02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அர்க்ம் ஜுனைத் அவர்களின் தலைமையில் கிரிங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் சூடுவந்த புளவு மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் கிளைக்குற்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஜம்இய்யாவின் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுருத்தி ஆலோசனைகள் செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளை மற்றும் கண்டி நகர பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின்  ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் கண்டி மீரா மக்காம் மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வும், சிரமதானமும் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டானிச்சூர் பிரதேசக் கிளை உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், கிராமிய அபிருத்திச் சங்கங்கள், விழையாட்டுக்கழகங்கள் மற்றும்  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு கிளையின் அலுவலகத்தில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெலிமடைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு வெலிமடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு தோப்பூரில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வும், சிரமாதான நிகழ்வும் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.02.01
எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது.


நம் தாய் நாட்டுக்கு இந்த சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ தலைவர்கள் ஒன்றிணைந்து இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியாக உணர்வோடு ஒற்றுமையாக செயற்பட்டனர். இப்படியாக செயற்பட்டவர்கள் நமது சுதந்திர தின நிகழ்வுகளில் ஞாபகம் செய்யப்படுவது கட்டாயமாகும்.


அதே நேரம் எமது முன்னோர்கள் இன, மத, பேதங்களை களைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதைப் போன்று நாமும் இன, மத மற்றும் அரசியலிற்கு அப்பாற் சென்று தாய் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட முன் வர வேண்டும் என நாட்டின் அனைத்து மக்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.


குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எமது முன்னோர்களான டீ.பி ஜாயா, சேர் ராஸிக் பரீத் போன்றோரின் முன்மாதிரிகளை கடைபிடித்து நாட்டிற்காக தம்மை அர்பணிப்பவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.


பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு என்றும் செழிப்புடனும், அபிவிருத்தியுடனும் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிராத்தனைகளுமாகும். ஒரு நாட்டின் அபிவிருத்தியும், செழிப்பும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலும்;, நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதை ஜம்இய்யா ஞாபகம் செய்து கொள்ள விரும்புகின்றது.


எனவே இந்நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் அனைத்து இன மக்களும் ஒரு தாய் பிள்ளை போல் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது. அதே போன்று நம் நாடு சகல வளமும் பொருந்திய ஐக்கிய இலங்கையாக மிளிரப் பிராத்திக்கின்றது.


எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா