19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஹிங்குல்ஓயா கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதந் போது கிளைக்கான கல்விப் பிரிவு, ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு, சமூக சேவைப் பிரிவு, இளைஞர் விவகாரப் பிரிவு ஆகிய நான்கு உப பிரிவுகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கிண்ணியா கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையின் உப பிரிவுகளுக்கான திட்டமிடல் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிளையின் உறுப்பினர்கள் உட்பட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் கலந்து கொண்டார். இதந் போது மாவட்ட ரீதியில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் தமது பிரதேச பள்ளிவாசல்களின் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம்  கிளையின்  தலைவர் அஷ்-ஷைக் இன்ஸாப் அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுத் தவ்பீகில் நடைபெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

  • பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்றை நடாத்துதல்.
  • வாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
  • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் உலமாக்களுக்கு வழங்கும் அடையாள அட்டையை தமது பிரதேச உலமாக்களுக்கு பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கல்குடா அல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மற்றும் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் "வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி" எனும் தலைப்பில் உலமாக்களுக்கான செயலமர்வொன்று மாதம்பிடிய ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின்  மாதாந்தக்  கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் சியாம் யூசுபி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாதம் மேற் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இம்மாதத்திற்கான வேலைத் திட்டங்களும் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று மல்வானை அல் முபாறக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் லாபிர் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது கிளைகளின் புதிய நிருவகத் தெரிவு சம்பந்தமாகவும், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை புத்தக அறிமுகம் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா