-நிஹாயா”1 எனும் நூலில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்பதே மிகப் பொருத்தமான கருத்தாகும் எனக்கூறுகின்றார்கள். அரபு மொழி தற்போது சுமார் 26 நாடுகளில் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பல மில்லியன் மக்களின் தாய்மொழியாகவும் திகழ்கின்றது.

 

அரேபியர்கள் இரு வகைப்படுவர்

1. ஹஸ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி, சமாதானம் உண்டாவதாக!) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த ஹஸ்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம், அவர்களது சமுதாயத்தினரான ஆது, ஹஸ்ரத் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கூட்டத்தினரான தமூது மற்றும் ஹஸ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கூட்டத்தினரான மத்யன் உட்பட பல கோத்திரங்கள் (அல்-அரபுல் ஆரிபா) அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. ஹஸ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்; வழித்தோன்றலிருந்து வந்தவர்கள் (அல்-அரபுல் முஸ்தஃரிபா) அரபு மொழியை தங்களது மொழியாக ஆக்கிக் கொண்டவர்கள் என்றும் இரு வகையினர்களாக அழைக்கப்படுகின்றனர்.2 (அல்-பிதாயா வந்-நிஹாயா)

 

அரபு மொழியின் மாண்புகள்

இஸ்லாத்தின் வருகையுடன் மத்திய கிழக்கு மக்களின் பேச்சு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது சர்வதேச மொழியாக செல்வாக்குப் பெற்றது. இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் அரபு மொழியில் அமையப்பெற்றதானது அதன் அந்தஸ்தை உலக அளவில் பறைசாற்றுவதற்கு மிகப் பிரதான காரணமாக இருந்தது.

 

அரபு மொழியின் மாண்புகளை கூறும் அல்-குர்ஆன் வசனம்

قال الله تعالى في القرآن. "إِنَّآ أَنزَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ  (سورة يوسف: 02)

 

“நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.” என்று கூறுகின்றான். (ஸூறா யூஸுப் : 02)

 

அரபு மொழியின் மாண்புகளை எடுத்துக்கூறும் ஹதீஸ்கள்

عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «( أحبوا العرب لثلاث: لأني عربي، وكلام أهل الجنة عربي، والقرآن الكريم باللغة العربية )              (الطبراني: 11141، الحاكم: 6999، شعب الإيمان 1364) 

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “மூன்று விடயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில் நான் அரபியாக இருக்கின்றேன், அல்-குர்ஆனும் அரபியில் உள்ளது மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபியாகும்.” (அத்-தபரானீ:11141, அல்-ஹாகிம்: 6999, ஷுஅபுல் ஈமான் 1364:)

ஹதீஸ்கலை வல்லுனரான இமாம் அல்-அஜலூனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் உள்ள ஹதீஸாகும் என்று கூறியுள்ளார்கள். (கஷ்புல் கபா வமுஸீலுல் அல்பாஸ்...)3

 

عَنْ أَبِي ذَرٍّ فِي حَدِيثِهِ الطَّوِيلِ فِي ذِكْرِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ قَالَ فِيهِ: «. مِنْهُمْ أَرْبَعَةٌ مِنَ الْعَرَبِ ; هُودٌ، وَصَالِحٌ، وَشُعَيْبٌ، وَنَبِيُّكَ يَا أَبَا ذَرٍّ»         (صحيح ابن حبان:361)

நபிமார்களில் ஹூத் ஸாலிஹ், ஷுஐப், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அலைஹிமிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) ஆகிய நான்கு நபிமார்கள் அரபியர்களாக இருந்தனர். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்:361) இது அரபு மொழிக்கு மேலும் கண்ணியத்தையும் மாண்பையும் சேர்க்கின்றது.

அரபு மொழியின் மாண்புகளை உணர்த்தும் ஸஹாபாக்கள், அறிஞர்களின் கருத்துக்கள்

அரபு மொழியின் மாண்புகளை ஸஹாபாக்கள் மற்றும் பல இமாம்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

وقال عمر بن الخطاب رضي الله عنه:  تعلموا العربية فإنها في دينكم.    (السنن الكبرى: 2274)

உமர் பின் அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் “அரபி மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் மார்க்கத்தில் உள்ளதாகும். (சுனனுல் குப்றா: 2274)

 

وقال الإمام الشافعي: اللسان الذي اختاره الله عز وجل لسان العرب فأنزل به كتابه العزيز، وجعله لسان خاتم أنبيائه محمد -صلى الله عليه وسلم- ولهذا فينبغي لكل أحد يقدر على تعلم العربية    (الرسالة:48)

இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹு தஆலாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி அரேபியர்களின் மொழியாகும். அல்லாஹு தஆலா தனது வேதமான அல்-குர்ஆனை அரபு மொழியிலே இறக்கியுள்ளான். அவ்வாறே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மொழியாகவும் அதனை ஆக்கினான். எனவே, அரபு மொழியைக் கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் முக்கியமானதாகும்.” (அர்-ரிஸாலாஹ்: 48)

 

وقال ابن تيمية رحمه الله: (فإن اللسان العربي شعار الإسلام وأهله.   (اقتضاء الصراط المستقيم، ص 203) 

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் “அரபு மொழி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களினதும் அடையாளச் சின்னமாகும்” என்று கூறுகின்றார்கள். (இக்திளாஉ அஸ்-ஸிராத்தில் முஸ்தகிம்).

 

وقال ابن القيم الجوزية رحمه الله:  وإنما يعرف فضل القرآن مَنْ عرف كلام العرب.     (الفوائد المشوق إلى علوم القرآن وعلم البيان)

இமாம் இப்னுல் கைய்யூம் அல்-ஜவ்ஸியா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் “அரபு மொழியை அறிந்தவருக்கு மட்டுமே அல்-குர்ஆனின் மாண்புகள் மிக ஆழமாக புரியும்” என்று கூறுகின்றார்கள். (அல்-ஃபவாயித் அல்-முஷவ்விக் இலா உலூமில் குர்ஆன்)

மேற்குறித்த அறிஞர்களின் கருத்துக்களை உற்று நோக்குகையில் அரபு மொழிக்கு எவ்வளவு முக்கியத்துவமும் மாண்புகளும் உள்ளன என்பது தெளிவாகின்றது.

இது தவிர அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்துச் செறிவு, போன்றன அரபு மொழியின் சிறப்பம்சங்களாகும். அரபு இலக்கணத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் பயன்படுத்தப்படுகின்றது. அறிவுக் கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும் அறிவியலை முழு உலகிற்கும் பரவச்செய்வதிலும் அரபு மொழியின் பங்கு காத்திரமானது.

அரபு மொழிக்கும் இலங்கைத் திரு நாட்டுக்குமிடையிலான தொடர்பு

வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, இலங்கையில் இஸ்லாம் வருவதற்கு முன்பிலிருந்தே அரபு மொழிக்கும் இலங்கைத் திருநாட்டுக்குமிடையிலான தொடர்பு, கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடமாக இருந்து வருகின்றது. பண்டைய அரேபிய வர்த்தகர்கள் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் கரையோர நகரங்களில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சீன, பாரசீக, கிரேக்க, ரோமானிய வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரபல அரசியல்வாதி சுந்தரலிங்கம் இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டு கால வரலாறு இலங்கைக்கும் அரேபியர்களுக்குமிடையில் உள்ளது என தனது “சன்” எனும் ஆங்கில பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

அரபு மொழியின் மேம்பாட்டிற்கு இலங்கை மத்ரஸாக்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளின் வகிபாகங்கள்

இலங்கையின் பழைமையான பல்கலைக்கழகமான பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறை ஒன்றுள்ளது. அத்தோடு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் அரபுத் துறை மற்றும் இஸ்லாமிய கற்கைகள் துறை என இரண்டு தனித்தனியான திணைக்களங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவ்வாறே கொழும்பு பல்கலைக்கழகம் அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறையில் தனியான ஒரு அலகைக் கொண்டுள்ளது.

மேலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிக்கான பீடமொன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளமை விஷேட அம்சமாகும். இப்பீடத்தில் அரபு மொழித் துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தனியாக மாணவர்கள் உள்வாங்கப்படுவதோடு அங்கு பொதுக் கலை பட்டமும் இரண்டு விசேட கலைப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டளவில் தென்னிலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தலைமையில் அரபு மொழியிலான இஸ்லாமிய சமயக் கல்விப் போதனைகள் மத்ரஸா மட்டத்தில் துவக்கிவைக்கப்பட்டன. மத்ரஸாக்களில் அரபு மொழி தனியான ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. அரபு மொழிக்கான மத்ரஸாக்களின் பங்களிப்புக்களும் ஏராளமானவையாகும்.

1969ஆம் ஆண்டளவில் அரபு மொழித்துறையில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரபு மொழி உள்நாட்டு பாடவிதானத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அரபு மொழியை கற்பதன் பயன்கள்

• முஸ்லிம்கள் அல்-குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்து கொள்வதற்கும் தொழுகைகளை உயிரோட்டமாக அமைத்துக் கொள்வதற்கும் அன்றாட வணக்க வழிபாடுகளை பொருளுணர்ந்து நிறைவேற்றுவதற்கும் அரபு மொழியைக் கற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.

• இன்றைய அரபுலகம் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக முன்னேறுவதை உலகம் கண்கூடாகக் காண்கிறது. எமது நாட்டிலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத துறைசார்ந்தவர்கள் அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முனைவதனூடாக அரபுலகின் சிந்தனைக் கருவூலங்களைப் படித்து எமது நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்.

• மத, கலாசார பன்முகத்தன்மையை மதித்து செயற்பட்டு மானுடத்திற்கு பங்காற்றுவதற்கு அரபு மொழியை கற்பது பிரயோசனமானதாகும்.

 

முடிவுரை

எனவே, இஸ்லாத்தின் அடிப்படை மூலதாரங்களின் மொழியான அரபு மொழியை கற்றுக்கொள்வதுடன் அதை மக்கள் மயப்படுத்துவோம். இலங்கையிலுள்ள அரபு நாட்டுத் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர உறவைப் பேணும் நிறுவனங்கள் ஊடாக அரபு மொழியை மேம்படுத்துவதற்காக முயற்சிகளை முன்னெடுப்போம். மற்றும் அரச பாடசாலைகளின் பாட விதானத்தில் இணைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மொழிகளில் ஒன்றான அரபு மொழியை எமது மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்வோம்.

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தஆலா அரபு மொழியின் மாண்புகளை விளங்கி அம்மொழியைக் உரியவர்களிமிருந்து கற்று பயன்பெற எம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் நாகூர் ளரீப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

---------------------------------------------------------------------------------------------

[1] قوله و"يُقَالُ:إِنَّ هُودًا  أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِالْعَرَبِيَّةِ. وَزَعَمَ وَهْبُ بْنُ مُنَبِّهٍ أَنَّ أَبَاهُ أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِهَا.  وَقَالَ غَيْرُهُ أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِهَا نُوحٌ. وَقِيلَ آدَمُ وَهُوَ الْأَشْبَهُ. وَقِيلَ: غَيْرُ ذَلِكَ، وَاللَّهُ أَعْلَمُ. وَكَانَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَوَّلَ مَنْ تَكَلَّمَ بِالْعَرَبِيَّةِ الْفَصِيحَةِ الْبَلِيغَةِ، وَكَانَ قَدْ أَخَذَ كَلَامَ الْعَرَبِ مِنْ جُرْهُمَ الَّذِينَ نَزَلُوا عِنْدَ أُمِّهِ هَاجَرَ بِالْحَرَمِ.   ( البداية والنهاية )

 

[2]. يُقَالُ لِلْعَرَبِ الَّذِينَ كَانُوا قَبْلَ إِسْمَاعِيلَ : الْعَرَبُ الْعَارِبَةُ. وَهُمْ قَبَائِلُ كَثِيرَةٌ مِنْهُمْ ; عَادٌ، وَثَمُودُ، وَجُرْهُمُ، وَطَسْمٌ، وَجَدِيسُ، وَأَمِيمُ، وَمَدْيَنُ، وَعِمْلَاقُ، وَعَبِيلٌ، وَجَاسِمٌ، وَقَحْطَانُ، وَبَنُو يَقْطُنَ، وَغَيْرُهُمْ . وَأَمَّا الْعَرَبُ الْمُسْتَعْرِبَةُ فَهُمْ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ الْخَلِيلِ،   (البداية والنهاية)

 

[3] قال إسماعيل بن محمد العجلوني الجراحي (المتوفى: 1162هـ) وقد وردت أخبار كثيرة في حب العرب يصير الحديث بمجموعها حسنا، وقد أفردها بالتأليف جماعة منهم الحافظ العراقي ومنهم صديقنا الكامل السيد مصطفى البكري لا زالت علينا عوائد الأفضال تجري   (كشف الخفاء ومزيل الإلباس عما اشتهر من الأحاديث على ألسنة الناس)

ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு 

 

ACJU/RP /2023/006

2023.10.19 (1445.04.03)

 

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,



எதிர்வரும் 2023.10.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'மஸ்ஜிதுல் அக்ஸாவும் புண்ணிய பூமி பலஸ்தீனும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.


'மஸ்ஜிதுல் அக்ஸாவும் புண்ணிய பூமி பலஸ்தீனும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1JE2QSnoaUFIa9POiRFZJQVFwWytrUrHs/view?usp=sharing

 

 

அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக் அஷ்ஷைக் நாகூர் ளரீப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு 

 

ACJU/NGS/2023/251

2023.10.12 (1445.03.26)

 

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,

 

எதிர்வரும் 2023.10.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'வக்ப் சொத்துக்களைப் பாதுகாப்போம்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

 

 

வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்போம். உலகில் இரண்டாவதாக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.

ஒருவர் தனக்கு சொந்தமான பொருளாதாரத்தை அவரது விருப்பத்துடன் இறை பாதையில் செலவழிப்பதை இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ளது. அதற்காக வேண்டி, ஹத்யா கொடுத்தல், ஸக்காத் வழங்கல், ஸதகா வழங்கல், வஸிய்யத் செய்தல், வாரிசுரிமைப் பகிர்வு, நேர்ச்சை செய்தல், வக்ஃப் செய்தல் போன்ற இன்னோரன்ன அமல்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹதிய்யா என்பது ஒரு பொருளை அல்லது பணத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அன்பு மற்றும் கௌரவத்திற்காக எந்தவித கோரிக்கை மற்றும் நிபந்தனையின்றி வழங்குவதாகும்.

ஸக்காத் என்பது கட்டாயமான ஒரு வணக்கமாகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும்.

ஸதகா என்பது ஒருவர் அல்லாஹ்வுக்காக வேண்டி ஏழைகள் மற்றும் தேவையுடையோர்களுக்கு வழங்குவதாகும்.

வஸிய்யத் என்பது ஒருவர் தனது சொத்தில் இருந்து ஒரு பகுதியை மௌத்திற்குப் பின்னால் கொடுப்பதாக கூறிவைத்தலாகும். தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதிவரை வஸிய்யத் செய்யலாம். அதை விடவும் அதிகமாக செய்வதாக இருந்தால் அனந்தரக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். அனந்தரக்காரர்களுக்கு வஸிய்யத் செய்வது முடியாது. அவ்வாறாயின் பிற அனந்தரக்காரர்களின் அனுமதியை பெறல் வேண்டும்.

வாரிசுரிமை சட்டம் என்பது ஒருவர் மரணித்த பின்னர் அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை அவரது உயிருடன் உள்ள வாரிசுகளுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பதாகும்.

நேர்ச்சை என்பது ஒருவர் அல்லாஹ்விடம் தனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் தனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகின்றேன் அல்லது நோன்பு நோற்கின்றேன் அல்லது ஒரு தொகைப்பணத்தை தர்மம் செய்கின்றேன் என்ற வார்த்தைகளைக் கொண்டு கூறும் ஒர் அமலாகும். எந்த விடயத்திற்காக நேர்ச்சை வைத்தாரோ அந்த விடயம் நடைபெற்றால் அவரது நேர்ச்சையை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.

அவ்வாறே 'வக்ஃப்' என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு நிரந்தர தர்ம காரியமாகும். இது அல்லாஹு தஆலாவினாலும் நபியவர்களினாலும் ஆர்வமூட்டப்பட்ட ஒரு வணக்கமாகும்.

இக்காரியத்தை யார் செய்கின்றாரோ அதன் மூலம் பிரயோசனம் பெறப்படும் காலமெல்லாம் அவருக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

عن جَابِرَ بْنَ عَبْدِ الله رضي الله عنهما، يَقُولُ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ مَعْبَدٍ حَائِطًا، فَقَالَ: (يَا أُمَّ مَعْبَدٍ، مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ؟ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ؟» فَقَالَتْ: بَلْ مُسْلِمٌ، قَالَ: «فَلَا يَغْرِسُ الْمُسْلِمُ غَرْسًا، فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ، وَلَا دَابَّةٌ، وَلَا طَيْرٌ، إِلَّا كَانَ لَهُ صَدَقَةً إِلَى يَوْمِ الْقِيَامَةِ)، (صحيح مسلم: (1552

(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு மஃபத் ரழியல்லாஹு அன்ஹா அவர்களது பேரீச்சந்தோப்புக்குச் சென்றார்கள். அவர்களிடம், 'உம்மு மஃபதே! இந்தப் பேரீத்தமரங்களை நட்டி வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளனா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை, ஒரு முஸ்லிம் தான் (நட்டு வைத்தார்)' என்று விடையளித்தார். (அப்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'முஸ்லிம் ஒரு மரத்தை நட்டி வைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள் வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்' என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (ஸஹீஹு முஸ்லிம்: 1552)

வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.

ஒரு தடவை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் யாரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹு! அலைஹி வஸல்லம் இதுவரை எனக்குக் கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக் கொண்டேன். அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால் அது விற்கப்படவோ நன்கொடையாக வழங்கப்பட அனந்தரமாக்கப்படவோ முடியாத ஸதகாவாக வக்ப் செய்து விடுங்கள் என்று கூறினார்கள்.

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ஃப் செய்தார்கள். ( சஹீஹுல் புகாரி - 2737)

ஒருவர் ஒரு பொருளை அல்லது ஓர் இடத்தை வக்ஃபு செய்துவிட்டால் அது அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாக மாறிவிடும். மேலும், அவர் குறிப்பிடும் சகல நிபந்தனைகளும், குர்ஆன் ஹதீஸ்களின் வார்த்தைகளை மாற்ற முடியாதது போன்று, எவ்வித மாற்றமும் இன்றிப் பின்பற்றப்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு விதி வக்ஃப் சட்டங்கள் விடயத்தில் உள்ளது.


ஒரு நோக்கத்துக்காக வக்ஃப் செய்யப்பட்ட பொருளை, இன்னும் ஒரு தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றி இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.


வக்ஃப் செய்யப்பட்ட பொருளை அதன் அடிப்படைத் தோற்றத்திலிருந்து மாற்றுவது கூடாது. அதாவது, வீடாக வக்ப் செய்யப்பட்டதைத் தோட்டமாகவோ அல்லது குளியலறையாகவோ அல்லது தோட்டமாக வக்ஃப் செய்யப்பட்டதை வீடாகவோ மாற்றுவது கூடாததாகும். ஆனால், வக்ஃப் செய்தவர் வக்ஃப் செய்யும் பொழுது, வக்ஃபை கண்காணிப்பவர் தேவையைக் கருதி பயன்படுத்த முடியும் என்று கூறினால் மாத்திரம் தேவைக்கேற்ப அதை மாற்றிக் கொள்ளலாம்.'


எனவே, வக்ஃப் செய்யப்பட்ட பொருளை அல்லது இடத்தை வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்காவே பயன்படுத்த வேண்டும். அந்நோக்கத்திற்கு மாற்றமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ அல்லது அதை எவ்விதச் செயற்பாடும் இன்றிப் பாழாக்குவதோ கூடாது.


வக்ஃப் என்ற அமலை மஸ்ஜித், மத்ரஸா, பாடசாலை, அடக்கஸ்தலம், வைத்தியசாலை, உள்ளிட்டவைகளுக்காக செய்ய முடியும்
மஸ்ஜிதுக்காகக் காணியை வக்ஃப் செய்தல்.


அல்லாஹ்வால் விரும்பப்படும் உலகின் மிகச் சிறந்த இடம் அவனது மஸ்ஜித்கள் என்று அழைக்கப்படும் இறை இல்லங்களாகும்.

 

பொதுவாக எமது முன்னோர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், முதன் முதலில் அங்கே பள்ளிவாசல் ஏதேனும் இருக்கின்றதா என்றுதான் பார்ப்பார்கள். இல்லையெனில் தங்களுக்கென்றொரு வீட்டைக் கட்டுவதை விட பள்ளிவாசலைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதற்குச் சான்றாக எமது முன்மாதிரித் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சம்பவம் ஹதீஸ் நூட்களில் கூறப்பட்டிருக்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்ததும் தமக்கென்று தங்குவதற்கான வீட்டைக் கட்டுவதற்கு முன்னதாக முதலில் மஸ்ஜிதுல் குபாவை நிறுவி அதனை வக்ஃப் செய்து விட்டு இரண்டாவது மதினாவுக்கு சமுகமளித்து பனூ நஜ்ஜார் குலத்தினரிடமிருந்து ஒரு காணியைக் பெற்று அதில் மஸ்ஜிதுந் நபவியை நிறுவி வக்ஃப் செய்தார்கள். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.


عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ: يا بني النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا؟ قَالُوا : لا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ. (صحيح البخاري: 2198 இكتاب الوصاياஇ باب إذاقال الواقف لانطلب ثمنه إلا إلى الله فهو جائز)


அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பனுன் நஜ்ஜார் குலத்தினர் அளித்த இடத்தில் மஸ்ஜித் கட்டும்படி உத்திரவிட்டபோது, 'பனுன் நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ்: 2198)


அன்று முதல் இன்று வரை இன்னும் மறுமை நாள் வரை மஸ்ஜிதுன் நபவியில் தொழும் கோடான கோடி மக்களின் நன்மைகள் இந்த வக்ஃபுக்கு யார் யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு கிடைக்கின்றன.


மஸ்ஜித், மத்ரஸா, பாடசாலை, அடக்கஸ்தளம், வைத்தியசாலை, உள்ளிட்டவைகளுக்காகக் காணியை வக்ஃப் செய்தல்
பொதுச் சேவைகளுக்கான காணிகள் தேவைப்படும் நேரத்தில் அவற்றுக்காகவும் வக்ஃப் செய்யலாம்.

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رضي الله عنه أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فِيهَا ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالَا قَطُّ أَنفُسَ عِنْدِي مِنْهُ ، فَمَا تَأْمُرُني بِهِ ؟ قَالَ: إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا ، وَتَصَدَّقْتَ بِهَا قَالَ: فَتَصَدَّقَ بهَا عُمَرُ أَنَّهُ لا يُبَاعُ ، وَلا يُوْهَبُ ، وَلا يُورَثُ ، وَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ ، وَفِي الْقُرْبَى ، وَفِي الرِّقَابِ ، وَفِي سَبِيلِ اللَّهِ ، وَابْنِ السَّبِيلِ ، وَالضَّيْفِ ، لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيهَا أَنْ يَأْكُل مِنْهَا بِالْمَعْرُوفِ ، وَيُطْعِمُ غَيْرَ مُتَمَوّلٍ ، قَالَ: فَحَدَّثْتُ بِهِ ابْنَ سِيرِينَ இ فَقَالَ: غَيْرَ مُتأَتِّلٍ مَالا (صحيح البخاري:2737)
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அது விடயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! 'நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால் அது விற்கப்படவோ, நன்கொடையாக வழங்கப்படவோ ,அனந்தரமாக்கப்படவோ முடியாத ஸதகாவாக வக்ஃசெய்து விடுங்கள் என்று கூறினார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ப் செய்தார்கள். (நூல் : சஹீஹுல் புகாரி )2737)

அந்த வகையில் உலகில் முதல் முதலாக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமாகும். இரண்டாது முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவாகும். அதனை அடுத்து வக்ஃப் செய்யப்பட்டவகைள் மஸ்ஜிதுல் குபா மற்றும் மஸ்ஜிதுந் நபவி ஆகியவைகளாகும்.


எனவே, இவற்றை பாதுகாப்பது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.


• مسجد مكة هو أول وقف في الأرض، ثم بيت المقدس الوقف الثاني

عن أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلَ؟ قَالَ: «المَسْجِدُ الحَرَامُ» قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ «المَسْجِدُ الأَقْصَى» قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: «أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الفَضْلَ فِيهِ» متفق عليه.


3366: அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ''அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள், ''அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) இறை யில்லம்' என்று பதிலளித்தார்கள். நான், ''பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள், ''(ஜெரூஸலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா' என்று பதிலளித்தார்கள். நான், ''அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அவர்கள், ''நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது). பிறகு, ''நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது' என்று சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம: 3366)

• فالمسجدُ الأقصى أُسريَ بالنبيِّ -عليهِ الصلاة والسلام- إليهِ، وذلكَ قبلَ أنْ يُعرَجَ بهِ إلى السماءِ

قال اللهُ -جلَّ وعلا-: (سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير) ஜالإسراء: 1ஸ؛ففلسْطينُ هيَ الأرضُ المباركةُ.. ففيها المسجدُ الأقصَى الذي باركَ اللهُ حَولَه.


(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம் நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல் இஸ்ராஃ: 01)

• بيت المقدس أرض المحشر والمنشر


عن ميمونة بنت سعد – رضي الله عنها – قالت: قلت يا رسول الله أفتنا في بيت المقدس، قال: أَرْضُ الْمَنْشَرِ، وَالْمَحْشَرِ، ائتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ...) وإسناد الحديث صحيح، ورجاله ثقات (أي الأرض التي يحشر الناس إليها عند قيام الساعة، ويبعثون بعد الموت)


மைமூனா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நான் நபி ஸல் அவர்களிடம். யாரஸுலல்லாஹ், பைத்துல் மக்திஸைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (இறுதி நாள் ஏற்படும் போது மக்கள் எழுப்பப்படும் பூமி, அங்கு சென்று தொழுது கொள்ளுங்கள். அங்கு ஒரு தொழுகையைத் தொழுவது ஏனைய இடங்களில் தொழும் 1000 தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.


• لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ


عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَالْمَسْجِدِ الْأَقْصَى. (متفق عليه)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

கிணற்றை வக்ஃப் செய்தல்


ஸஹாபாக்கள் தங்களது காணிகளை வக்ஃப் செய்ததைப் போன்றே மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாத கிணறுகளை வக்ஃப் செய்திருக்கிறார்கள்.


عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ « الْمَاءُ ». قَالَ فَحَفَرَ بِرًا وَقَالَ هَذِهِ لأُمِّ سَعْدٍ) سنن أبي داود:1681)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ஸஅதின் தாயார் மரணித்து விட்டார் (அவருக்காக) எந்த ஸதகா செய்வது சிறந்தது? எது அதிகமாக நன்மைகளைப் பெற்றுத்தரும்? என்று கேட்கப்பட்டபோது 'தண்ணீர்' என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்டதும்) கிணறு தோண்டி 'இது உம்மு ஸஅத் அவர்களுக்காக' என்று கூறினார்கள். (சுனனு அபீதாவூத்: 1681)
தோட்டத்தை வக்ஃப் செய்தல்


அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ (3:92)


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள் எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (3:92) என்ற வசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடம் வந்து அல்லாஹ் தன் வேதத்தில் நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள் என்று கூறுகின்றான். எனக்கு மிக விருப்பமான பீருஹா தோட்டத்தை அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் அறக்கொடையாகத் தந்து விடுகிறேன். என்று கூறினார்கள்.


வாகனத்தை வக்ஃப் செய்தல்:


பெரிய அளவில் ஒருவருக்கு வக்ஃப் செய்ய முடியவில்லை என்றாலும், தன்னிடம் இருக்கும் வாகனத்தைக் கொடுத்தாவது மார்க்கப் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது மனிதர் ஒருவரை ஏற்றி இறைவழியில் செல்வதற்காக தர்மம் செய்து அனுப்பி வைத்தார்கள். அந்த குதிரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்திருந்தார்கள்.


அந்த மனிதர் அதை விற்பதற்தாக (சந்தையில்) நிறுத்தி வைத்திருப்பதாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அந்த குதிரையைத் தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அதை நீங்கள் வாங்க வேண்டாம்; உங்கள் தருமத்தை ஒருபோதும் திரும்பப் பெற வேண்டாம் என்று கூறினார்கள் (ஸஹீஹுல் புகாரி: 2775)


வக்ஃபுடைய அமல் ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் காலங்களில் இருந்ததைப் போலவே அவர்களைப் பின்பற்றி வந்த தபஉத் தாபியீன்களின் காலத்திலும் இருந்திருக்கின்றது. எந்த அளவு ஆசையுடனும் ஆர்வத்துடனும் அவர்கள் வக்ஃப் செய்திருக்கின்றார்கள் என்பதற்கு கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களின் மனைவி (ரஹ்மதுல்லாஹி அலைஹா) ஹாஜிகள் தாகம் தீர்ப்பதற்காக அரஃபா, முஸ்தலிபாஃ மற்றும் மினா ஆகியவற்றைச் சூழ ஓர் ஆற்றை உருவாக்கியமை சான்றாக உள்ளது.


வக்ஃப் சொத்துக்களைப் பேணிப் பாதுகாப்பதுடன் அவற்றை முறையாக கையாளுதல்


எமது நாட்டிலும் நமது முன்னோர்கள் எதிர்கால சந்ததியினர்களுக்காக நல்ல பல பணிகளைச் செய்து விட்டே சென்றிருக்கிறார்கள். அத்தோடு நாட்டின் நாலா பாகங்களிலும் பல மஸ்ஜித்களை, அடக்கஸ்தளங்களை, பொதுக்காணிகளை வக்ஃப் செய்திருக்கின்றார்கள். அவற்றை முறையாக பாதுகாப்பதுடன் உலகில் இரண்டாவதாக வக்ஃப் செய்யப்பட்ட முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாப்பதும் அதன் விடுதலைக்காக பிரார்த்திப்பதும் நமது தலையாய கடமையாகும்.

அதே நேரம் அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களை தவறான நோக்கத்தில் சுய இலாபத்திற்காக அதனை நிர்வகிப்பவர்கள் மற்றும் ஏனையோர்கள் பயன்படுத்துவது, கையாளுவது மற்றும் அபகரிப்பது பெரும் குற்றமாகும்.


ஒருவரது சொத்தை அவரது அனுமதியின்றி மற்றவர் சொந்தமாக்கிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹு தஆலா குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் 'உங்களது சொத்துக்களை உங்களுக்கு மத்தியில் அநியாயமாக உண்ண வேண்டாம்' (அல்-பகரா, வசனம் : 188)


'யார் ஒருவரது நிலத்தில் இருந்து ஒரு சாண் அளவேனும் அநியாயமாக கைப்பற்றுகின்றாரோ கியாமத் நாளில் அவரது கழுத்தில் ஏழு பூமிகளை வலயமாக அணிவிக்கப்படும்.' ( ஸஹீஹுல் புகாரி: 1610 )


தனிப்பட்ட ஒருவருடைய சொத்தை அபகரிப்பதன் விளைவு இவ்வாறெனில் வக்ஃப் சொத்துக்களை அபகரிப்பது அதை விட பாவமான செயலென்பதை யாரும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் வக்ஃப் சொத்தின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. வக்ஃப் சொத்தை எடுப்பது அல்லாஹ்வின் சொத்தை எடுப்பதற்கு சமமாகும்.

அவ்வாறே வக்ஃப் சொத்துக்களை வாடகைக்கு விடும் போது அவற்றின் நலன்களைக் கருத்திற் கொள்ளுமாறும், நீண்ட காலங்களுக்கு வாடகைக்கு கொடுப்பதை தவிர்க்குமாறும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, சமுதாயத்தின் தேவைகள் என்னென்ன என்பதனை கண்டறிந்து முறையான திட்டமிடலுடன் அவற்றைப் பூர்த்தி செய்வதற்காக நாம் வக்ஃப் செய்தோமென்றால் அல்லாஹு தஆலாவுடைய உதவியால் சமூகத்தில் உள்ள பல பிரச்சினைகளை குறைக்க முடியும்.


நற்கருமங்களை செய்வதற்குரிய ஆர்வத்தையும், பௌதீக வளத்தையும் அல்லாஹு தஆலா நமக்கு வழங்கி எமது நல்லமல்களையும் ஏற்றுக் கொள்வானாக!

 

 

அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீப்  
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

பிரசாரக் குழு


ACJU/NGS/2023/211
2023.09.06 (1445.02.22)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,

 

எதிர்வரும் 2023.09.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை 'சமூக ஒற்றுமையின் முக்கியத்துவமும் அவசியமும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.


'சமூக ஒற்றுமை' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


இணைப்பு:
https://drive.google.com/file/d/12tGJR1uqZ8DZ2kGBiYSEeUN0_4KVyyJV/view?usp=sharing

 

அல்லாஹு தஆலா எம்மனைவரையும் கருத்து மோதல்கள், காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகைமை பாராட்டல் போன்ற மோசமான பண்புகளிலிருந்து பாதுகாத்து ஒற்றுமையுடனும் சகோதர வாஞ்சையோடும் வாழ்ந்து மரணிக்க கிருபை செய்வானாக!

 


அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா