ACJU/NGS/2024/299
2024.01.23 (1445.07.11)
மன்னார் மாவட்டம் ரசூல்புதுவெளி பிரதேசத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஷ்-ஷைக் அப்துல் கரீம் ஆலிம் அமீனுல்லாஹ் (اللهم ارحمه و اغفر له) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் நேற்று 2024.01.22 ஆம் திகதி வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – மன்னார் மாவட்டக் கிளையின் கௌரவப் பொருளாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமாவார்கள். அத்துடன், ஜம்இய்யாவுக்காகவும் சமூகத்துக்காகவும் பல பணிகளை செய்தவருமாவார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக!)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா