அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மாத்தளை நகரக் கிளை செயற்குழு உறுப்பினர்கள் , CCC குழு அங்கத்தவர்கள் மற்றும் சட்டத்தரனிகள் உடனான சந்திப்பொன்று 01.04.2018 ஆம் திகதி இஷாத் தொழுகையின் பின் மாத்தளை நகரக் கிளை காரியாலயத்தில் இடம்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில்   முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.


1. peace council மற்றும் சர்வோதய போன்றவற்றுடன் தொடர்புகளை பேணல்.


2. முஸ்லிம்கள் பற்றிய பிழையான குற்றச்சாட்டுகளுக்கு அழகிய முறையில் பதில் அளித்தல்.


3.ஊடகத்துறையின் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் இன்னும் 5 வருடங்களில் குறைந்தது 10 பேரையாவது அந்த துறையில் ஈடுபாடு கொண்டவர்களாக உருவாக்குதல்.


4. இளைஞர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் வியாபாரிகள் என பலதுறை சார்ந்தவர்களுக்கும் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடாத்துதல்.


5. மாத்தளை நகரிலுள்ள விகாராதிபதிகள் ஏனைய மதகுருமார்கள் உடனான தொடர்புகளை வலுப்படுத்தலும் அடிக்கடி சந்திப்புகளை மேற்கொள்ளளும்.

 

மேற்படி கலந்துரையாடல் இரவு 9.45 மணியளவில் துஆவுடன் நிறைவுற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா