10.12.1436 / 24.09.2015
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
மகிழ்ச்சிப் பிரவாகத்தால் உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் தக்பீர் முழங்கும் தியாகத்திருநாள் இன்றாகும். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் கூறியமைக்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த இன்னல்கள் எத்தனையெத்தனை? தான் கொண்ட நம்பிக்கையின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்த தியாகங்கள் எத்தனையெத்தனை? உலகம் உள்ளவரை நினைவுபடுத்தப்படும் இவை மனித சமூகத்துக்கு முன்மாதிரிகளாகும். அதனையே நாமும் நினைவு படுத்துகின்றௌம்.
இத்தியாகத்திருநாளில் எமது விசுவாசத்துக்கு உரமூட்டிக்கொள்ளவும் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தியாக உணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
மேலும் இத்தருணத்தில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. ஒற்றுமையெனும் கயிற்றைப் பிடித்து தீன்பணியில் ஈடுபடுவோமாக.
“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது" - (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக! மேலும் எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக!
தகப்பலல்லாஹு மின்னாவமின்கும்! ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா