2017.08.24 / 1438.12.01

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் உலமாக்களுக்கான விஷேட கற்கை நெறி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு முரண்பாட்டுத் தீர்வுக் கல்வி எனும் விஷேட கற்கை நெறியொன்றை ஆலிம்களுக்கு வழங்கி வருகின்றது. முதலாவது கற்கை நெறியை வெற்றிகரமாக நடாத்திமுடித்துள்ளது.

இவ்விஷேட கற்கை நெறி 150 மணித்தியாலயங்களைக் கொண்டதாகும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் வதிவிட வசதியுடன் நடாத்தப்படும். மேற்படி கற்கை நெறியில் இன்றைய சவால்களாக அமைந்திருக்கும் பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றுக்கான தீர்வுகள், அணுகுமுறைகள் பற்றி ஷரீஆவின் ஒளியில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

மேலும் பல்வேறு தலைப்புக்களில் ஆலிம்களை வலுவூட்டவும் ,அவர்களின் திறன்களை வளர்க்கவும் கள ஆய்வுகளுக்கான வழிக்காட்டல்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்பவர்களுக்கு ஜம்இய்யாவினால் சான்றிதழ் வழங்கப்படும். இதில் 40 ஆலிம்கள் மாத்திரமே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இக்கலைத் திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் ஆலிம்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்தும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2017.09.08 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் விதத்தில், Coordinator, CCC Division, No.281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு :அஷ்-ஷைக் எம்.என். அப்துர் ரஹ்மான் அவர்களை 0117-490490 / 0776-206862 எனும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.

விஷேட கற்கை நெறியில் இணைந்து கொள்வதற்கான நிபந்தனைகள்

1)அங்கீகரிக்கப்பட்ட மத்ரசாவில் படித்து பட்டம் பெற்றவராயிருத்தல் வேண்டும்.

2)40 வயதுக்குட்பட்டவராயிருத்தல் வேண்டும் .

3)வகுப்புக்கள் வார இறுதி நாட்களில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில்; நடைபெறும்.

4)தங்குமிட வசதியும் உணவும் இலவசமாக வழங்கப்படும்.

5)மொழிப் புலமையுள்ள மத்ரசா ஆசிரியர்களுக்கும் தஃவாக்களத்தில் உள்ளோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

6)அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவம் பெற்றிருத்தல் வேண்டும்.