2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மஸ்ஜித்களின் பரிபாலனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வொன்று கண்டி கட்டுக்கலை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம  கிளையின் ஒன்று கூடல் அஷ்-ஷைக் நஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குருநாகல் மாவட்டக்கிளையுடன் இணைந்து சுதந்திர தின நிகழ்வொன்றை நடாத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.01.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தங்களுக்கான பொருத்தமான துறையினை தெரிவு செய்தல் சம்பந்தமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 150இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 2019.01.16 ஆம் திகதி கண்டி மாவட்டக் கிளை மற்றும் வத்தேகெதர, உடதலவின்ன பிரதேச கிளைகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று ஹகீமிய்யா அரபுக் கல்லூரியில் இடம் பெற்றது. இதன் போது கிளைகளின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

2019.01.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாளிகாவத்தை தாருல் ஹஸன் பெண்கள் அரபுக் கல்லூரி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

  • சமூக சேவை பிரிவால் முன்னெடுக்கப்படும் வறிய மாணவர்களுக்கான அறபுக் கிதாபுகள் வழங்கிவைத்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல்பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் கொழும்பு மாவட்ட நான்கு கிளைகளிலும் சமூக ஒற்றுமை புத்தகத்தை மக்கள் மயப்படுத்தல் நிகழ்ச்சிகளை நடாத்ததுதல்.
  • தேசிய வலயமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல்.
  • மோல வத்தையில் சமூக சேவை பிரிவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • யாப்பு திருத்த பிரேரனைகளை தலைமையக்திற்கு அனுப்பி வைத்தல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

2019.01.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது.  இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

13.01.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் ஏற்பாட்டில் "கிண்ணியா மக்களின் மனித நேய நேசக்கரம்" எனும் தொணிப் பொருளில் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் நூலின் அறிமுக நிகழ்வொன்றை குருநாகல் மாவட்டத்தில் நடாத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா