69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி!

பிப் 03, 2017

2017.02.03

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி


எமது தாய் நாடான இலங்கை சுதந்திரமடைந்து 69 ஆண்டுகளைத் தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது.

இந்நாட்டில் இனவாதத்தை தோல்வியுறச் செய்ய அனைத்து இலங்கையரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் நாம் ஒவ்வொருவரும் சமாதானத்தோடும், சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். இனவாதத்தை தோல்வியுறச் செய்யாமலும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்பாமலும் ஒருபோதும் எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியாது.

பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும் அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டுமெனில் அவரவர் சமயப் போதனைகளைக் கடைப்பிடிப்பதுடன், பிற சமயத்தவரை மதிக்கும் பண்பு வளர்க்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளுமாகும்.
எனவே இந்நாட்டில் ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றைக் கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு, நம்பிக்கை என்பன மூலம் சமாதான இலங்கையைக் கட்டியெழுப்பி சகலரும் நல்வாழ்வு வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 26 ஏப்ரல் 2017 12:54

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.