16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மற்றும் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் "வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி" எனும் தலைப்பில் உலமாக்களுக்கான செயலமர்வொன்று மாதம்பிடிய ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின்  மாதாந்தக்  கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் சியாம் யூசுபி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாதம் மேற் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இம்மாதத்திற்கான வேலைத் திட்டங்களும் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று மல்வானை அல் முபாறக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் லாபிர் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது கிளைகளின் புதிய நிருவகத் தெரிவு சம்பந்தமாகவும், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை புத்தக அறிமுகம் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திகாரிய கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

21.02.2019 / 15.06.1440

புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்

பல்லின மக்கள் வாழ்ந்து வரும் இந்நாட்டில் ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களும் இருந்து வருவதை நாம் காண்கின்றோம். அவ்வாறான தனித்துவங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொரு இனத்தவரும் கரிசனை செலுத்தி வருகின்றனர். அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.

அதேபோல் வரலாற்றை நிரூபிக்கும் சின்னங்களாக சில இடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்தி அவற்றை புராதன சின்னங்களென பாதுகாத்து வருகின்றது. இதற்கென பல சட்ட திட்டங்களும் நடைமுறையில் இருந்து வருவதை நாம் அறிவோம்.

இவ்வாறான இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை எமது சில வாலிபர்கள் பேணத் தவறிய இரு சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். இப்படியான செயல்கள் மாற்று மத சகோதரர்களால் இனவாத செயற்பாடுகளாக நோக்கப்படுவது மாத்திரமன்றி, இதனால் நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. 

சக இனங்களின் தனித்துவ விடயங்கள் தொடர்பாகவும், நாட்டின் புராதன சின்னங்கள் தொடர்பாகவும், அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் எமது சமூகத்தவருக்கு தெளிவுகளை வழங்குவது அவசியமாகும். குறிப்பாக எமது வாலிபர்களுக்கு இது தொடர்பாக வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இது விடயத்தில் சமூகத்தை வழி நடாத்துகின்றவர்கள், பெற்றோர்கள், உலமாக்கள், கதீப்மார்கள், புத்திஜீவிகள்,  பாடசாலை ஆசிரியர்கள் என அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

விஷேடமாக சுற்றுலாக்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் இவ்வாறான இடங்களுக்கு செல்கின்ற போது அவ்விடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அறிந்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரிடமும் வேண்டிக் கொள்கின்றது.

அதே போன்று புராதன சின்னங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய தெளிவான அறிவித்தல் பலகைகளை மும்மொழிகளிலும் இடுமாறு உரிய அதிகாரிகளிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.எ முபாறக்

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

08.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் விஷேட ஒன்று கூடல் ஒன்று மாவட்டக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிம்கள், துறைசார்நதவர்கள், பரோபகாரிகள், சமூக ஆர்வலர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், என பலர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  நாத்தாண்டிய கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான சகவாழ்வு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா