2021.09.01 (1443.01.22)அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அங்கத்தவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. அவ்வடிப்படையில் ஜம்இய்யாவின் அங்கத்துவத்தை பெற்ற ஆலிம்களின் விபரங்கள் புதுப்பிக்கப்பட்டு, அதற்கான ஒரு மென்பொருள் (Software) தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவம் பெற்றுள்ள ஆலிம்கள் பின்வரும் இணைப்பினூடாக தங்களது விபரங்களை எதிர்வரும் 2021.09.10 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இணைப்பு:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMD9ei3LIAB4gbWVHN_06u0UnB7cChDDJ_qkr6iBRahuVh6A/viewform

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

Covid-19 யினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக விஷேட வழிகாட்டல் நிகழ்வொன்று ZOOM ஊடாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினால் 2021-08-26 ம் திகதியன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணி முதல் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட ஜம்இய்யாவின் மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளினது தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஏனைய உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

 

2021.08.18

 

எதிர்வரும் தாஸூஆ, ஆஷூரா நோன்பு நோற்பது பற்றியும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாகவும் விஷேட வழிகாட்டல் நிகழ்வொன்று ZOOM ஊடாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினால் 2021-08-17 ம் திகதியன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணி முதல் நடாத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளினது தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஏனைய உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

2021.05.20

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

 

இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்களும் பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்களது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் நம் நாட்டு பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தனது கரிசனையை தெரிவித்திருப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணம் பாலஸ்தீன தூதரகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

இப்பிரச்சினை அவசரமாக நீங்கி, அம்மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க பிரார்த்திப்போம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Ref: ACJU/NGS/2021/053

2021.04.13 (1442.08.30)

السلام عليكم ورحمة الله وبركاته

 


'யா அல்லாஹ், இந்தப் பிறையை பாதுகாப்பைக் கொண்டும், நம்பிக்கையைக் கொண்டும், ஈடேற்றத்தைக் கொண்டும், சாந்தியைக் கொண்டும் தோன்ற வைப்பாயாக. (சந்திரனே!) உன்னுடைய இரட்சகனும், என்னுடைய இரட்சகனும் அல்லாஹ் ஆவான். இந்தப் பிறை வழிகாட்டலையும், நல்லதையும் கொண்டு வர வேண்டும்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
சங்கையான மாதமான ரமழான் உங்களிடம் வந்துள்ளது. அதில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நோன்பு நோற்குமாறு உங்களை கட்டளையிட்டுள்ளான். அம்மாதத்தில் சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு அனைத்து ஷைத்தான்களும் சங்கிலியிடப்பட்டுள்ளன. அதில் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை வைத்திருக்கின்றான். எவர் அதன் நன்மையை இழக்கின்றாரோ உண்மையில் அவர் இழக்கப்பட்டவராவார்.


இந்தப் புனிதமான மாதத்தில் நாம் நோய்வாய்ப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டுள்ள, ஒடுக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ் மிகவும் நீதியானவனும் மிக்க கருணையாளனும் ஆவான்.


இந்தப் புனித மாதத்தின் அருள்களை எல்லோருடனும் கருணை மற்றும் தாராள மனப்பான்மையுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உண்மையிலேயே, ஒருவன் தனக்காக நேசிப்பதை தனது சகோதரனுக்காக நேசிக்கும் வரை அவனுடைய ஈமான் முழுமையடையமாட்டாது.


இந்த ஆண்டு பிரயோசனமான முறையில் ரமழானைப் பயன்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எமக்கு உதவி புரிவானாக.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Ref: ACJU/PRE/2021/003

2021.03.12 (27.07.1442)அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக மதிப்பிற்குரிய அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் ஹஸ்ரத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கடமையாற்றியமை நாம் அறிவோம். அவரின் வபாத்தை தொடர்ந்து ஏற்பட்ட இவ்வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கடந்த 2021.03.06 ஆம் திகதியன்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதை சகலருக்கும் அறியத்தருகிறோம்.

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா