2021.12.02 (1443.04.26)

 

முஸ்லிம் எய்ட் சர்வதேச நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சகோதரர் காஷிஃப் ஷாபிர் அவர்கள் நேற்று (2021.12.02) ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொன்டார். இச்சந்திப்பின் போது முஸ்லிம் எய்ட் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இடையில் இருக்கும் ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, இந்நாட்டில் மனித நேய உதவிகளை மேற்கொள்வது பற்றியும் சகவாழ்வை கட்டியெழுப்புவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 

இக்கலந்துரையாடலில் முஸ்லிம் எய்ட் சார்பில் அதன் சர்வதேச நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சகோதரர் காஷிஃப் ஷாபிர் அவர்களுடன் அதன் இலங்கைக்கான பணிப்பாளர் சகோதரர் ஃபைஸர் கான் அவர்களும் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஜம்இய்யா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், உதவிப் பொருளாளர் கலாநிதி அஷ்-ஷைக் அஸ்வர் அஸாஹிம் அஸ்ஹரி, அஷ்-ஷைக் எம்.எப்.எம். பர்ஹான், அஷ்-ஷைக் பவாஸ், அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் அஷ்-ஷைக் பஹத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

ஊடகப் பிரிவு