ஒன்பது தசாப்தங்களை தாண்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களுக்கு தன்னாலான பணிகளைச் செய்து வருகின்றது. இன்று 15 உப பரிவுகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் சுமார் 150இற்கும் மேற்பட்ட கிளைகளினூடாக தனது செயற்பாடுகளை விரிவாக்கி செயற்பட்டு வருவதை நாம் அறிவோம்.ஒற்றுமையே பலம் என்பதை அன்றிலிருந்து ஜம்இய்யா வலியுருத்தி வருகின்றது. நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களாகிய நாம் குழுக்களாக, இயக்கங்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் எதிர்ப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

சமூகத்தில் சுமூக நிலையை உருவாக்குவது உடனடித் தேவையாகவும், சன்மார்க்கக் கடமையாகவும் உள்ளது என்பதை உணர்ந்த ஜம்இய்யா 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலுள்ள தரீக்காக்களையும், தஃவா அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் ஒத்தழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு (CCC) எனும் ஒர் பிரிவை அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் முயற்சிகளில் ஒன்றாக 2010ஆம் ஆண்டு சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் தலைப்பில் நூல் எழுதும் போட்டி ஒன்றை உலமாக்கள் மட்டத்தில் நடத்தியது. அப்போட்டியில் சமர்ப்பிக்கப்படும் நூற்களை தெரிவு செய்வதற்காக அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக், அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத், அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஏ.எல்.எம் இப்றாஹீம், அஷ்-ஷைக் எம். ஹாஷிம் ஷுரி, அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆகியோர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இறுதியாக அக்குழு அஷ்-ஷைக் முப்தி கே.எச்.எம் மபாஸ், அஷ்-ஷைக் எம்.ஏ.ஸீ.எம் பாழில் ஹுமைதி ஆகியோர் இணைந்து எழுதிய புத்தகத்தை முதலாமிடத்திற்குரிய நூலாக பிரகடனப்படுத்தியதுடன் அதற்கான பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்புத்தகத்தில் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய ஷரீஆவின் நிலைப்பாட்டை அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, வரலாறு மற்றும் எம்முன் சென்ற இமாம்களின் வாழ்க்கையின் ஒளியில் ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்புத்தகம் இலகு வடிவில் தொகுக்கப்பட்டுள்ளமை அனைவரிற்கும் வாசித்து பயன்பெற வழி வகுக்குகின்றது.

தற்போது முதலாமிடம் பெற்ற அந்நூலையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எதிர் வரும் 30.12.2018 அன்று தெஹிவலை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் வெளியிட இருக்கின்றது.

புத்தகங்களை பெற்றுக் கொள்ள அழையுங்கள்


0117490490

05.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் தஃவா பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் அவர்களின் தலைமையில்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

29.11.2018 அன்று அகில இலங்கை   ஜம்இய்யதுல்  உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டானிச்சூர்  கிளையின் ஏற்பாட்டில்  சர்வமத குழு LOCAL INTER RELIGIOUS COMMITTEE   ( LLRC) அமைப்பின் அனுசரணையின்  ஊடாக  உலமாக்களுக்கான " மத சக வாழ்விற்கான கூட்டு  ஈடுபாடு " எனும் தொனிப்பொருளில்  விஷேட  கலந்துரையாடல் ஒன்று பட்டானிச்சூர்  மன்பஉல் உலூம் அரபுக்கல்லூரியில்  நடைபெற்றது .

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

29.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில்  அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையகத்தில் கடமை புரிவோர் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக்  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நிககொல்லை ஜுமுஆ மஸ்ஜிதில்  இடம் பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனையை  எதிர்த்து  ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

03.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்  இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மாத்தளை நகர் கிளைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்றடையாமளிருப்பதற்கான காரணங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன்  அவ்வப்பகுதிகளில் இருக்கின்ற உலமாக்களை அழைத்து இது சம்பந்தமாக கலந்துரையாடுவதென முடிவு செய்யப்பட்டது.  

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா