2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

  • NNP நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மஸ்ஜித் ரீதியாக 06 பேர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்.
  • கிளையின் இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பன திட்டமிடலை அவசரமாக பூர்த்தி செய்து அதனடிப்படையில் வேளைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாவடிப்பள்ளி அஷ்ரப் வித்தியாலயத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் பாவா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  மருதமுனைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நடைபெற்றது. இவ்வொன்று கூடலில் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் இமாம்கள், முஅல்லிம்கள் மற்றும் மக்தப்    பிரதிநிதிகள்(MR)  ஆகியோருடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் இன்சாப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

  • NNP நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மஸ்ஜித் ரீதியாக 06 பேர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்.
  • பிரதேச கிளைகளில் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வொன்றை நடாத்துதல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் வெலிமடை ஜுமுஆ மஸ்ஜிதில்  நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதன் போது சென்ற வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் நூல் அறிமுகமும் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மஸ்ஜித் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாட ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மஸ்ஜித்களின் பரிபாலனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா