10.09.2019 / 08.12.1440

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தின் தியாகத்தை பறைசாட்டுகின்ற பெருநாளகவே இத்தியாக திருநாள் அமைந்திருக்கின்றது. இந்த குடும்பத்தின் தியாகம் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். அதனையே நாமும் இத்தினத்தினங்களில்  நினைவு படுத்துகின்றோம்.

“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது" – (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.

பெருநாள் தினத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் மூன்று தினங்களிலும் நிறைவேற்றுகின்ற உழ்கிய்யாவுடைய அமல்களையும் நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களை பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன் வர வேண்டும். இது தொடர்பாக ஜம்இய்யா வழிகாட்டல் ஒன்றை வழங்கியிருக்கின்றது.

சர்வதேச மட்டத்தில் மாத்திரமின்றி தேசிய மட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக பல முயற்சிகள்  நடை பெற்று வருகின்றது. அவற்றை  முறியடிப்பதற்காக இச்சிறந்த தினங்களில் அனைவரும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

அதே நேரம் நாம் எமது பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் உலகலாவிய ரீதியிலும், உள் நாட்டிலும்; சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உண்டாக்க வேண்டுமெனவும் உலகலாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!  ஈத் முபாரக்!

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

08.08.2019 ஃ 06.12.1440

நாடளாவிய ரீதியில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகி நடை பெற்று வருவதை யாவரும் அறிவோம். இப்பரீட்சைக்கு முகம் கொடுக்கின்ற முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாக்களுடன் பரீட்சை எழுத அரசாங்கத்தின் அனுமதி இருந்த போதிலும் நாட்டின் சில பாகங்களில் அதிகாரிகள் இதற்கு இடையூறாக இருந்து மாணவிகளை மன உளைச்சளுக்கு உட்படுத்தியதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது.


இது போன்ற சம்பவங்கள் முன்னைய காலங்களிலும் இடம் பெற்றிருந்த போதும் அதற்கான அனுமதியை பரீட்சைத் திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை நிலைய அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மாணவிகள் மன உளைச்சளுக்கு உட்பட்டு பரீட்சைக்கு ஒழுங்காக முகம் கொடுக்க முடியாத நிலை உருவாகின்றது.


எனவே இவ்விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகரிகள் பொதுவாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாகவும் கூடிய கவனம் செலுத்தி அவசரமாக நிரந்தர தீர்வொன்றை மாணவிகளுக்கு பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்

30.07.2019 ஆம் திகதி நடைபெற்ற சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாட்டிற்கு பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக இலங்கை வருகை தந்த உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்கள் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்.

இதன் போது வரவேற்பு மற்றும் அறிமுக உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் வழங்கினார்கள். இதன் போது ஜம்இய்யா தொடர்பாகவும், ஜம்இய்யாவிற்கும் உலக முஸ்லிம் லீக் அமைப்பிற்கும் இடையிலான உறவு தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்கள் இலங்கையில் ஜம்இய்யத்துல் உலமா ஆற்றி வரும் செயற்பாடுகள் தொடர்பாக தாம் சந்தோஷம் அடைவதாகவும், இதனுல் உள்வாங்கப்பட்டிருக்கும் தலைவர் மற்றும் செயலாளர் உற்பட ஏனைய நிறைவேற்று உறுப்பினர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக நேற்றைய மாநாட்டில் ஜம்இய்யாவின் தலைவரின் சமயோசிதமான, அறிவுபூர்வமான மேலும் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு உட்பட்ட உரையை தான் பாராட்டுவதாகவும், மேலும் இன்று பொதுச் செயலாளர் ஆற்றிய உரை தொடர்பாகவும் தான் சந்தோஷப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பல விடயங்களை குறிப்பிட்ட அவர்கள் ஜம்இய்யாவிற்கும் ராபிதாவிற்கும் இடையே தொடர்ச்சியான தொடர்புகள் அவசியம் என்பதையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் தங்களுடைய வரவு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாட்டில் உங்கள் வருகையை தொடர்ந்து சிறந்ததொரு சூழல் ஒன்று உருவாக தாம் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யா சமாதானத்திற்காகவும் சகவாழ்விற்காகவும் முன்னெடுக்கும் முயற்சிகளை குறிப்பிட்டதுடன் உலகலாவிய ரீதியில்  உலக முஸ்லிம் லீக் அமைப்பு இதற்காக உழைப்பது போல் மேலும் இந்நடவடிக்கைகளுக்கு கைகோர்க்க வேண்டும் என குறிப்பிட்டார். ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கான அவரது வருகைக்கு நன்றி செலுத்தி தனது உரையை நிறவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து  உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்களுக்கான நினைவுச் சின்னமும், ஜம்இய்யாவிற்கான நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மேல்மாகாண ஆளுநர் கௌரவ முஸம்மில் அவர்கள் மற்றும் அரபு நாட்டு பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

ACJU/FTW/2019/12-209

1440.11.20

2019.07.24

குனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகள் ஏற்பட்ட காலங்களில் தொழுகையில் குனூத்துன் நாஸிலாவை (சோதனைகாலப் பிரார்த்தனையை) ஓதியுள்ளார்கள் என்பது பல ஹதீஸ்களிலும் வந்துள்ளது.

எமது நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின் உருவான அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஐவேளைத் தொழுகையிலும் குனூத்துன் நாஸிலாவை ஓதிவருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொண்டது.

தற்போதைய நிலையில் சுமுக நிலை ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் நிலவ, துஆஉல் கர்ப் எனும் துன்ப துயரங்களின் போது ஓதப்படும் துஆக்களை ஆண்கள், பெண்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் தொடர்ச்சியாக ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

துன்ப துயரங்களின் போது ஓதப்படும் துஆஉல் கர்ப்

  • اللَّهُمَّ انْجِزْ لَنَا مَا وَعَدْتَنَا اللَّهُمَّ آتِنَا مَا وَعَدْتَنَا يَاحَيُّ يَا قَيُّوْمُ (صحيح مسلم, مسند أحمد)
  • أَعُوذُ بِكلِمَاتِ الله التّامّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ (سنن الترمذي)
  • بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (سنن ابن ماجه)
  • لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ (متفق عليه)
  • إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ، اللَّهُمَّ أَجِرْنِي فِي مُصِيبَتِي ، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا (صحيح مسلم)
  • حَسْبِيَ اللهُ وَنِعْمَ الوَكِيلُ (سنن أبي داود)
  • لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (سنن الترمذي)
  • اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ (مسند أحمد, وأبو داود)
  • اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ (سنن أبوداود)
  • اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي (مسند أحمد)

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர், பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

13.07.2019 / 09.11.1440

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டம் இன்று 13.07.2019 ஆம் திகதி சனிக் கிழமை காலை 10:00 மணி முதல் தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.

அஷ்-ஷைக் பிர்தவ்ஸ் காரி அவர்களின் கிறாஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. கிறாஅத்தை தொடர்ந்து அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் அவர்கள் வரவோற்புரையை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடந்து பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களால் மூன்றாண்டுக்கான செயற்பாட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் மூன்றாண்டுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்கள். பின்னர் தலைவர் உரை அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இத்துடன் பழைய நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டது.

ஜம்இய்யா சட்டயாப்பின் பிரகாரம் அதனது நிறைவேற்றுக் குழு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஜம்இய்யாவின் மத்திய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

மேற்படி தெரிவின்போது தற்காலிகத் தலைவராக அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.ரிழா மக்தூமி அவர்கள் கடமையாற்றினார்கள். அவர்களுக்கு உதவியாக சட்டத்தரணி அஷ்-ஷைக் அஷ்ரப் நளீமி அவர்களும்; அஷ்-ஷைக் ஹாஷிம் ஷ_ரி அவர்களும் கடமையாற்றினார்கள்.   

மத்திய சபை உறுப்பினர்களான 24 மாவட்டக் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட 101 பேர் அழைக்கப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பின்வரும் 25 பேர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவ்வாறே பதவி தாங்குனர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

1)            அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி                             கௌரவ தலைவர்

2)            அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்                    கௌரவ பிரதித் தலைவர்

3)            அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்                          கௌரவ செயலாளர்

4)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்                               கௌரவ பொருளாளர்

5)            அஷ்-ஷைக்;                எச். உமர்தீன்                   கௌரவ உப தலைவர்

6)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா                               கௌரவ உப தலைவர்

7)            அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்                  கௌரவ உப தலைவர்

8)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்                        கௌரவ உப தலைவர்    

9)            அஷ்-ஷைக்;                எஸ்.எச் ஆதம்பாவா        கௌரவ உப தலைவர்

10)          அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்                        கௌரவ உப செயலாளர்

11)          அஷ்-ஷைக்;                எம்.எஸ்.எம் தாஸிம்        கௌரவ உப செயலாளர்

12)          அஷ்-ஷைக் எம். அனஸ்                                     கௌரவ உப பொருளாளர்

13)          அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்                   கௌரவ உறுப்பினர்

14)          அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில்                       கௌரவ உறுப்பினர்

15)          அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்             கௌரவ உறுப்பினா

16)          அஷ்-ஷைக் அர்கம் நூறரமித்                          கௌரவ உறுப்பினா

17)          அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத்                   கௌரவ உறுப்பினர்

18)          அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸுப்                      கௌரவ உறுப்பினர்

19)          அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்                            கௌரவ உறுப்பினர்

20)          அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்                              கௌரவ உறுப்பினர்

21)          அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்             கௌரவ உறுப்பினர்

22)          அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்                           கௌரவ உறுப்பினர்

23)          அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  கௌரவ உறுப்பினர்

24)          அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்           கௌரவ உறுப்பினர்

25)          அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்                 கௌரவ உறுப்பினர்

 

அல்லாஹுத் தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக!

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்   

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

04.07.2019 (30.10.1440)

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.


உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.


இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான்.


ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும். அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது.


அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றும் பொழுது, மிக நிதானத்துடன் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.


வழமை போன்று, இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்களைப் பேணிக்கௌ;வதுடன், எமது நாட்டில் முறையிலுள்ள மிருக அறுப்பு சம்பந்தமான பிரத்தியேக சட்டங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.


பிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால், வீண் சர்ச்சைகள் எதுவுமின்றி தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை தமது பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் நிர்வாகம் ஏனைய முக்கியஸதர்களுடன் ஆலோசனை செய்து பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும், அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
உழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில் உள்ளவர்கள், அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால், பொருத்தமான பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:


1. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

2. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.
3. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.
4. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
5. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
6. அறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
7. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.
8. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல் சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.
9. நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
10. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
11. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.
12. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.
13. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


பள்ளிவாயல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
வஸ்ஸலாம்

 

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணைய தளமான www.acju.lk  இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.

 

 

03.07.2019
29.10.1440


எமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் மேலும் ஐக்கியமும் ஏற்பட ஐவேளைத் தொழுகையிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருகின்றோம்.


அல்லாஹுதஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல் அமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.


எனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்களைச் செய்து அவன் பக்கம் நெருங்குவதுடன், இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும், சாந்தியுடனும் மேலும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்குப் பிரார்த்தனையும் செய்வோம்.


அத்தோடு ஓதிவரும் குனூத் அந்நாஸிலாவில் பாவமன்னிப்புக் கோருதலுடன் பின்வரும் துஆக்களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.


أللَّهُمَّ إِنَّا نَسْئَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِيْنِنَا وَدُنْيَانَا وَأَهْلِنَا وَمَالِنَا.
أَللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا أَللّهُمَّ احْفَظْنَا مِنْ بَيْنِ أَيْدِيْنَا وَمِنْ خَلْفِنَا وَعَنْ يَمِيْنِنَا وَعَنْ شِمَالِنَا وَمِنْ فَوْقِنَا وَنَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ نُغْتَالَ مِنْ تَحْتِنا.
أَللّهُمَّ آمِنَّا فِي أَوْطَانِنَا وَأَدِمْ نعْمَةَ الْأَمْنِ وَالْإسْتِقْرَارِ فِي بَلَدِنَا.
أَللّهُمَّ مَنْ أَرَادَنَا وَبِلاَدَنَا بِسُوْءٍ فَأَشْغِلْهُ بِنَفْسِهِ وَاجْعَلْ كَيْدَهُ فِي نَحْرِهِ.
أَللّهُمَّ الْطُفْ بِعِبَادِكَ يَا رَحِيْمُ وَاحْفَظْهُمْ وَاكْشِفْ غَمَّهُمْ وَاحْقِنْ دِمَائَهُمْ وَاحْفَظْ مَسَاجِدَهُمْ وَأَمْوَالَهُمْ.
أَللّهُمَّ احْفَظْ سِرِيْلاَنْكَا وَأَهْلَهَا وَاجْعَلْهَا فِي أَمَانِكَ وَضَمَانِكَ وَإِحْسَانِكَ.
أَللّهُمَّ انْجِزْ لَنَا مَا وَعَدْتَنَا أَللّهُمَّ آتِنَا مَا وَعَدْتَنَا يَاحَيُّ يَا قَيُّوْمُ.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா